Saturday 24 December 2011

புலிகளை ஈழப் போரில் காட்டிக் கொடுத்தவர்கள் கொண்டாட்டங்களில் பங்கேற்கப்பதில்லை.நடிகர் ஜீவா


கருணாவால் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் பங்கேற்கப்போவதில்லை என ஜீவா அறிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுவிட்சர்லாந்தில் நடக்கவிருக்கும் புத்தாண்டு விழாக் கொண்டாட்டங்களில் நடிகை சங்கீதா, அவரின் கணவரான பாடகர் கிரீஷ் ஆகியோருடன் நடிகர் ஜீவாவும் பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் இந்த விழாவினை நடத்துபவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளை ஈழப் போரில் காட்டிக் கொடுத்தவர்கள் என்பதால், உள்ளூர் கட்சிகள் உட்பட சர்வதேசத்தில் உள்ள தமிழ் அமைப்புகள் ஜீவா உள்ளிட்ட நடிகர்களுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்தே தான் இந்த விழாவில் பங்கேற்கவிருந்த திட்டத்தினை ரத்துச் செய்துள்ளதாக ஜீவா தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"எனக்கு தமிழர் நலன்தான் முக்கியம். தமிழர் விரும்பாத எதையும் நான் செய்ய மாட்டேன். எனவே எனது வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்து விட்டேன்," என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சைப்புள்ளிகள் வெளியீடு.!-நத்தாருக்கு புள்ளிகள் இலவசமாகுமா.?


கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளின் பெறுபேறுகள் இன்று காலை வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அநுர எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு மற்றும் ஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் இன்று காலை 10 மணி முதல் பெறுபேறுகளை பத்தரமுல்லையில் அமைந்துள்ள பரீட்சைகள் திணைக்களத்தில் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய வெளிமாவட்டப் பாடசாலைகளுக்கான பெறுபேறுகளும் இன்று தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இணையத்தளத்தில் வெளியிடப்படவுள்ள பரீட்சை பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தள முகவரியினூடாக பார்வையிட முடியும்.

உயர் கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களத்திற்கு புதிய, பழைய பாடத்திட்டங்களுக்கமைய இசட் புள்ளிகளை இடுவது தொடர்பில் ஏற்பட்ட குழப்பங்களினாலேயே இதுவரை பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நன்றி-

தமிழீழமண்ணின் உதயன்.

இன்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் 24-வது ஆண்டு நினைவு தினமாகும்


1970 களில் சினிமா உலகையும், தமிழக அரசியல் உலகையும் திரைப்படத்துறையில் தனக்கென ஒரு பாதையை வகுத்துக் கொண்டு மன்னாதி மன்னனாக வலம் வந்தவர் எம்.ஜி.ஆர். என்கிற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன் ஆவார்.

1977-ல் அ.தி.மு.க. என்ற கட்சியை ஆரம்பித்து ஆட்சியைப் பிடித்தவர் எம்.ஜி.ஆர். இதே தேதியில் கடந்த 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் இயற்கையோடு கலந்து போனார்.

இன்று அவரது 24-வது நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இலங்கையில் உள்ள கண்டியில் எம்.ஜி.ஆர் பிறந்தார். தந்தையை இழந்த பிறகு தாயார் சத்தியபாமாவின் அரவணைப்பில் வளர்ந்தார்.

எம்.ஜி.ஆர். தனது 7வது வயதில் நடிப்புத் துறையில் காலடி எடுத்து வைத்தார். எம்.ஜி.ஆர் ஆட்சிக் கட்டில் ஏறிய வருடம் 1977 ஆகும். எம்.ஜி.ஆர் மறைந்த வருடம் 1987 ஆகும். சினிமா உலகில் மட்டுமின்றி அரசியல் உலகிலும் முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.ஜி.ராமச்சந்திரன் 24.12.1987 ல் மறைந்தார்.

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் பிரிவு தலைவர் கைது!கொழும்பு ஆங்கில நாளிதழ்


தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறையின் கொழும்பு பிரிவின் தலைவர் உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்கள் தீவிரவாத தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.பிரதான சந்தேகநபர் தெமட்டகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாகவும், அப்போது சயனைட் உட்கொண்ட அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டதாகவும் தீவிரவாத தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் இலங்கை பொலிஸாரின் முன்னாள் கண்காணிப்பாளரும் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தற்கொலைத் தாக்குதல் மூலம் கொலை செய்வதற்கு மூன்று திட்டங்களை கொண்டிருந்ததாகவும், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பலரையும் கொலை செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும் விசாரணைகளின் போது அவர்கள் கூறியதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ளது.

இலங்கை அமைச்சர் ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே மற்றும் அமைச்சர் மகிந்த விஜேசேகர ஆகியோர் மீதான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு இவர்களே திட்டமிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

இயேசு பிறந்த நாளில் நினைவேந்தல் தந்த மாவீரனுக்கு வீர வணக்கம்.!


இயேசு பிறந்த நாளில் மறைந்தார் மாமனிதார் யோசப்பரராசசிங்கம்-ஆய்வு நினைவேந்தல்கட்டுறை.

அன்பும் அறமும் தன்னீய்கையும் கொண்ட தெய்வ மகன் பிறந்த நாளாகிய யேசு எமக்காய் பாவங்களையும் இந்த மானிட குற்றங்களுக்கு பாவ மன்னிப்புக்களை அவசியப்படுத்தி இந்த உலகில் மனித இனத்தவர்கள் அனைவருக்கும் அன்பின் வளியில் இறைமையாக செல்ல வேண்டும்.

என்பதை எளிதான முறையில் காண்பிக்க உதித்த தந்தைதான் எங்கள் யேசுபிரான்.
இந்த புனிதமான நாளில் புனிதங்களை சிதைக்கவும் மதங்களையும் மத தலங்களையும் நசுக்கி அரக்கத்தனமாகன முறையில் நடந்த இனப்படுகொலை நடந்த நாளில் இயேசு பிறக்கின்றான் இங்கே உயிர்கள் நரபலி எடுக்கின்றது அரக்கத்தனவாதிகள்.
இந்த நாளில் தான் இரவுத் திருப்பலியிற் கலந்து கொண்ட தமிழ்த் தேசியக்கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர் திரு.ஜோசப் பரராசசிங்கம் அவர்கள் திருப்பலியில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்டார். இவரின் மனைவியுட்பட மேலும் எழுவர் காயமடைந்தனர். இவர் தீவிர விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்று அறியப்படுபவர்.

தன் நண்பர்களுக்காகத் தன் உயிரையும் தருபவனிடமுள்ளதை விடவும் மகத்தான அன்பு வேறெவரிடமும் இருக்க முடியாது.

பைபிளின் மிகவும் அழகிய இந்த வாசகத்திற்கு மிகப் பொருத்தமான ஒரு மனிதர் மறைந்த திரு.ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள். அதனாற் தான் தேசியத்தலைவரால் மாமனிதர் என்ற விருதும் அவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
மண்ணையும் மக்களையும் நேசித்த ,குறிப்பாக ஆக்கிரமிப்பாளரின் கொடுமைகள் மிகுந்த தென்தமிழீழத்தின் வாழ்விலும் தாழ்விலும் பங்கெடுத்த ஒரு நல்ல ஆன்மாவின் துடிப்பு ஆயுதமுனையில் அடக்கப்பட்டிருக்கிறது.தேசத்தை நேசிப்பவர்களுக்கு மரணத்தைப் பரிசாகக் கொடுப்பது காலகாலமாக இங்கே நடந்துவருகின்றதெனினும் ஜோசப் பரராஜசிங்கத்தின் பலியெடுப்பிற்கு ஆக்கிரமிப்பாளர்கள்; குறித்த நாள், மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த நாள்.

அவரின் பலியெடுப்பிற்கு அவர்கள் குறித்த இடம் தேவனின் திருச்சபை. தமிழினத்தின் அழிவொன்றையே நித்தம் உருப்போடுவதைத் தவிர வேறெந்த சிந்தனையும் அற்றவர்களால் தான் இந்த ஈனச்செயலை அதுவும் இவ்வாறான ஒரு நாளிற்; செய்யமுடியும். விடுதலைப்புலிகளின் முக்கிய பிரமுகர் க.வே. பாலகுமாரன் சொன்னது போல் இத்தகைய ‘விழி திறக்காதவர்களுக்காக திரு. ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’.

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்பத்திரிகையாளனாகத் தொடங்கி தமிழபிமானத்தால் அரசியல்வாதியாகி, வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெறுகின்ற மனிதஉரிமை மீறல்களை வெளியுலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் என்ற வகையில் அரசின் கவனிப்பைப் பெற்றவர் திரு.ஜோசப் பரராஜசிங்கம். தமிழரசுக்கட்சி,தமிழர் விடுதலைக்கூட்டணி என்று தனது அரசியற்பணியை ஆரம்பித்து ஆயதப்போராட்டம் முனைப்புப் பெற்ற இன்றைய காலம்வரை பல தசாப்தங்களைக் கண்டவர்.

இன்றைய நெருக்கடியான சூழலில் ஆங்கிலப் புலமை வாய்ந்த திரு.ஜோசப்பின் குரலை நிறுத்துவது சம்பந்தப்பட்டவர்களுக்கு மிகமிக அவசியமானதொன்றாக இல்லாவிடின் கிறிஸ்துமஸ் தினத்தையும் புனித மரியாள் தேவாலயத்தையும் கொலைக்காகத் தேர்வு செய்திருக்கமாட்டார்கள். ஒரு பாராளுமன்ற ஜனநாயக வாதியாகவும் மனித உரிமைகள்வாதியாகவும் பார்க்கப்பட்ட திரு.ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உலக நாடுகளோ, சர்வதேச அமைப்புகளோ நாம் அறிந்த வரையில் அனுதாபமோ கவலையோ வெளியிடவில்லை.

கதிர்காமர் கொலையையடுத்து வெறும் அனுமானங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு விடுதலைப்புலிகளுக்கெதிராகத் தடைகளைக் கொண்டுவர முயற்சித்த சர்வதேச அபிப்பிராயம், கருணை வழியவேண்டிய நாளொன்றில் காவு கொள்ளப்பட்ட உயிரை ஏன் கண்டுகொள்ளவில்லை?

ஜனநாயகப் பண்புகளுக்கமைய நாடாளுமன்றம் சென்று அடிவாங்கிய வரலாறு தமிழினத்திற்கு நிறையவே உண்டு.காலிமுகத்திடலில் அமைதியாகக் கூடிய சத்தியாக்கிரகிகள் மீது தடியடிப்பிரயோகம் செய்ததிலிருந்து மாமனிதர் குமார் பொன்னம்பலம் படுகொலை செய்யப்பட்டது வரை நடந்தேறிய அட்டூழியங்களையெல்லாம் மேற்குலகம் காணவில்லையா?

ஜனநாயகஆட்சியின் பண்புகளில் ஒன்றென மேற்குலகம் கூறும் கருத்துச் சுதந்திர உரிமை தமக்கும் உண்டென நம்பி உண்மைகளை வெளிக் கொணரப் பாடுபட்ட நடேசன், நிமலராஜன்,மாமனிதர் சிவராம் போன்றோரின் படுகொலைகளை மேற்குலகம் அறியவில்லையா?

குறிப்பாக தராக்கி சிவராம், குமார் பொன்னம்பலம் போன்றோர் மேற்குலகின் பார்வைப்பரப்புள் வரும் கொழும்பைத் தளமாகக் கொண்டது மேற்குலகின் மீது கொண்ட நம்பிக்கையாலல்லவா?

ஆந்த நம்பிக்கை மீது மண்விழவில்லையா? இவை யாவற்றிலிருந்தும் புலப்படும் உண்மை: விடுதலை கோரிப் போராடும் இனம் தனிமைப்படுத்தப்படும்;;உலகின் அக்கறை கோரி அவர்கள் எழுப்பும் குரல் யாருமற்ற வனாந்தரத்தில் ஒலிக்கும் தீனக்குரலாகி ஓயும்; என்பதே.

மீண்டும் மீண்டும் உணர்த்தப்படும் இந்த உண்மைகள் திரு. ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை மூலம் மீள அரங்கேறியுள்ளன.

மணலுள் தலை புதைத்த தீக்கோழிகளாய் உண்மையான களநிலையைக் காணமறுக்கும் அல்லது மறக்கும் சர்வதேச அபிப்பிராயம் குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு மண்ணுக்காய் மரித்தவர்களின் அபிலாசைகளைக் கணக்கிலெடுத்து முன்னகர்வதே நாம் அவர்களுக்குச் செய்யும் இதயபூர்வமான அஞ்சலியாகும்.

இந்த தெய்வ மகாத்மாவுக்கு தேசியத் தலைவரின் மாமனிதர் விருது
வளங்கப்பட்டது.இந்த விருது உலகப்பதிவில் பார்வைக்காக ஆங்கலப்பதிவு..

———-
Joseph Pararajasingam-மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கம்.

————————–————————
LTTE confers “Maamanithar” title to Pararajasingham
[TamilNet, Sunday, 25 December 2005, 15:17 GMT]
Leader of Liberation Tigers of Tamil Eelam, Velupillai Pirapaharan, bestowed the title Maamanithar (Great Humanbeing) on the slain Senior Parliamentarian Joseph Pararajasingham Sunday. “Steadfast and honest, he is an excellent political leader. The Tamil people affectionately hailed him as a formidable fighter for human rights. His extra-ordinary attachment to the Tamil cause gravitated all towards him. The demise of Mr.Joseph Pararajasingham is an irreparable loss to the Tamil Nation,” Pirapaharan said in the statement conferring the award.

Full text the letter conferring the Maamanithar title follows:

Head Quarters
Liberation Tigers of Tamil Eelam
Tamil Eelam
25 December 2005

The Tamil Nation has lost today a noble man who sacrificed personal ambitions and set a goal working resolutely for the welfare of his people. Silenced today is a voice that relentlessly resonated the freedom of the Tamil homeland and its people. A great man had fallen victim to the enemy’s cowardly act of cruelty. It is a great tragedy in the history of the Tamil Eelam freedom struggle.

Mr.Joseph Pararajasingham is a person blessed with rare and incredible qualities. Melodious interaction, simple manners and magnanimity in approach are the hallmarks of his personality. Steadfast and honest, he is an excellent political leader. The Tamil people affectionately hailed him as a formidable fighter for human rights. His extra-ordinary attachment to the Tamil cause gravitated all towards him. The demise of Mr.Joseph Pararajasingham is an irreparable loss to the Tamil Nation.

It was never to his liking to live under Sinhala Budhdhist majoritarian oppression. He totally detested the disintegration of the collective Tamil Nation under this oppression and subjugation. Setting as his noble goal absolute freedom from this oppressive state, he worked for the independence, dignity and peaceful life of the Tamil people. Motivated by this noble goal, he steadfastly supported the Tamil National freedom struggle. Respecting and accepting wholeheartedly the Liberation Tigers of Tamil Eelam and their goal, he contributed immensely to the liberation struggle of the Tamil people. Complex situations, threats and dangers did not deter him from courageously extending his helping hands to Tamil Nationalism and the Tamil Eelam liberation struggle in many ways.

As a Member of Parliament representing the people of Batticaloa and a founder member of the NorthEast Secretariat on Human Rights, he worked relentlessly in pursuit of the rights of the people of Tamil Eelam. Presenting the truth and reasonableness of the Tamil Eelam liberation struggle to the world, was a mission he undertook with passion. The yeoman services he rendered are praiseworthy and of historical significance.

Respecting Mr.Joseph Pararajasingham’s patriotism and love of freedom and to honour his contribution to the freedom struggle, I confer on him with pride the highest National Award of “Great Man”. Death never destroys noble men who lived to uphold truthful goals. Mr.Joseph Pararajasingham will live forever in the psyche of the Tamil Nation as an epoch making leader.

V.Pirapaharan
Leader,
Liberation Tigers of Tamil Eelam.
மனித உணர்வுகளுக்கும் மனிதாபின எண்ணங்களுக்கும் தன்னை அர்பணித்த மாமனிதருக்கும் அன்றய தினத்தில் மரணத்த அனைத்து உயிரினத்தவர்களுக்கும் எமது இணையத்தளங்கள் சார்பிலும் விடுதலைப்புலிகள் சார்பிலும் வீர வணக்கமும் இயத பூர்வஅஞ்சலிகளைத்தெருவிக்கின்றோம்.

நன்றி-நிழல்படங்கள் மற்றும் கட்டுறைத்தொகுப்பு-
http://eelamaravar.blogspot.com/.

அனைவரும் பகிரலாம்- இவை பொதுவுடமைப்பதிப்பாகும்.!!!

போராளி போட்ட புதிய பாதை!


சினிமா செய்திகளை முடிந்தமட்டும் தவிர்க்கவே நினைக்கிறோம்; ஆனாலும், அத்தி பூத்தார் போல் சில நிகழ்வுகள் கோடம்பாக்கத்தில் நடக்கிற போது, அதனை பெருமகிழ்வோடு பகிரத் தோன்றுகிறது. அந்த ரகத்தில் ஒன்றுதான் போராளி படமும்.
'இலங்கைக்கு விநியோக உரிமை கொடுக்க மாட்டேன்' என தைரியமாக சொன்ன போதே சசிகுமாருக்காக தலை வணங்கத் தோன்றியது. ஈழத்துக்காக குரல் கொடுப்பவர்களின் உணர்வையும் உழைப்பையும் நாம் ஒருபோதும் குறைத்து மதிப்பிடுவது இல்லை. ஆனாலும், குரலில் காட்டும் உறுதியை செயலில் காட்ட மறுக்கிறார்களே என்கிற ஆதங்கம் எப்போதும் நமக்கு உண்டு. அப்படியிருக்க, ஈழம் குறித்து வெளிப்படையாக வாய்வீரம் காட்டாது இருந்த இயக்குனர் சசிகுமார் தமிழ் சினிமாவின் முன்னோட்ட முயற்சியாக இலங்கைக்கு விநியோக உரிமையை மறுத்து அளித்திருந்த பேட்டி, நம்மை ஆச்சரியபடுத்தியது உண்மை. உணர்வு மிகுந்த தமிழ் படைப்பாளிகள் அதனை தொடர வேண்டும் என்பது எமது பிரார்த்தனை.

சரி, படத்துக்கு வருவோம்... எப்படி இருக்கிறான் போராளி?
சொந்த பந்தங்களால் துரத்தப்படுகிற ஒருவனின் கதை. சொத்துக்காக எதையும் செய்யத் துணிகிற சொந்தங்கள்... மனநிலை தவறியவனாக ஒருவனை சித்தரித்து செய்கிற கொடுமைகள்... அதிலிருந்து அவன் எப்படி மீள்கிறான்? மற்றவர்களையும் எப்படி மீட்கிறான்? இதுவே கதைக்கான களம். அதனை சசியும் சமுத்திரகனியும் கையாண்டு இருக்கும் விதம்... அட!

சசிகுமார் திரையில் தெரிகிற போது எல்லாம் கைதட்டல் கிளம்புகிறது... அடுத்தடுத்த படங்களை சசி மிக கவனமாக தேர்வு செய்ய வேண்டும். அந்த கைத்தட்டல் சில சூப்பர் ஸ்டார்களுக்கு மட்டுமே வாய்த்தது. நம்மில் ஒருவனாக கிளம்பி வந்திருக்கும் சசிக்கு எப்படி இந்த கைத்தட்டல்? இளைய தலைமுறைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக அவர் அள்ளித் தெளிக்கும் அறிவுரைகள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. மற்றவர்கள் பேசி இருந்தால் நிச்சயம் தியேட்டரிலேயே கிண்டல் கிளம்பி இருக்கும்.

வாழ்கையின் போக்கை இலகுவாக காட்சிப்படுத்தி இருக்கிறார் சமுத்திரகனி. கையில் கிடைத்த கடைசி ஆயுதமாக சசியை பயன்படுத்தி இருக்கிறார். நிஜ வாழ்வில் நிறைய காயப்பட்டு இருப்பார் போலும். கதை, வசனம் எழுதிய போதே படத்தின் வெற்றி உறுதி என கனி நினைத்து இருக்கலாம். அந்த அளவுக்கு எந்த இடத்திலும் வேகம் குறையாத திரைக்கதை. அதில், வாழ்வியல் சிரமங்களையும், வதைப்புகளையும் கோர்வைப்படுத்தி இருக்கும் விதம் நம்மை கண்கலங்க வைக்கிறது. சசியை கட்டித் தூக்கிக் கொண்டு போகும் காட்சியில் தலைகீழாக தொங்குகிறது ரசிகனின் மனம்.

மிக வீரியமான கருத்துக்களை போகிற போக்கில் தூவிவிட்டு போவது அசாத்தியம்! ஒருவனின் மனதில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதுதான் இன்றைய சமூகத்துக்கு அவசியமானது. அதனை செவ்வனே செய்து இருக்கிறான் போராளி.

தலைப்புக்கும் படத்துக்கும் என்ன சம்பந்தம் என்கிற கேள்வியை மீடியாக்கள் சில வலிந்து கேட்டு இருக்கின்றன. படத்தின் முதல் வசனத்திலேயே அதற்கு பதில் இருக்கிறது. தாமதமாக சென்றவர்களுக்கு, சிலோன் பரோட்டா வசனம் மட்டும் போதும்... காரணம், நகைச்சுவை என்கிற பெயரில் சிலோன் என்கிற அரக்க சக்தியின் கன்னத்தில் அரை விட்டிருக்கும் சசி, நிச்சயம் களத்தில் நிற்கிற போராளிக்கு நிகரானவர்தானே..

சரி... போராளி படத்துக்கு இத்தனை நாட்கள் கடந்து ஏன் இந்த பாராட்டு என நீங்கள் கேட்கலாம்? போராளி படத்தை பாராட்டுவது அல்ல நம் நோக்கம். போராளி போட்டிருக்கும் இலங்கைக்கு எதிரான பாதையை இதரத் தமிழ்ப் படைப்பாளிகளும் பின்தொடர வேண்டும் என்பதே நம் வேண்டுகோள். போராளிக்கு அடுத்தபடியாய் இலங்கைக்கு விநியோக உரிமை கொடுக்க மாட்டேன் என எந்தத் தமிழன் சொல்கிறானோ... அவனே இரண்டாவது போராளி!

விடுதலை வரலாற்றில் மூத்த உறுப்பினர் லெப். கேணல் அப்பையா அண்ணா நினைவு சுமந்து....

1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் களத்தில்- என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

எமது இயக்கத்தின் மூத்த அங்கத்தவர்களுள் ஒருவரான லெப். கேணல் அப்பையா அவர்களின் வீரச்சாவுச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. 24. 12. 1997 அன்று மல்லாவிப் பகுதியில் காணாமல் போயிருந்த அவருக்கு நேர்ந்த கதியறியாது இன்றுவரை எமது தேசம் தவித்திருந்தது.

அது ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் சிங்களப் படைகள் வன்னியில் அகலக் கால் பதிந்திருந்த நேரம். வயதால் முதிர்ந்து நோய்களால் தளர்ந்து போயிருந்த அப்பையா அண்ணனை சிறீலங்காப் படைகளின் கைக்கூலிகள் கடத்திச் சென்றுவிட்டனர். அன்றிலிருந்து அவரைத்தேடி எங்கும் வலைவிரித்திருந்தோம்.அப்பையா அண்ணா எமது இயக்கத்தின் ஆரம்பகாலச் செயற்பாடுகளின் சாட்சியாக இருந்தவர். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் எமது இயக்கம் வாழ்ந்த காலங்களில் எமது போராளிகளுக்குப் பெரும் பலமாக இருந்து செயற்பட்டவர்.

அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட்ட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர். அன்றைய நாட்களில், இளையவர்களாகிய எமது போராளிகளினிடையே வயது முதிர்ந்தவரான அப்பையா அண்ணை, சிங்களப் படைகளின் கண்களில் மண்ணைத் தூவி எமது தலைவர் உட்பட்ட ஆரம்பகாலப் போராளிகளைக் காத்துவந்தார். தாக்குதல்கள் மற்றும் ஏனைய தேவைகளுக்கான நகர்வுகளுக்குத் தேவை யான வாகனங்களை மக்களிடமிருந்து ஒழுங்கு செய்து, எவரும் சந்தேகம் கொள்ளாதவாறு போராளிகளுக்குரிய தங்ககங்களை ஒழுங்கு செய்வதென அன்றைய காலங்களில் முக்கியத்துவமான பணிகளை மூத்த போராளியான அப்பையா அண்ணை ஆற்றினார்.

1982 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் பொன்னாலைப் பாலத்தில் வைத்து சிங்களப் படையினர் வாகனம் ஒன்றின்மீது எமது போராளிகளால் கண்ணிவெடித் தாக்குதல் ஒன்று நடாத்தப்பட்டது.ஆனால் தாக்குதலுக்கிலக்கான எதிரி வாகனம் மயிரிழையில் தப்பித்துவிட்டது. தப்பித்துக்கொண்ட எதிரிகள் எமது போராளிகளைத் துரத்தியபடி அவ்விடத்தைச் சூழவும் சல்லடை போட்டனர். தாக்குதலுக்காகப் பயன்படுத்தப்பட்ட மின் பிறப்பாக்கி எதிரியின் கையில் சிக்கிவிட்டது. அதை வல்வெட்டித்துறையிலுள்ள கடையொன்றில் கொள்வனவு செய்திருந்த இராசையா என்ற அப்பையா அண்ணை அன்றிலிருந்து யாழ்ப்பாணம் எங்கணும் பிரபல்யமாகத் தேடப்பட்ட ஒருவரானார்.

1983-ஆம் ஆண்டு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருநெல்வேலித் தாக்குதலில் பங்குபற்றிய போராளிகளுள் அப்பையா அண்ணையும் ஒருவர். தமிழர்களின் விடிவிற்கான போரின் படிக்கட்டாக அமைந்த அந்தக் கண்ணிவெடியின் பொறிமுறைகளைச் சரிபார்த்து செல்லக்கிளி அம்மானின் கைகளில் ஒப்படைத்திருந்தவர் அவர்தான். அந்த வரலாற்றுத் தாக்குதலின் நினைவுகளை மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் களத்தில்- என்ற ஏட்டில் எழுதியிருந்தவற்றை மீட்டிப்பார்பது இங்கு பொருத்தமாக இருக்கும்.

* 1983ம் ஆண்டு யூலை மாதம் 23ம் நாள் இரவு 11. 00 மணியளவில் யாழ் திருநெல்வேலியில் வைத்து சிறீலங்காப் படையினர்மீது ஒரு கண்ணிவெடித் தாக்குதலை நடத்தவென குறிப்பிட்ட வாகனமொன்றில், தேசியத்தலைவர் அவர்களும் அவருடன் செல்லக்கிளி அம்மான், விக்ரர், பொன்னம்மான், சந்தோசம் மாஸ்ரர், புலேந்தியம்மான், கணேஸ், ரஞ்சன், லிங்கம், பசீர்காக்கா, நான் மற்றும் சில தோழர்களும் அடங்கிய எமது தாக்குதல் குழுவில் ஒருவராக சுமார் ஐம்பது வயதை அடைந்துவிட்ட அப்பையா அண்ணரும் அங்கம் வகித்தார். நாம் திட்டமிட்டபடி தாக்குதலுக்கான குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும் எல்லோரும் வாகனத்தைவிட்டு கீழே இறங்குகிறோம். எனவே அடுத்ததாக அங்குள்ள ஓர் இடத்தில் கண்ணிவெடித் தொகுதியைப் புதைக்கவேண்டும். அப்பையா அண்ணரும், செல்லக்கிளி அம்மானும், விக்ரரும் கண்ணிவெடிகளைப் புதைக்க ஆரம்பிக்கின்றனர்.

கண்ணிவெடியைப் புதைப்பதென்பது ஒரு பெரிய வேலை. அதாவது கரடுமரடான தார்றோட்டில் பிக்கானால் கிடங்கு வெட்டுவதென்பது மிகவும் கடினமானது. அதிலும் கண்ணிவெடித் தொகுதிக்கான வெடிமருந்துகளை அடைப்ப தென்பது அதைவிடப் பெரியவேலை. ஏனெனில் வெடிமருந்துகள் ஆபத்தானவை. எல்லோருக்கும் அந்தவேலை ஒத்துவர மாட்டாது. எனவே வெடிமருந்துடன் நன்கு பழக்கப்பட்ட அப்பையா அண்ணர் அவ்வேலையை திட்டத்திற்கேற்ப மிகவும் வேகமாகவும் அதேவேளை நிதானமாகவும் திறம்படச் செய்துமுடித்தார். இவைக்கப்பால் அப்பையா அண்ணர் எமது இயக்கத்திலேயே மிகவும் வயது முதிர்ந்த மூத்த உறுப்பினர் ஆவார். இருந்தபோதிலும் அவர் மிகவும் சுறுசுறுப்பாகவும் விவேகத்துடனும் சதா இயங்கிக்கொண்டிருப்பார். அத்தோடு எமது உள்@ர்த் தயாரிப்புகளில் ஓர் முக்கிய வெடிமருந்து நிபுணராகவும் அவர் விளங்கினார்? என மூத்த தளபதி கேணல் கிட்டு அவர்கள் அதில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னான காலங்களில் இந்தியாவிற்குப் பயிற்சிக்குச்சென்ற போராளிகளுடன் அப்பையா அண்ணையும் ஒருவராக இணைந்திருந்தார். எப்படியாவது தானுமொரு இராணுவப் பயிற்சிபெற்ற விடுதலை வீரனாக உருவாகவேண்டுமென்று அவர் ஆவல் கொண்டிருந்தார். ஆனால், இவரது வயதைக் கருத்தில்கொண்ட இந்தியப் பயிற்சி அதிகாரிகள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர். இருந்தபோதும் நாடு திரும்பிய அப்பையா அண்ணை போராளியாகவே தொடர்ந்தும் பணியாற்றினார். அவரது விடுதலைப் பணிக்கு இராணுவப் பயிற்சி என்றுமே ஒரு தடையாக இருந்ததில்லை. ஆரம்ப காலங்களில் எமது தாக்குதல்களில் பங்கெடுத்த கண்ணிவெடிகள் பல அப்பையா அண்ணனின் கரங்கள் தழுவப் பெற்றவை. வன்னிப் பகுதியில் நடந்த பல தாக்குதல்களிலும் அவர் பங்கெடுத்தார். அப்பையா அண்ணனின் கண்டுடுபிடிப்பு முயற்சிகள் இயக்கத்தில் என்றும் பிரபலமாகப் பேசப்படுபவை.

அவற்றில் பல களத்தில் பயன்படுத்தப்படாதவையாக இருந்தபோதும்கூட, இளம் போராளிகளிடையே அத்தகைய முயற்சிகளை ஊக்குவித்து இயக்கத்தில் அத்தகைய ஒரு மரபை வளர்த்தெடுக்கும் தலைவர் அவர்களின் எண்ணத்திற்கு அப்பையா அண்ணையின் அத்தகைய முயற்சிகள் வாய்பாக அமைந்தன. அது பின்னைய காலங்களில் இயக்கத்தின் வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. பிற்காலங்களில் அந்த முதிய போராளி நன்றாக இழைத்துப் போயிருந்தார். எந்தப் பணியாற்றவும் அவரால் முடியாதிருந்தது. என்றாலும் எமது வரலாற்றுப் பெருமைக்குரியவராய் அவர் இருந்தார். அவரை இயன்றவரை பேணிப்பாதுகாக்க நாம் முயன்றோம். அதனால்தானோ என்னவோ எதிரியும் அவரது வாழ்வை முடிக்க விரும்பினான் போலும். இப்போது அப்பையா அண்ணை எங்களுடன் இல்லை. என்றாலும் அவர் எமது புகழ் பூத்த விடுதலை வரலாற்றில் என்றென்றைக்கும் வாழ்வார்.

ஊர் வாழ உறவு வாழ
உற்றம் சுற்றம் உரிமையோடு வாழ
வீரமறவர்களாக வேங்கையின் மைந்தனாக
மானிடத்தின் அதி உச்ச ஈகமாக

எதிரிகளின் தமிழின அழிப்பு கூட்டுச்சதியில்
நெருப்பாற்றிலும் இரசாயன குண்டுமழையிலும்
துரோகத்தனங்களையும் எதிர் கொண்டு
எம் மறவர் நிற்க

சதிகார இந்திய அரசின் வழிநடத்தலில்
ஐ.நா. வும் அமெரிக்காவும்
ஐரோப்பிய ஒன்றியமும் ஆசியப் பேய்களும்
சிங்களப் பிசாசுகளுடன் இணைந்து
மானிட தர்மத்தையும் மனிதநேயத்தையும்
அழித்துக் கொன்றன

எம் உறவுகளைக் காப்பாற்று என
பாலரும் பிஞ்சுமாக எம்மினம்
இரவு பகலாக தெருவெங்கும்
கதறித் துடித்து நிற்க
சிங்களத்தின் பாதுகாப்பு வலயத்தில்
தெருவெங்கும் பிய்த்தெறியப்பட்ட உடலங்களாகவும்
உயிரோடு புதைக்கப்பட்டது போக
சித்திரவதை முகாமிலும் எம் துயரம்

எம்மைக்காக்க எம் தேசம்காக்க ஈகம் ஆனவரே
உங்கள் உணர்வோடு எங்கள் தலைவன் வழியில்
இறுதி வெற்றிவரை உறுதியோடு போராடுவோம்
உங்கள் உணர்வுகளை வெல்லும்வரை
நாம் ஓயமாட்டோம் என உறுதி கூறுகின்றோம்.

இரண்டு நாளுக்கு மட்டும் கடவுச்சீட்டு இலவசம்.!-மகிந்தர்.


விமானத்தில் பயணிப்பதிற்கு 48 மணித்தியாலங்களுக்கு மாத்திரம் இலங்கைக்கு பயணம் செய்யும் சுற்றுலா பயணிகளுக்கு விசா கட்டணம் அறவிடப்பட மாட்டாது என
மகிந்தர் பாராளுமன்றில் அறிவித்துள்ளாராம்.

இலங்கையில் இருந்து வெளி நாடுகளுக்கு கடவுச்சீட்டு பயண அனுமதிகள் கொடுத்துள்ளார் .
ஆனால் பயணத்திற்கான பிரயாண பற்றுச்சீட்டு விலை குறைய வில்லை.
விமானங்களுக்கு விமானப்பற்றுச்சீட்டு பண அறவிடுதல் மாறுபட்டாலும் அதிக பணம் கொடுத்துத்தான் வெளி இடங்களுக்கு போக முடியும்.
கடவுச்சீட்டு பணம் குறைந்தாலும் அனுமதி காலக்கெடு கொடுத்தபடியால் போவதால் என்ன பயன்..?
அழைப்பேசில் நலமா என்று கேட்கும் நிமிடத்தொகை போன்றுதானே உள்ளது.
இதாவது கிடைச்சுதே என்று பயணம் போவதிற்குத்தான் மக்கள் தவிக்கின்றனர்.
உறவுகள் தொலைத்த உணர்வுகளாய் காத்திருக்கின்றனர் தமிழ் மக்கள்.!

எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் முதல்வர் ஜெயலலிதா அஞ்சலி (படங்கள் இணைப்பு)

அ.தி.மு.க. நிறுவனத் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 24வது நினைவு தினம் 24.12.2011 கடைப்பிடிக்கப்படுகிறது. மெரீனா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் முதல் அமைச்சர் ஜெயலலிதா காலை 10.45 மணி அளவில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அங்கு அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ஏராளமான பொதுமக்கள் திரண்டு இருந்தனர். அஞ்சலி செலுத்தியதும் நினைவிடத்தின் முன்பு அமைக்கப்பட்டு இருந்த மேடைக்கு ஜெயலலிதா வந்தார். அங்கு உறுதிமொழி ஏற்பும், மவுன அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் நடந்தது.

எம்.ஜி.ஆரின் புகழ் பற்றி அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற தலைவர் பி.எச்.பாண்டியன் உரையாற்றினார். அதன் பிறகு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி வாசிக்க அதை அனைவரும் திரும்ப கூறி உறுதி எடுத்துக் கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்ததும் ஜெயலலிதா மேடையின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று தொண்டர்களைப் பார்த்து உற்சாகத்துடன் இரட்டை விரலை காண்பித்தார். பதிலுக்கு தொண்டர்களும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். நிகழ்ச்சி முடிந்ததும் ஜெயலலிதா காரில் புறப்பட்டு சென்றார்.





இன்று லெப்.கேணல் அப்பையா அண்ணா நினைவு நாள் 24.12.2011

லெப்.கேணல் அப்பையா அண்ணை விடுதலைப் போராட்ட ஆரம்பகாலச் செயற்பாடுகளில் சாட்சியாக இருந்தார். மக்களுடன் மக்களாக தலைமறைவு வாழ்வில் இயக்கம் வாழ்ந்த காலங்களில் போராளிகளுக்குப் பெரும் பலமாக இருந்து செயற்பட்டவர். அன்றைய காலங்களில் கண்ணிவெடி உட்பட வெடிபொருள் உருவாக்கத்தில் முன்னின்று செயற்பட்டவர். சிறிலங்காப் படைகளின் கைக்கூலிகளால் கடத்தப்பட்டு மரணமானார்.


உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தமிழகத்தில் எதிர்நோக்கும் சிக்கல்கள்

"உச்சிதனை முகர்ந்தால்" திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படுவதில் பல சிக்கல்கள் எதிர் கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலையின் தேவையினை உணர்த்தும் விதமாகவும், தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டதற்கான காரணிகள் தொடர்பாகவும் மிகவும் அழுத்தம் திருத்தமாக படமாகியுள்ள 'உச்சிதனை முகர்ந்தால்' தற்பொழுது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த திரைப்படத்தில் ஈழத்தில் சிங்கள வெறியர்கள் நடத்திய கொடூரக் கொலைகள், பாடசாலை மீதான விமானத் தாக்குதல்கள், தமிழ் இளைஞர்களின் கண்களைக் கட்டி பிரடியில் சுடுவது போன்ற காட்சிகளும் ஈழத்துக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் எழுதப்பட்ட 'இருப்பாய் தமிழாய் நெருப்பாய் நீ! இழிவாய் கிடக்க செருப்பா நீ!' என்ற உணர்ச்சி ததும்பும் பாடல் வரிகளும் இடம்பெற்றுள்ளன.

ஈழத்தமிழ் ஆதரவாளர்களான நடிகர் சத்யராஜ், நாசர், நாம் தமிழர் இயக்கத்தின் ஸ்தாபகரும், இயக்குனருமான சீமான் ஆகியோர் முக்கிய பாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள். இதுபோன்ற காரணங்களால் தமிழகத்தில் உள்ள பல தொலைக்காட்சி நிறுவனங்களும் பத்திரிகைகளும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படச் செய்திகள் எதனையும் வெளியிடாது இருட்டடிப்பு செய்வதோடு இவர்களது கட்டணம் செலுத்திய விளம்பரங்களைக் கூட விளம்பரப்படுத்த மறுத்துவருகின்றனர்.

அதனையும் தாண்டி சென்னை தவிர்ந்த பிற இடங்களில் திரையரங்குகளை பெறுவது கூட கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்குக் காரணமாக தமிழ் உணர்ச்சிமிக்க கிராமப்புற மக்களிடம் இது போன்ற விடயங்கள் சென்றடைவதை தடுக்கும் முயற்சியில் தமிழக அரசு இவ்வாறான முட்டுக்கட்டைகளின் பின்னால் இருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

தலையின் மாவீரர் நாள் கணக்கு வழக்கு: எங்கேயோ உதைக்குது இல!

லண்டனில் மாவீரர் தினத்தை 21 வருடங்களாக நடத்திவரும் கட்டமைப்பு காசுக் கணக்கை சரியாகக் காட்டவில்லை எனத் தெரிவித்து திடீரென உள் நுளைந்த தலைமைச் செயலகத்தினர் தாமே இனி மாவீர் தினத்தை நடத்துவோம் என மார்தட்டி நின்றனர். அவர்களுக்கு முதலில் நேசக்கரங்களை நீட்டியது நாடுகடந்த அரசாங்கமே ஆகும். நாடு கடந்த அரசில் தம்மைத் தாமே அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் என்று கூறிக்கொள்வோர் பகிரங்கமாகவே தலைமைச் செயலகத்துக்கு தமது ஆதரவைத் தெரிவித்தனர். இந்தச் சிக்கல் போதாது என்று GTV வேறு இவர்களுடன் இணைந்து தமது ஆதரவைத் தெரிவித்தனர். ஆடான ஆடெல்லாம் இப்படி அலைய தான் மட்டும் சும்மா இருப்பதா என்று வெறும் 100 பேர் மட்டுமே கேட்க்கு ஐ.பி.சி என்ற வானொலியும் இவர்கள் வாலைப் பிடித்து ஆடியது. மழைக்குக் கூட பள்ளிக்கூடம் ஒதுங்காத சத்தியர் என்னும் தனி மனிதரிடம் சிக்கி ஐ.பி.சி சின்னாபின்னப்பட்டு போன பின்னர் இவர்கள் கொடுத்த ஆதரவும் தற்போது மண்கவ்வியுள்ளது.

தற்போது TNRF எனப்படும் நினைவேந்தல் அகவம்(அதாவது தலைமைச் செயலகக் குழுவின்) இணையம் வரவு செலவுக் கணக்கை வெளியிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் வேடிக்கையான விடையம் என்னவென்றால் வரவு 86,225 பவுண்டுகள் என்றும் செலவு: 1,08574.63 என்றும் சொல்லப்பட்டுள்ளது. அதாவது 22,349 பவுண்டுகள் நஷ்ட்டம் என்கிறது தலைமைச் செயலகம். அது சரி இவ்வளவு காலமாக மாவீரர் தினத்தை நடத்திய குழுவினர் பெரும் லாபத்தை சம்பாதித்ததாகவும் அதனை அவர்கள் சுருட்டிவிட்டதாகவும் GTVல் தோன்றி பலர் கூறியிருந்தனர். அதன் காரணமாகவே தாம் இம்முறை மாவீரர் தினத்தை நடத்துவதாக தலைமைச் செயலகம் என்னும் கோஷ்டி அறிவித்தது. அவர்கள் நடத்திய மாவீரர் தினம் நஷ்டத்தில் முடிவடைந்துள்ளதாக அவர்கள் கணக்கை முடித்துள்ளனர். அப்படி என்றால் இவ்வளவு காலமாக (தமிழர் ஒருங்கிணைப்புக் குழு) நடத்திவரும் மாவீரர் தினத்தில் மட்டும் இவர்கள் சொல்வதைப் போல பெரும் லாபம் எப்படி வந்திருக்கும் ? யோசிக்கவேண்டிய விடையம் அல்லவா?



மாவீரர் தின நிகழ்வுகள் அதற்கான மண்டபச் செலவுகள் கதிரைகள் இதரச் செலவுகள் எனப் பல செலவுகள் இருக்கும்போது லாபத்தில் தான் எல்லாம் நடக்கிறது அதனால் தான் கணக்கை காட்ட மாட்டேன் என்கிறது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு என அவர்கள் மேல் தலைமைச் செய்லகம் வீண் பழியைப் போட்டது. இம் முறை மாவீரர் தினம் 2டாகப் பிரிந்து நடக்க தலைமைச் செயலகமே முழுக் காரணமாகும். ஆனால் இவர்கள் தற்போது வந்து வரவு இவ்வளவு செலவு இவ்வளவு என மொட்டையாக தமது கணக்கை முடித்துள்ளனர். அதிலும் காசு கொடுத்து ரிக்கெட்டை வாங்கிவர்களுக்கு மட்டும் முழுக் கணக்கையும் காட்டுவோம் என்கிறார்கள். இது எந்த வகையில் நியாயமாகும்? பொதுமக்கள் அனைவருக்கும் கணக்கை காட்டவேண்டியது தானே முறையாகும்! தமது வரவு 86,225 என்று தலைமைச் செயலகம் குறிப்பிடுகிறதே அது எவ்வாறு வந்தது என்று சற்றுச் சொல்லமுடியுமா?

ரிக்கெட் விற்று வந்ததா ? இல்லை நன்கொடையா இல்லை மாவீரர் தின நிகழ்வுகளில் சேர்க்கப்பட்டதா என்பது போன்ற விபரங்களை இவர்கள் வெளியிட ஏன் தயங்குகிறார்கள் ? அதுவும் படிப்பறிவு இல்லாத நபர்களால் நடத்தப்படும் ஐ.பி.சி வானொலி முருகதாஸ் திடலில் நடந்த மாவீரர் தினத்துக்கு 40,000 பொதுமக்கள் வந்ததாகச் சொல்லித் திரிகிறது. அறிக்கை என்ற பெயரில் பொயான செய்திகளை வாசிக்கிறது. முருகதாஸ் தீவுத் திடலில் 40,000 பேர் கூட வாய்ப்பே இல்லை என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில் ஐ.பி.சி யின் பித்தலாட்டமும் சத்தியர் என்னும் தனி மனுதரின் கேவலமான போக்கையும் பிரதிபலிக்கும் ஒரு கேடு கெட்ட வானொலியாக ஐ.பி.சி மாறியுள்ளது என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள். ஞானசூனியங்கள் நடத்திவரும் இந்த வானொலி கூறுவதுபோல அப்படியே 40,000 ஆயிரம் பேர் வந்ததாக எடுத்துக் கொண்டால் கூடா ஒருவர் தலா 5 பவுன்களைச் செலவு செய்தால் கூட 200,000 பவுண்கள் வந்திருக்குமே. இந்த ஞானசூனியங்கள் சொல்வதைக் கேட்டால் ஐ.பி.சி சேம் சைட் கோல் போடும் போல இருக்கே ஐயா!

சரி அது எல்லாம் போகட்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்பட்ட மாவீரர் தினக் கணக்குகள் இன்னும் வரவில்லை என்பது மக்கள் மத்தில் நிலவும் ஒரு குறையாக இருக்கிறது. இதனை அவர்கள் விரைவில் நிவர்த்திசெய்வார்கள் என நான் நம்புகிறேன்.

வல்லிபுரத்தான்.
அதிர்வு

விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே மாவீரர்கள்! - கப்டன் வாணன்! 20வது நினைவுநாள் இன்று

புனித இலட்சியப் பிரவாகத்தில் பயணித்து, தமிழீழக்கனவுடன் வித்தாகிய ஆயிரமாயிரம் மாவீரர்களின் வரிசையில்; துயில்கொள்ளும் ஒருவன் கப்டன் வாணன். தனது கண்முன்னால் தனக்கும் தனது சமூகத்திற்கும் நிகழ்ந்த அவலங்களின் சாட்சியாக, இந்த இழிநிலை வாழ்க்கை எமக்கு வேண்டாம், எமது சந்ததிக்கும் வேண்டாம் என்ற தெளிவில் பரிணமித்தவன்.

அந்த அவலங்களின் எதிர்வினையாக, விடுதலை ஒன்றுதான் தீர்வு என முடிவெடுத்துப் பயணித்த போராளி, அதற்காக தன்னை உரமாகிய அவனது இருபதாவது நினைவுநாள் இன்று.

சுதந்திரப் போராட்டத்தின் பங்கெடுப்பு என்பது ஈர்ப்பு, கவர்ச்சியின் சமன்பாடல்ல. அது சமூகம் மீதான அக்கறையின் வெளிப்பாடாக, இனத்தின் மீதான அடக்குமுறைச் சம்பவங்களின் தொடர்வினையாக, பாதிப்பின் வெளிப்பாடாக உருவாகின்றது. அது வாழ்வின் எல்லைவரை தெளிவான பற்றுறுதியையும் கொள்கை ரீதியான உறுதிப்பாட்டையும் வழுவாத்தன்மையையும் கொண்டிருக்கும் என்ற யதார்த்தத்தின் பிரதிபலிப்பாக, நடைமுறை உதாரணமாக அமைகின்றது கப்டன் வாணனின் வாழ்க்கை வரலாறு.

வாணன் அசாத்தியமான துணிச்சல்காரனாக இருந்தாலும் மென்மையானவன். எதையாவது செய்து கொண்டிருக்கும் துடிப்பும் குறும்புத்தனமும் அவனிடம் அதிகம். விளையாட்டு, நாடகம் போன்றவற்றில் அதிக ஈடுபாடு கொண்டவன். வாணனுடனான இளமைப்பருவத்து நாட்கள் நெஞ்சைவிட்டகலா பதிவுகள் - அம்மாவிற்குத் தெரியாமல் நிகழ்ச்சி பார்க்க சென்று நடு இரவில் திருப்பிவரும்போது, விளாத்திமரத்தைப் பார்த்து அம்மம்மா சொன்ன பேய்க்கதையை நம்பி, உரத்து தேவாரம் பாடிக் கொண்டு வந்தது, வெள்ளத்தில் வாழைக்குத்திகளை ஒன்றாகக் கட்டி |போட்| விட்டு விளையாடியது என அந்த நாட்களின் பசுமையான நினைவுகள் பல. இளமைப்பருவத்து இனிமைகளுடன் பயணித்த காலம்.

எண்பதுகளின் பிற்பகுதியில் உக்கிரமடைந்த தமிழினத்திற்கு எதிரான அடக்குமுறைகளும் கொலை வெறியாட்டங்களும் நாடு முழுவதும் பரவியதைத் தொடர்ந்து இராணுவ ஆக்கிரமிப்புக்கள், தாக்குதல்கள் என வாழ்க்கை பதட்டமான கால ஓட்டத்தில் பயணிக்கத் தொடங்கியது. ஈழப்போர் ஒன்றின் இறுதிக்காலப்பகுதி, இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் படி இந்திய இராணுவம் தமிழர் தாயகத்தில் தனது இருப்பை அமைத்துக் கொண்டிருந்தது. மீண்டும் ஆரம்பித்த போர், விமானக் குண்டு வீச்சு, ஆங்காங்கே நேரம் காலமின்றி விழுந்து வெடிக்கும் செல் என அசாதாரண சூழலை உருவாக்கிக் கொண்டிருந்தது. வாணனுக்கு அப்போது பதின்நான்கு வயது.

அன்றைய பதற்றமான சூழ்நிலையில், வைத்தியசாலையில் இருந்த அப்பாவின் விடுதியில் பாதுகாப்பின் நிமித்தம் தங்கியிருந்த போது நிகழ்ந்தது அந்தக் கொடூர சம்பவம். அதிலிருந்து மயிரிழையில், பிணங்களுக்குள் பிணமாக தன்னையும் உருமாற்றி ஒரு நாளுக்கு மேல் மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து தப்பியவன். 1987ம் வருடம், தீபாவளி தினத்தில், யாழ் நகரைக் கைப்பற்றும் நோக்கில் யாழ் கோட்டையிலிருந்த இந்திய இராணுவம் கடுமையான எறிகணைத் தாக்குதலை மேற்கொண்டது. முன்னேறி வந்த இராணுவம், யாழ் வைத்தியசாலை வளாகத்தின் அலுவலகப் பகுதியை நோக்கிச் சரமாரியாகச் சுட்டுக் கொண்டு உள்நுழைந்தது.

அப்போது அப்பாவுடன் அலுவலக அறையில் நின்று கொண்டிருந்த வாணன், அந்த சம்பவத்தைப்பற்றி கூறுகையில் “ஆமி சுட்டுக்கொண்டு வந்தபோது நான் வாசல்ல தான் நின்டனான். ஆமி சுட்டதில் எனக்கு முன் நின்றவர்கள் இரண்டு பேரும் வெடிபட்டு எனக்குமேல் விழுந்து விட்டினம். நான் அப்படியே அசைவில்லாமல் அவங்களின் உடலுக்கு கீழ விழுந்து கிடந்தன், ஆமி சுட்டது எனக்குப்படேல, கொஞ்ச நேரத்தில் என்ர காலும் விறைச்சுப் போட்டுது, ஆமி வந்து என்ர காலை தனது சூக்காலால் தட்டிப்பார்த்தான், எனக்கு ஒன்டும் தெரியல, நானும் சத்தம் போடாமல் இருந்திட்டன், அதால நான் இறந்திட்டதா நினைச்சு விட்டுட்டுப் போயிட்டான், எனக்கு மேல இறந்து விழுந்தவர்கள் பயங்கரப் பாரம் ஒன்டும் செய்ய முடியாததால அப்படியே இருந்தன், அவர்களில் இருந்து வடிந்த இரத்தம் என்ட உடம்பையும் இரத்தமாக்கியிட்டுது அதோடு |பிணங்களுக்கிடையால் ஆமியைப் பார்ப்பன். கிட்ட வரும்போது மூச்சை அடக்கியிருப்பன், அவன் போன பிறகுதான் மூச்செடுப்பன்|. மறுநாள்வரை இப்படித்தான் கழிந்தது. ‘கடைசித்தம்பி காயப்பட்டு தண்ணீர் கேட்க, அப்பா மேசையிலிருந்த தண்ணீரை எடுத்துக் கொடுக்க முற்பட்டபோது, யன்னல்ப்பக்கமிருந்த ஆமிசுட்டு அப்பா செத்ததை பாத்துக்கொண்டிருந்தனான்’.” என்றான்

மேலும் “உங்களை ஆமி கூட்டிக்கொண்டு போனபோது அம்மா எங்கட பெயரைக் கூப்பிட்டு அழுதுகொண்டு போனது கேட்டது அதனால உங்களையும் ஆமி சுடப்போறாங்களோ! என்ட பயத்தில எழுப்பேல்லை, பிறகு அப்பகுதியில் ஆமியைக் காணவில்லை, வைத்தியசாலை ஊழியர் ஓராளும் காயப்பட்டு எழும்பாமல் எங்களோடயிருந்தார். நாங்கள் இங்கயிருந்து ஓடுவம் என்று முடிவெடுத்து, நானும் தம்பியையும் தூக்கிக் கொண்டு மதில் ஏறிப்பாய்ந்து நல்லூர் கோயிலுக்கு ஓடினான். அதோட அப்பாவின் சட்டைப் பையில இருந்த அம்புலன்ஸ் சாவியையும் நல்லூர் கோயிலில் நின்ற வைத்திய பொறுப்பதிகாரி நச்சினியாக்கினியாரிடம் கொண்டு போய்க் கொடுத்து நடந்ததைக் கூறினேன் என்றான்”. (படுகொலைச் சம்பவத்தை வாசிக்க இந்த இணைப்பை அழுத்தவும் - http://eelampakkam.blogspot.com/2011/10/blog-post.html)

இந்தச்சம்பவம் அவனுக்குள் எழுப்பிய கேள்விகள் பல, ஏதும் அறியாத அப்பாவிகள் மீது நடந்தேறிய கோரக் கொலைத்தாண்டவம் அவனை வெகுவாகப் பாதித்திருந்தது. ஈழத்தமிழர்களின் வரலாற்றைப்பற்றி ஜயாவிடமும் அம்மம்மாவிடமும் கதைப்பான் பல கேள்விகளைக் கேட்பான். எமக்கான விடுதலையின் தேவை, இலங்கைத்தீவின் தமிழர்களின் வரலாறு பற்றி மேலதிகமாக அறிய ஆவல் காட்டினான். தனக்கு ஏற்பட்ட அனுபவம், தமிழர்களின் வரலாறு, அவர்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் என இளம் பிராயத்தில் அவனுக்குள் ஏற்படுத்திய விடுதலைத்தீ ‘சுதந்திர தமிழீழம்’ என்ற விடையாகக் கிடைத்தது. தனது குறிப்பேட்டில் “எமது இனம் பெற்ற சுதந்திரம் பெறுமதி வாய்ந்தது. அதை எதிரியிடம் விட்டுவிடலாமா? கூடாது எமது இனத்தின் சுதந்திரத்தை மீண்டும் பெற்றுவிட இறுதி மூச்சுவரை போராடுவோம்!”என்ற அவனது எழுத்தில் தனது திடத்தைப் பதித்திருந்தான்.

இந்திய இராணுவ காலத்தில் போராளிகளுக்கு உணவு எடுத்துக் கொடுத்தல், இராணுவம் தொடர்பான தகவல்களை வழங்குதல் போன்ற தன்னாலியன்ற பங்களிப்புக்களைச் செய்யத் தொடங்கினான். இவனது செயற்பாடுகளை அறிந்த அம்மா வெளிநாட்டுக்கு அனுப்பும் நோக்கத்துடன் இந்தியாவிற்கு அனுப்பி வைத்தார். ஆனால் அங்கிருந்தவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி மீண்டும் கடலால் நாட்டுக்கு திரும்பி வந்து வீட்டில் நின்றான்.

ஈழப்போர் இரண்டு தொடங்கியதும் தன்னை விடுதலைப்போராட்டத்தில் இணைத்துக் கொண்டான். ஒருநாள் பயிற்சி முகாமில் எதேச்சையாக ‘மெடிசின்’ கொட்டிலில் அவனைக் கண்டேன். முகாம் அமைக்கும் வேலையின் போது காயம் ஏற்பட்டு, அப்போதுதான் குணமடைந்து வந்திருந்தான். ஒரே பயிற்சி முகாமில் இருவரும் பயிற்சியெடுத்தோம். அவனிடம் “நான் இணைந்திருக்கிறன் தானே நீ போய் வீட்டைப் பார்” என்றேன், மறுத்துவிட்டான். பின்னர் பயிற்சி முடித்து, வேலைத்திட்டங்களுக்காக வேறு இடங்களுக்குச் சென்று விட்டோம்.

தனது பணியினை பலாலி இராணுவமுகாமில் ஆரம்பித்தான், பல சண்டைகளில் பங்குபற்றினான். அவனது சுயமுயற்சியும் சுயதிட்டமிடலும் சிறந்த தலைமைத்துவத்தைக் கொடுத்தது. முக்கியமாக வேவுப்பணிகளில் திறமையாகச் செயற்பட்டான். எதிரிக்குள் வாழ்வதைக்கூட இலகுவான பணியாகச் செய்தான். அவ்வளவு தூரம் அவன் உளரீதியாக உறுதியான மனநிலை உடையவனாக விளங்கினான்.

1993 ம் ஆண்டு ’களத்தில்’ பத்திரிகையில் வந்த விழுதுகள் கட்டுரையில் இருந்து வாணனைப்பற்றி ...

”வாணன் காவலரண்களில் கடமை புரிகிற வேளைகளில் எதிரிப்படையினரின் நிலைமைகளைச் சென்று கண்காணிப்பான். ஆனால் கத்தி விளிம்பில் நடக்கிற இச்செயலின் ஆபத்து, அவனுக்குப் பெரிதாய்ப்பட்டதில்லை - மகிழ்ச்சியைக் கொடுத்து, உற்சாக ஊக்கியாய் இருந்தது.

03-11-1990 அன்று நடாத்தப்பட்ட மாவிட்டபுரம் சிறீலங்காப்படை மினிமுகாம் தாக்குதலுக்கு முன் வேவு பார்க்கும் பணியினை இவன் ஏற்றிருந்தான். மிகச் சாதுரியமாகச் சென்று தகவல்களைத் திரட்டி ஒன்றும் மீதியின்றி தளபதியிடம் பகிர்ந்தான். மேலதிக உறுதிப்பாட்டிற்காக தளபதியினால் அனுப்பப்பட்ட போராளிகளினால் கொண்டுவரப்பட்ட தகவல்களும் இவனுடையதை ஒத்து அச்சொட்டாகவே இருந்தது. வேவுக்கடமைகளிலும் இவன் ஆளுமை மிளிர்ந்தது.

இத்தாக்குதலுக்காக எதிரியின் நிலைகளை நோக்கி இவன், சகபோராளிகள் ஊர்ந்து முன்னேறி நிலையெடுக்கின்றனர். தளபதியின் கட்டளை பிறக்கின்றது. எதிர்பாராத் தாக்குதலில் எதிர்ப்படையினர் நிலைகுலைந்து போயினர். நிதானிப்பதற்குள்ளாகக் குண்டுபட்டு வீழ்கின்றனர். எறிகணைகள், உலங்குவானூர்திகள் உக்கிரம் கொண்டு எமது நிலைகளைத் தாக்குகின்றன. குண்டு வீச்சு விமானங்கள் எமது முன்னேற்றத்தைத் தடுக்கப் பகீரதப்பிராயத்தனம் செய்கின்றன. ஆயினும் இவர்கள் எதிரிப்படையின் நிலைகளை அழித்தனர். மினிமுகாமைக் கைப்பற்றினர். எதிரிப்படையினர் தமது ஆயுதங்களை வீசிவிட்டு, காயமுற்ற தமது சகாக்களைத் தூக்கிச் சுமந்தவாறு ஓட்டமெடுத்தனர். அவற்றையும் கைப்பற்றி எமது நிலைகளை நோக்கி மீள்கையில், எங்கிருந்தோ வந்ததொரு குண்டு! இவன் உடலைப் பதம்பார்க்கின்றது! குருதியாறு நிலத்தை நனைக்கிறது. இதைப்பற்றி அவனது தினக்குறிப்பு வரிகள் குரலிலேயே நெஞ்சுள் ஒலிக்கிறது! ”தமிழா நீ பிறவி எடுத்தாலும் நீ பிறந்த மண்ணுக்காக ஒரு துளி இரத்தத்தைக் கொடுத்துவிட மறந்திடாதே தமிழா....”

மாவிட்டபுரம் மினிமுகாமைத் தகர்த்து வீரசாதனை புரிந்தவர்களில் ஒருவரான இவன், தனது விழுப்புண் ஆறமுன்னே அடுத்த சமர்க்களத்திற் குதித்தான். 19-12-90 அன்று கட்டுவனில் சிறிலங்காப் படையினருடனான கடுஞ்சமர், முன்னேற முயல்கின்றனர் எதிரிப்படையினர், தடுத்து நிறுத்துவதில் இவனது துப்பாக்கியும் சுறுசுறுப்பாய்த் துரிதமாய் இயங்கியது. 05-02-92 அன்று நடந்த தச்சன்காடு மினிமுகாம் தாக்குதலிலும் இவனது பங்கு அளப்பரியது.

சகதோழர்கள் மேல் இவன் காட்டுகிற கரிசனை அபாரம். அவர்களை வழிநடத்துகிற ஆற்றலை அவர்களே புகழ்ந்துரைப்பார்கள். இராணுவம் முன்னேறி வந்த ஒரு தடவை, இவனது குழுவைச் சேர்ந்த ஒருவன் அசட்டையாக எழுந்து நின்று அவதானித்தான். இவன் கண்டிப்பும் அன்பும் கலந்த தொனியிற் சொன்னான், ”எவ்வளவு கஸ்டத்திற்கு மத்தியில் ஒவ்வொரு போராளியையும் அண்ணை உருவாக்கி வைச்சிருக்கிறார். நீ என்னெண்டா சும்மா மண்டையைப் போடுகிறன் எண்டு எழும்பி நிக்கிறாய்!” இந்தச் சிறுவயதிலேயே தலைமைத்துவத்திற்கு விசுவாசமிக்கவனாக, ஒவ்வொரு போராளியினதும் பெறுமதி உணர்வாகத் தன்னை நிலைநிறுத்தியிருந்தான். பங்குபற்றிய அனைத்துத் தாக்குதலுமே மிக நிதானத்துடனும், திறமையாகவும் செயற்பட்டு தளபதிகளின், பாராட்டுதலுக்கும், அன்பிற்கும் பாத்திரமாகிவிட்டான்.”

சிறிது காலத்தில் பகுதி இராணுவப்பொறுப்பாளனாக நியமிக்கப்பட்டான். பொறுப்பெடுத்தபின் தனது பகுதிக்குள்ளால் இராணுவத்தை நகரவிடக்கூடாது என்பதற்காக கடுமையாகப் பாடுபட்டான். எப்போதும் எந்த வேளையிலும் ஒவ்வொரு நிலைக்கும் சென்று போராளிகளை ஊக்கப்படுத்தி, அவர்களின் மேல் கரிசனையாக வழிநடாத்தும் ஆற்றல் நல்ல உறவை வளர்த்தது. இராணுவத்தை சும்மாயிருக்க விடக்கூடாது தொடர்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்பதில் குறியாக இருப்பான். ஒருநாள் வாணன் இராணுவத்தி நடமாட்டத்தை அவதானித்துக் கொண்டிருந்தான். அதேசமயம் சினைப்பர் வைத்திருப்பவர் வெளியில் சென்றுவிட, அந்த ஆயுதத்தைக் கொண்டு சென்று தானே ஒரு சினைப்பர் போராளியாக பதுங்கியிருந்து இரண்டு இராணுவத்தைச் சுட்டுக் கொன்றுவிட்டு வந்தான்.

கூடியளவு தனது செயற்பாடுகளை எதிரிக்கும் தனது காவலரணுக்குமிடையில் தான் வைத்திருந்தான். அநேகமான நேரங்களில் எதிரியை அண்டிய பகுதியிலேயே இவனைச் சந்திக்கலாம் என்பது இராணுவப் பொறுப்பாளர்களின் கருத்து. தனது பகுதிக்குள் இராணுவத்தை நகரவிடாமல் எவ்வாறு தடுக்கலாம் என்பதை சிந்தித்து பதுங்கித்தாக்குதல்களை செய்தல், பொறிவெடிகளை வைத்தல் போன்ற பணிகளை தானே முன்நின்று செய்வான். அப்பகுதியில் கிடைக்கும் பழைய செல்கள் மற்றும் இதர வெடிபொருட்களை தேடியெடுத்து அவற்றை எதிரியின் நகர்விற்குச் சாத்தியமான பகுதிகளில் வைப்பான்.

”24-12-91 இது மிகத் தன்நலக்காரத் தினமோ? இத்துணை புகழ் பூத்த எம் வாணனைத் தன்னுடன் அழைத்துச் சென்று விட்டதே! பாரிய வெடியோசைகள் வலிகாமம் கிழக்கின் தலையில் வெடிகின்றது. அந்தக் காலை இவ்வாறுதான் தொடங்கிற்று! இப்பிரதேசத்து ஈவினைப் பகுதி மண்ணின் இயல்பான செம்மை எம்மவர் குருதியால் மேலும் சிவப்பேறி... மூவர் விதையாகின்றனர். எதிர்பாராத கந்தக வீச்சில் மாசுற்ற எம்சூழற் காற்று இவர்தம் இறுதி மூச்சால் தூய்மை பெறுகின்றது. இந்த மூவரில் ஒருவன்தான் .. வாணன்.

ஓ.... கேட்கிறது உனது ஆத்ம ராகம். அதுதான் உனது குறிப்பேடு

”வீரத்திற்கு வித்திட்ட தமிழா , கோழைக்குக் குடை பிடிக்கலாமா? கூடாது, எமது இழப்புக்கள் இழப்பு அல்ல, விடுதலை என்னும் பயிருக்கு இடப்பட்ட உரமே! எமது இலட்சியம் ஒங்குக”

உனது குறிப்பேடு, வெறும் கையேடல்ல. பின்தொடர்ந்து வரும் இளைய வீரர்களுக்காய், தாயக மக்களுக்காய் நீ எழுதி வைத்த மரண சாசனம். அது புனிதம் மிக்கது. ஏனெனில் உனது புகழுடம்பின் சட்டைப் பையிலிருந்து அதை நாம் எடுத்தபோது அதுவும் குருதியில் குளிப்பாட்டப்பட்டிருந்தது.”

வாழ்க்கையின் சில கணங்களின் உணர்வுகளை வார்த்தைகளால் சொல்லமுடியாது. அது பாசப்பிரிவின் வேதனை, விடுதலைக்கு உரமான போராளியின் பிரிவின் வேதனை, மனதை பிழந்து விடும் அந்தச் செய்தி வந்தது. அங்கே கிடைத்த பழைய செல்லை எடுத்து பொறிவெடியாக்க முயற்சித்தவேளை வெடித்ததில் வாணனும் அவனுடன் இருவரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர் என்பது. தம்பி வீரச்சாவு, உணர்வை உலுங்கிய அந்த நிமிடங்கள்.

சிலமாதங்களுக்கு முன் அப்பாவின் திதியில் இருவரும் சந்தித்ததிற்குப் பின் அவனைக் காணவில்லை. வித்துடலும் பார்க்க முடியாதவாறு சீல் வைக்கப்பட்டிருந்தது. இந்தப்போரில் அநியாயமாக அப்பாவையும் விடுதலைக்கு விதையாக தம்பியையும் இழந்திருக்கின்றோம்.

சுதந்திர தமிழீழத்திற்காகப் புறப்பட்ட அவனது கடமை ஒரு வருடத்தில் நிறைவிற்கு வந்துவிட்டது. விடுதலைக்காக நிறைய சாதிக்கும் கனவுடன் கடுமையாக செயற்பட்ட, சாதிப்பான் என எதிர்பார்க்கப்பட்ட, அவனின் விடுதலைமூச்சு நின்றுவிட்டது. அந்த ஆத்மா தனது கனவின் அடைவுவரை அமைதிகொள்ளாது என்பது நினைவிற்குள் வர மனது கனக்கின்றது. இதுபோன்று பல்லாயிரக்கணக்கானோரின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் சுமந்து வாழும் எத்தனையோ ஈழத்தமிழர்களுக்கு ஆறுதல் என்பது சுதந்திர விடுதலை மட்டுமே. விடுதலையை நெஞ்சில் சுமந்து வித்தாகிப்போன வாணனுக்கும் மற்றைய இருவருக்கும்; சிரம் தாழ்த்திய வீரவணக்கம்.

அபிஷேகா
abishaka@gmail.com

கொள்கையுடன் கொள்ளையடிக்கும் கொள்ளையன் - திட்டக்குடி போலீசாரிடம் பிடிபட்டான்

கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் பூபதி என்பவர் அதிர்ஷ்டம் என்ற பெயரில் நகைக்கடையை நடத்தி வந்துள்ளார்.

இவரது கடையில் கடந்த 11.11.2011 அன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து அவர் திட்டக்குடி காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

அந்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட டிஎஸ்பி வனிதா மேற்பார்வையில், திட்டக்குடி இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையிலான போலீசார், திருவண்ணாமலை போலீசாரின் உதவியுடன் கரூரான் என்கிற பன்னீர்செல்வம் மற்றும் அவரது நண்பர் கோபால் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

போலீசார் விசாரணையில் கரூரான் என்கிற பன்னீர்செல்வம் கொடுத்த வாக்குமூலத்தில், திருவண்ணாமலையில் உள்ள அருணாச்சலேஸ்வரரை தரிசனம் செய்துவிட்டுதான் எந்த காரியமானாலும் தொடங்குவேன். எனது ஊர் பவானி பக்கம் உள்ளது. கொள்ளையடிப்பது எனது தொழில். அதில் நான் ஒரு கொள்கை வைத்துள்ளேன்.

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வைத்திருக்கும் நகைக்கடையில் கொள்ளையடிக்க மாட்டேன். மார்வாடிகள் வைத்திருக்கும் கடைகளில் கொள்ளையடிப்பேன். அதேபோல் அடகு கடையில் கொள்ளையடிக்க மாட்டேன். ஏனென்றால் அடகு கடையில் ஏழை எளிய மக்கள் நகைகளை அடமானம் வைத்திருப்பார்கள். அடகுகடையில் நான் இச்செயலில் ஈடுபட்டால், ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

நான் ஆம்னி வேனில் சென்றுகொண்டிருந்தபோது, பெயர் பலகையில் திட்டக்குடி என்ற ஊர் கண்ணில் பட்டது. திட்டக்குடி பெரிய ஊராக இருக்கும் என்று நினைத்து கொள்ளையடிக்கப் போனேன். ஆனால் அது பெரிய ஊராக இல்லை. இருப்பினும் அதிர்ஷ்டம் என்ற நகைக்கடையில் கொள்ளையடித்தேன் என்று கூறியுள்ளான்.

அதிர்ஷ்டம் நகைக்கடை வைத்திருக்கும் பூபதி, தமிழகத்தைச் சேர்ந்தவர் அவர் மார்வாடி இல்லை. அப்படியிருக்கும்போது, அந்தக் கடையில் கொள்ளையடித்தது ஏன் என்று போலீசார் கேட்டுள்ளனர். அதற்கு, நான் பகலில் பார்க்கும்போது அதிர்ஷ்டம் கடையின் மேல் ஒரு மார்வாடி பெண் துணியை காயவைத்துக்கொண்டிருந்தார். அதனால் அந்த கடை மார்வாடிக்கு சொந்தமானது என்று நினைத்தேன் என்று கரூரான் என்கிற பன்னீர்செல்வம் கூறியுள்ளான். (பூபதிக்கு சொந்தமான கடைக்கு மேல் மார்வாடியைச் சேர்ந்த குடும்பத்தினர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர்).

மேலும் கரூரான் என்கிற பன்னீர்செல்வம் கூறுகையில், சேலம், சென்னை, வேலூர் என பல்வேறு ஜெயில்களில் இருந்துள்ளதாகவும், அப்போது சேலம் ஜெயிலில் கோபால் தனக்கு நண்பனானான் என்றும், பலமுறை தான் திருந்த முயன்றும் வேண்டுமென்றே போலீசார் தன் மீது திருடியதாக பொய் வழக்கு போட்டு கைது செய்ததாகவும், இதனால் தன்னால் கொள்ளையடிக்கும் தொழிலை விடமுடியவில்லை என்றும் கூறியுள்ளார்.

தனது பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்துள்ளதாகவும், தனது குடும்பத்தினருக்கு தான் கொள்ளை தொழிலில் ஈடுபட்டிருப்பது தெரியாது என்றும், மதுரையில் ஒரு பெரிய மார்வாடிகாரருக்கு சொந்தமான கடையில் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்ததாகவும், அதன்பின்னர் கொள்ளையடிக்கும் தொழிலை விட்டுவிட நினைத்ததாகவும் கூறியுள்ளான்.

இதுகுறித்து திட்டக்குடி இன்ஸ்பெக்டர் செல்வம் கூறுகையில், இவர்கள் இரண்டு பேரிடம் இருந்து ஒரு ஆம்னி வேன், கொள்ளையடிக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவர்களிடம் மேலும் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

ஆபாச படம் எடுத்த சம்பவத்தில் திருப்பம்: மாணவியை சித்தப்பா கொலை செய்தார்

கும்மிடிப்பூண்டி பாதிரிவேடு அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 1 படிக்கும் மாணவர்கள் சக மாணவிகளுடன் நட்பாக பழகி அவர்களை செல்போனில் படம் எடுத்து இன்டர்நெட்டிலும், செல்போன்களிலும் பரவ விட்டனர்.

பள்ளி விடுமுறை நாளில் மாணவர்கள் இந்த விளையாட்டில் ஈடுபட்டனர். மாணவியை, மாணவர் ஒருவர் சுற்றிச் சுற்றி வந்து கிண்டல் செய்வது, மடியில் படுப்பது போன்ற சில்மிஷங்கள் செய்துள்ளனர். இதை 4 மாணவர்கள் சுற்றி நின்று செல்போனில் படம் எடுத்து இருக்கிறார்கள். இதுபோல் பல காட்சிகள் இடம் பெற்று இருந்தன.

5 மாணவர்களும் இதுபோல் 2 மாணவியை ஆபாச படம் எடுத்து செல்போனில் பரவவிட்டனர். இதுபற்றி பள்ளி நிர்வாகத்துக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சி அடைந்தனர். மாணவிகளை செல்போனில் படம் எடுத்த மாணவர்கள் கங்கா (மா நல்லூர்), சுமன் (பாதிரிவேடு), கார்த்திக் (செதில்பாக்கம்), செல்வகுமார், தங்கராஜ் ஆகிய 5 மாணவர்களை பள்ளியை விட்டு நீக்கி டி.சி. கொடுத்து அனுப்பினர்.

இந்த ஆபாச பட விவகாரத்தில் சிக்கிய 2 மாணவிகளில் ஒருவரான திலகவதி கடந்த 21 ந்தேதி செதில்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கினார். உடனே போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.

மாணவியின் தந்தை குமார் போலீசில் கூறும் போது, மாணவர்கள் ஆபாச படம் எடுத்ததால் தனது மகள் திலகவதி அவமானம் தாங்காமல் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தார். போலீசார் அங்கு செல்லும் முன் மாணவியின் பிணத்தை கீழே இறக்கி வைத்திருந்தனர். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

மாணவி பிணத்தை கைப்பற்றி பிரேத விசாரணைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின் மாணவி உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் பிணத்தை வாங்க மறுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீஸ் அதிகாரிகள் சென்று அவர்களை சமாதானப்படுத்தினார்கள். இதற்கிடையே இந்த விவகாரத்தில் திடுக்கிடும் திருப்பம் ஏற்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் மாணவியின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு இருக்கிறது, எனவே கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டதற்கான சந்தேகம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன் பேரில் கொலை கண்ணோட்டத்தில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டனர். மாணவியின் தந்தை குமார் மற்றும் உறவினர்களிடம் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது திலகவதியின் ஆபாச படம் வெளியானதால் அவமானம் அடைந்து சித்தப்பா ஹரிதான் கழுத்தை நெரித்து கொன்றதாக தெரிய வந்தது. போலீசார் ஹரியை தேடினார்கள்.

அவர் தலைமறைவாகி விட்டது தெரிய வந்தது. பல இடங்களில் தேடி போலீசார் ஹரியை பிடித்தனர். இரவோடு இரவாக பாதிரிவேடு போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். குடும்ப மானத்தை காப்பாற்ற திலகவதியை கவுரவ கொலை செய்ததை ஹரி ஒப்புக் கொண்டார்.

இன்று காலை அவரிடம் டி.எஸ்.பி. குமார் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மாணவியை கொன்றது ஏன் என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். இதற்கிடையே இந்த விவகாரம் வெளியானதும் சம்பந்தப்பட்ட 5 மாணவர்களும் ஆந்திராவுக்கு தப்பி ஓடி விட்டனர்.

அவர்களைப் பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு வனிதா உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்தனர். விசாரணையில் மாணவர்கள் 5 பேரும் அங்கு லாரிகளில் கிளீனராக பணிபுரிந்து வருவது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு முகாமிட்டு கங்கா, சுமன், கார்த்திக் ஆகிய 3 மாணவர்களை கைது செய்தனர்.

செல்வகுமார், தங்கராஜ் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கிறார்கள். கைதான 3 மாணவர்களும் 17 வயதுக்குட்பட்டவர்கள் என்பதால் போலீசார் அவர்களை சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

சுனாமி - 7 வருடங்களின் பின் பெற்றோருடன் இணைந்த சிறுமி!

கடந்த 2004ம் ஆண்டு ஆசிய பிராந்தியத்தை தாக்கிய சுனாமியின் போது உயிரிழந்ததாக நம்பப்பட்ட சிறுமியொருவர் 7 வருடங்களின் பின்னர் தனது பெற்றோருடன் மீள இணைந்து கொண்ட சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.

இந்தோனேசிய சுமாத்ரா தீவினுள் உஜொங் பரோக் பிராந்தியத்திலுள்ள கிராமமொன்றைச் சேர்ந்த வதி என்ற 8 வயது சிறுமியே 7 வருடங்கள் கழித்து தனது பெற்றோருடன் மீள இணைந்துள்ளார். தற்போது வதியின் வயது 15 ஆகும்.

தமது கிராமத்தை சுனாமிப் பேரலை தாக்கியபோது வதியின் தாயாரான யஸ்னியா வதியுடனும் ஏனைய இரு பிள்ளைகளுடன் தப்பித்துக் கொள்ள முயற்சித்துள்ளார்.

ஆனால் யஸ்னியின் பிடியிலிருந்து விடுபட்ட வதி சுனாமி வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

அவரைத் தேடிக் கண்டுபிடிக்க அவரது பெற்றோர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதனையடுத்து வதி இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை வதியின் தாத்தாவான இப்ராஹிம், முயலாபோர் நகரிலுள்ள தனது வீட்டில் நபரொருவரை சந்தித்தார்.

அவருடன் 15 வயது சிறுமியான வதியும் வந்திருந்தார். வதிக்கு தனது பாட்டனாரான இப்ராஹிமை தவிர தனது குடும்பத்தினர் எவரது ஞாபகமும் இல்லாதிருந்தது.

தனது வீட்டிற்கு செல்லவழி தெரியாது தேனீர்சாலையொன்றில் வதி தனிமையில் அமர்ந்திருந்த போதே அவரைக் கண்டு அழைத்து வந்ததாக இப்ராஹிமின் நண்பர் தெரிவித்தார்.

இதனையடுத்து வதியின் தாயாரான யுஸினாருக்கும் தந்தைக்கும் தகவல் பறந்தது.

சிறுமியின் முழங்கையில் காணப்பட்ட தழும்பொன்றை அவதானித்து அவரே தமது மகள் என அவரது பெற்றோர் அடையாளங்கண்டு கொண்டனர்.

இவர் தன்னை தத்தெடுத்த பெண்ணொருவரால் பிச்சையெடுக்க வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இடது சாரியின் மாற்றம் கிரக மாற்றமா..?


நம்ப முடியாத படி நாடகம் எங்கள் தமிழீழத்தில் நம்பும் படியாக இப்படியும் அப்படியும் அங்கு..
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சை நிறுத்தி மேடையிலிருந்து வெளியேறித் தமிழ் மக்களின் உரிமைக்காகத் தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்குத் தயாராக வேண்டும்.
இப்படி…
இடதுசாரிகள், கூட்டமைப்பிராகிய சிங்கள அமைச்சுக்கள் அறிக்கை விடுவது அதிர்ச்சி தருகின்றது.
நம்புவோமா..?
எந்தவொரு முடிவுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்குவதற்குத் தயாராகவே உள்ளதாகவும்.
உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர் அமைப்புகளை ஒன்றுதிரட்டும் நடவடிக்கையையும் கூட்டமைப்பு, உடன் ஆரம்பிக்க வேண்டும் என இடது சாரியான நவசமசமாயக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இந்த அறிக்கையில்…

அரசியல் தீர்வு விவகாரம் தொடர்பாக தமிழீழ ஊடகச்சகோதரர்க்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே நவசமசமாயக் கட்சியின் பொதுச்செயலாளரும் தெகிவளை கல்கிசை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன மேற்கண்டவாறு தெரிவித்திந்தார்.!

மேலும் கூறியதில் :

வெளிநாடுகளில் நகரசபைகளுக்குக்கூட காவல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், மாகாணசபைகளுக்கு காவல்துறை அதிகாரம் உட்பட முக்கியமான அதிகாரங்களை வழங்குவதற்கு மகிந்த அரசு மறுப்புத் தெரிவிக்கின்றது.

மகிந்தர் நியமித்த நல்லிணக்க ஆணைக்குழுவே அதிகாரப் பரவலை வலியுறுத்தியுள்ளது.
நிலைமை அப்படியிருக்கையில், அரசு மழுப்பல் போக்கைக் கடைப்பிடிப்பது ஏன்?

13ஆவது அரசமைப்பில் திருத்தம் செய்யவுள்ளோம் என அரசு கூறுவது அபத்தமானது. இதனை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இனவாதம் என்ற கொடூர அரக்கன் சிறுபான்மையினத்தவரின் உரிமைகளை விழுங்கி ஏப்பம் விடுகின்றான். பிரதான எதிர்க்கட்சியில் இனவாதப் போக்குடையவர்கள் இருப்பதும் மகிந்த அரசுக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது.

சக்திவாய்ந்த எதிர்க்கட்சி ஒன்று அவசியம். அதனைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரும் முயற்சிக்க வேண்டும். இல்லையேல் நாடு படுபாதாளத்தை நோக்கிப் பயணிக்கும்.

அதைத் தரமாட்டோம்; இதைத் தரமாட்டோம் எனக் கூறிக்கொண்டு பேச்சைத் தொடர்பவர்களுடன் பேசுவதில் எந்தப் பயனுமில்லை.

கூட்டமைப்பு, உடன் பேச்சு மேடையிலிருந்து வெளியேறி தேசிய, சர்வதேச ரீதியில் பெரும் உரிமைப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.!

உள்நாட்டிலுள்ள சிங்கள மக்களுக்குத் தமிழர்களின் பிரச்சினையைத் தெளிவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பு பெரும் கூட்டங்களைத் தெற்கில் நடத்தவேண்டும். அதற்கு நாம் பூரண ஒத்துழைப்பையும் வழங்குவோம் என்றார்.
என்று தெருவித்தது இடது சாரி.

இதில் எப்படி நம்புவது என்பது தமிழ் மக்கள் ஊடகப்பக்கம் திரும்பி செய்திகளை படித்து பதிலை எங்களிடமே கேட்கின்றனர்.
ஆனால்..?
நாங்கள் ஏமாறுவது இயல்பானதாகவிட்ட குணமாகிவிட்டது.
எனினும் நாங்கள் அவதானத்துடன் செயல்படுவோம் என அறிவுறுத்துகின்றோம்.

காத்திருப்போம்.

துரோகியை விட எதிரி தான் நண்பனாக மாற முடியும் இதுவும் கடந்து போகும் போது தான் உணர முடியும் அல்லவா ..?
உங்களுக்கு நாங்கள் வளி காட்டி என்பதையும் தாண்டி மக்களாகவே நாங்களும் வாழ்கின்றோம்.
எனினும் உங்கள் கேள்விக்கு விடை தெளிவாக கிடைக்கும்.!!!

Friday 23 December 2011

மனம் கொத்திப் பறவை

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஒலிம்பியா மூவீஸ் சார்பில் எழில், அம்பேத்குமார், ரஞ்சீவ் மேனன் தயாரிக்கும் படம், 'மனம் கொத்திப் பறவை'. சிவகார்த்திகேயன், ஆத்மியா, இளவரசு, சூரி, ரவிமரியா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, சூரஜ் நல்லுசாமி. இசை, இமான். பாடல்கள், யுகபாரதி. படத்தை இயக்கும் எழில், நிருபர்களிடம் கூறியதாவது: நான் இயக்கிய 'துள்ளாத மனமும் துள்ளும்', 'பெண்ணின் மனதைத் தொட்டு' உட்பட பல படங்கள் நகரம் சார்ந்த கதைகளை கொண்டது. இப்போது கிராமத்துக் காதல் கதையுடன் இந்தப் படத்தை இயக்குகிறேன். காமெடிக்கும், யதார்த்தத்துக்கும் முக்கியத்துவம் இருக்கும். தஞ்சையிலுள்ள என் சொந்த கிராமத்தில் ஷூட்டிங் நடக்கிறது. இக்கதையை பலரிடம் சொன்னபோது, யாரும் தயாரிக்க முன்வரவில்லை. பிறகு நண்பர்களுடன் இணைந்து நானே தயாரிக்கிறேன். இந்தப் படம் ரசிகர்களுக்கு புது அனுபவமாக இருக்கும்.


புலி ஆதரவு நடராஜனை புறந்தள்ளி ஜெயலலிதா – காங்கிரஸ் உறவுக்கு பாலம் அமைக்கப்படுகிறதா...

சசி மாற்றமா இல்லை சனி மாற்றமா சந்தைக்கு வராத கேள்விகள்.

சசிகலா குடும்பத்தினர் அதிமுகவில் இருந்து அதிரடியாக வெளியேறியது குறித்து தமிழக பத்திரிகைகள் சூடு பறக்க எழுதி வருகின்றன.

ஆனால் முக்கியமான கேள்விகள் சிலதை அப்பத்திரிகைகள் வசதி கருதி கேட்காமலும் விட்டும் வருகின்றன.

கேள்வி: 01

ஜெயலலிதா, கலைஞர் இருவரும் சிறீலங்கா புகழ் மகிந்த ராஜபக்ஷவைப் போல ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டவர்கள். நேற்று முன்தினம் நடைபெற்ற சனி மாற்றம் ஜெயலலிதாவின் ஆட்சியையே பறித்துவிடக்கூடியது என்று அவருடைய ஆஸ்தான ஜோதிடர்கள் உசுப்பேற்றி விட்டிருக்கலாம். அதற்கேற்ப ஒரு பரிகாரம் வேண்டுமெனவும் சோ. ராமசாமி போன்ற இந்துத் தீவிரவாதிகள் சொல்லியிருக்கலாம். சசிகலா குடும்பத்தை விரட்டி அந்த சனி தோஷத்திற்கு பரிகாரம் தேடியிருக்கலாம். ஏற்கெனவே சசிகலாவுடன் மாலை மாற்றி பரிகாரம் செய்த ஜெயலலிதா அதுபோல இந்த நாடகத்தையும் ஏன் அரங்கேற்றியிருக்கக் கூடாது ? இதை ஏன் எவரும் மூட நம்பிக்கைகளின் பக்கமாகப் பார்க்கவில்லை..?

கேள்வி: 02

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஜெயலலிதாவின் அதிமுகவை தாண்டி பெரிய விடயமாக பேசப்பட ஆரம்பித்துவிட்டது. இந்த விவகாரத்தை உடனடியாக திசை திருப்ப இப்படியொரு நாடகம் அவசியம். இப்போது தமிழக ஊடகங்கள் கோபாலசாமி, சீமான் போன்றவர்களின் முல்லைப் பெரியாறு முழக்கங்களை கைவிட்டுவிட்டன. விஜயகாந்த் கிறிஸ்மஸ் பிரியாணி கொடுக்க வேண்டிய நிலைக்கு வந்துள்ளார். ஸ்டாலின் வைத்தியசாலை போயுள்ளார், அரசியல் பேசாத ஏ.ஆர்.ரஹ்மான் டேம் 999 ற்காக பேச வேண்டிய நெருக்கத்தை சந்தித்துள்ளார். வண்டலூர் செக்ஸ்புலி, டெல்லி குரங்கு மனிதன் போல சசிகலா விவகாரம் ஒரு கவனத்திசை திருப்பலாக ஏன் இருக்கக்கூடாது ?

கேள்வி: 03

சசிகலா குடும்பம் ஊழல் புரிந்தது உண்மைதான் என்றாலும், ஜெயலலிதா ஊழல் புரியாதவர் அல்ல, அவர் மீது சொத்துக்குவிப்பு வழக்கு நடைபெறுகிறது. இந்த வழக்கில் ஏதாவது திருப்பத்தை ஏற்படுத்த அவர் முயல்கிறாரா என்பது அவதானிக்கத்தக்கது. காரணம் ஜெயலலிதா குறித்த உண்மைகளை சசி குடும்பம் நீதிமன்றில் வெளியிட்டாலும் கட்சியில் இருந்து விலத்தப்பட்ட பின் வெளியிடுவதால் அவை அனைத்தும் காழ்ப்புணர்ச்சி என்ற தலைப்பிற்குள் வந்துவிடும். மேலும் நிருபாமாராவ் – ஜெயலலிதா இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். கொஞ்சம் பின்னால் போய் பார்த்தால் சசிகலாவின் கணவர் நடராஜன் இங்கிலாந்து மாவீரர் நாளில் சென்ற ஆண்டு பேசியுள்ளார். எனவே சசி குடும்பம் நீக்கப்பட்டு, காங்கிரஸ் – ஜெயலலிதா உறவுக்கான அஸ்த்திவாரமிடப்படுகிறதா ? ஜெயலலிதாவை தூய்மை மிக்கவராகக் காட்டி, காங்கிரஸ் ஜெயலலிதாவுடன் கூட்டு வைத்து தேர்தலை சந்திக்க முயல்கிறதா..? ஜெயலலிதா புனிதம் பெற்றுவிட்டார் என்று சுப்பிரமணிய சாமி சொன்னது எதற்காக ?

கேள்வி: 04

இத்தனைக்குப் பின்னரும் சசிகலா குடும்பத்தினர் தமது தரப்பு நியாயங்களை கூறாமல் மௌனம் காப்பது எதற்காக? ஜெயலலிதாவின் உண்மைகளை வெளிவிடாதது ஏன்? சசிகலா குடும்பத்தினரிடம் வாக்குமூலம் பெறாமலே சகட்டுமேனிக்கு பத்திரிகைகளில் எழுதிக் குவிப்பது சரியா..? குற்றவாளியின் வாக்குமூலம் இல்லாத வழக்காக இந்த விவகாரம் ஒரு பக்கப் பாதையில் நகர்வது சரியா..? இந்த நிலையில் தமிழக போலீஸ் சசிகலா குடும்பத்திற்கு பாதுகாப்பு கொடுத்ததா? இது குறித்த போலீஸ் அறிக்கை வெளிவராதது ஏன்?

கேள்வி: 05

ஜெயலலிதாவிற்கு தடிமன் வந்தால் தும்மல் என்று காலைச் செய்திக்கு அறிக்கைவிடும் கருணாநிதி மூச்சுப்பேச்சு இல்லாமல் இருப்பது எதற்காக ? மேலும் காங்கிரசும் கை கழுவிப்போகப் போகிறது என்பதா ஸ்டாலின் இதயத்தை பாதித்த அதிர்ச்சிக்கான காரணம்..? சன் டி.வியிடம் சசிகலா குடும்பம் பணம் வாங்கியுள்ளது என்றால் மாறன் குடும்பமும் பல்டியடிக்கப்போகிறதா..?

இந்த ஐந்து கேள்விகளையும் மனதில் வைத்து சசிகலா விவகாரத்தை சிந்தித்தால் மேலும் பல புதிய விடைகள் கிடைக்கலாம். உலக அரசியலும், பெரும் போர்களும் பூவா தலையா போட்டுப்பார்த்து எடுக்கப்பட்ட முட்டாள்தனமான முடிவுகளே என்பதை எண்ணிப் பார்த்தால் இதில் மறைந்துள்ள வெளிவராத மர்மப் பித்தை கெல்லி எடுக்கலாம்.

இந்த ஐந்து கேள்விகளும் ஊகங்களும் சரியாக இருந்தால் எதிர்காலத்தில்:

01. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலை பெறலாம். (ஏற்கெனவே வழக்கு ஒத்திவைக்கப்பட்டுவிட்டது)

02. ஜெயலலிதா – காங்கிரஸ் இணைந்து அடுத்த தேர்தலை சந்திக்கலாம். (நிருபாமாராவ் ஜெயலலிதாவை சந்தித்துவிட்டார்)

03. சசிகலா குடும்பம் யாதொரு தண்டனையும் பெறாது. (இதுவரை அவர்கள் ஊழலுக்காக கைது செய்யப்படவில்லை. திமுகவில் ஊழல் செய்தவரை சிறையில் போடும் ஜெயலலிதா இவரை மட்டும் போடாதது ஏன்)

04. ஈழத் தமிழர் விவகாரம் ஜெயலலிதாவால் குப்பையில் வீசப்படும். (இப்போது அவர் அதை பேசுவதே இல்லை)

05. ஜெயலலிதா ஈழத் தமழருக்காக பேசக் காரணம் நடராஜனின் தப்பான வழிகாட்டலே என்று அடுத்த செய்தி வரலாம்.

06. ஜெயலலிதாவின் பதவியை காக்கவே அவர் இவைகளை செய்தார் இது அறிவு பூர்வமான விடயம் என்று சோ ராமசாமி பின்னர் ஒரு நாள் கூறலாம். விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளருக்கு அடித்ததை நியாயப்படுத்திய சோ ராமசாமிக்கு இது பெரிய வேலை இல்லை.

எழுத்து: அலைகள் தென்னாசிய அரசியல் சிந்தனைப் பிரிவு 23.12.2011

"உச்சிதனை முகர்ந்தால்" - ஈழத்தமிழர்களுக்காக ஈழத்தமிழர்கள் எடுத்த திரைப்படம்

நோர்வே வாழ் ஈழத்தமிழர்கள் தமிழகத் தமிழர்களுடன் இணைந்து முதன் முறையாக முழு நீளத் தமிழ்த் திரைப்படமாக 'உச்சிதனை முகர்ந்தால்' என்னும் திரைக்காவியத்தை தயாரித்திருப்பது யாவரும் அறிந்ததே.

மட்டகளப்பில் பிறந்து வளர்ந்த புனிதவதியின் வாழ்க்கையில் நடந்தவற்றை பின்னணியாக கொண்டு இத்திரைகாவியத்தை இயக்குனர் புகழேந்தி தங்கராஜ் அவர்கள் தீட்டியிருந்த வேளையில்தான் நோர்வே வாழ் தமிழர்கள் அவருக்கு உறுதுணையாக இருக்க முடிவு செய்து அவருடன் உழைத்து இன்று உங்கள் கண் முன்னாள் திரைப்படமாக உருவாகி நிற்கிறது.
இத்திரைப்படத்தில் புனிதாவை பார்க்கும் ஒவ்வொருவரும் அவளோடு சேர்ந்து சிரிப்பான் அவளோடு சேர்ந்து அழுவான்.

ஏற்கனவே தமிழகத்தில் வெளியாகி மக்களின் ஆதரவினைப் பெற்று நிற்கும் இத்திரைப்படம் இன்னும் ஓரிரு நாட்களில் ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலிய, கனடா உள்ளிட்ட நாடுகளில் வெளியாக இருக்கிறது.

எமது மக்களின் வாழ்வை, அவர்களின் அழிவை, வலியை, போராட்டத்தை எவ்வித சமரசமும் இன்றி உருவாக்கி இந்திய தணிக்கை குழுவின் அனுமதியும் பெற்று இத்திரைப்படம் வெளியாக இருக்கின்றது என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இத்திரைப்படத்தில் தமிழருவி மணியன் அவர்களின் கூர்மையான வசனமும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் உணர்ச்சியும் வீரமும் கலந்த பாடல்களும் இடம்பெற்று படத்திற்கான சிறப்பை அதிகரித்திருக்கிறது. எமது போராளிகளை பெருமைபடுத்தும் விதமாகவும் நினைவூட்டும் விதமாகவும் இத்திரைப்படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களுக்கு பேராசிரியர் நடேசன் (சத்யராஜ்), காவல் அதிகாரி சார்ல்ஸ் ஆண்டனி (சீமான்), போராளி பெண் துர்கா என பெயர் சூட்டியிருக்கிறோம்.

முள்ளிவாய்க்கால் முடிந்த சில மாதங்களில் வந்த தீபாவளி திருநாளை கொஞ்சமும் கூச்சமின்றி கொண்டாடிய தமிழக மக்களுக்கு (ஏன், ஈழத்தமிழர்களுக்கும்தான்) அந்த தவறை உணர்த்தும் விதமாக புனிதவதியின் காட்சி ஒன்று திரைப்படத்தில் வருகிறது. அதனைப் பார்த்த தமிழகப் பெண்மணி ஒருவர், "நாமெல்லாம் அழுதுகொண்டிருந்த பொழுது கொஞ்சமும் வெட்கமின்றி இந்த தமிழினம் தீபாவளியைக் கொண்டாடியது. எங்கள் கண்ணுக்கு முன்னாலும் கண்ணுக்குத் தெரியாமலும் தமிழகத்திலும் ஈழத்திலும் எத்தனையோ புனிதவதிகள் ஆதரவின்றி நடந்துகொண்டிருந்த அந்த வேளையில் எதனையும் கவலைப்படாமல் பண்டிகைகளில் மூழ்கியிருந்த தமிழினத்தை இத்திரைப்படம் சவுக்கடி கொடுக்கிறது" என்றார்.

படம் பார்த்துவிட்டு கருத்து தெரிவித்த வைகோ அவர்கள், " என்னுடைய நூறு மேடைகள் செய்யாத எழுச்சியை இத்திரைப்படம் கொடுக்கும்" என்றார். சீமான் அவர்கள், | " உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் மற்றுமொரு படமல்ல, அது நம் தமிழர்களின் குருதி சிந்தும் வரலாற்றின் குறியீடு என்பதை அனைத்து தமிழர்களும் உணர வேண்டும்" என்றார்.
கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் , " எமது ஈழத்துப் போராட்டத்தை எவ்வித சமரசமும் இன்றி அதேவேளையில் எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி முதன் முறையாக ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அனைத்து தமிழீழ மக்களும் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும்" என்றார்.

தமிழக முஸ்லிம் தலைவரும் நிகழ்கால சட்டமன்ற உறுப்பினருமான ஜவஹருல்லாஹ் அவர்கள், " மனிதநேயம் உள்ளவர்கள் இத்திரைப்படத்தை பார்க்க வேண்டும். படம் பார்த்துவிட்டு வந்து பல நாட்கள் ஆகியும் புனிதவதி என்னுள் ஆக்கிரமித்து என்னை கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறாள்" என்றார்.

இறுதியாக எமக்கு கிடைத்த தகவலின்படி இந்தியாவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் இத்திரைப்படத்தை தோல்வியுறச் செய்ய பெரு முயற்சியில் இறங்கியிருக்கிறது. அனைத்து தடைகளையும் இத்திரைப்படம் உடைத்து 'உச்சிதனை முகர்ந்தால்' எடுக்கப்பட்ட நோக்கத்தை நிறைவுச் செய்யும் என்பதை உறுதியாக கூறிக்கொள்கிறோம்.

காசி ஆனந்தன் அவர்களின் 'இருப்பாய் தமிழா நெருப்பாய்' பாடல் காட்சியில் ஈழத்து கலைஞன் பிரேம் கோபால் நடனமாட ஈழத்து வரைபடம் வந்து போகும் அக்காட்சிக்கு தமிழக திரையரங்கில் படம் பார்த்த அனைவரும் பலமான கைதட்டலைக் கொடுத்தபொழுது எமது சோர்வுகள் வலிகள் என அனைத்தும் மறந்து ஆனந்த கண்ணீர் விட்டோம். தமிழீழம் கனவை இத்திரைப்படம் நிச்சயம் வெற்றிப் பாதையில் கொண்டு செல்லும் என்னும் பெருமிதத்தோடு உங்கள் முன் உங்கள் ஆதரவினை வேண்டி நிற்கிறோம். ஒரு சில நாட்களில் திரைப்படம் மூலம் உங்களைச் சந்திக்கிறோம். தமிழர்கள் குடும்பம் குடும்பமாக இத்திரைப்படத்தைப் பார்த்து இது போல பல படைப்புகள் வர காரணமாக இருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன்,
உச்சிதனை முகர்ந்தால் தயாரிப்பாளர்கள்.

கப்டன் தரத்திலுள்ள இராணுவ அதிகாரியைக் கடத்திய ஒட்டுக்குழு: அறிக்கை அம்பலம்!

இலங்கை இராணுவத்தில் பணி புரிந்த மற்றும் கப்டன் தரத்தில் இருந்த உயர் அதிகாரி ஒருவர் கடத்தப்பட்டுள்ளார் என்ற சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. 2003ம் ஆண்டு இலங்கை இராணுவத்தில் ஒரு பிரிவின் கப்டனாகப் பணி புரிந்த விக்கிரமசிங்க என்பரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். 51 வயதுடைய இவர் 2 பிள்ளைகளின் தந்தையும் ஆவார். சம்பவ தினமன்று இவரைத் தொடர்புகொண்ட சிலர் பெனாண்டோ என்று அழைக்கப்படும் இவரது நண்பரின் பெயரைச் சொல்லி இவருடன் தொலைபேசியில் பேசியுள்ளனர். தன்னை பார்க்க தம்புள்ளை வருமாறு பெனாண்டோ கூறியது போலவே இவரிடம் கூறியுள்ளனர். இதனை நம்பிய விக்கிரம்சிங்க அது ஒரு பொறி என்று தெரியாமல் அங்கே சென்றுள்ளார். சென்ற அவரை வெள்ளைவான் கடத்திச் சென்றுள்ளது.

இவ்வாறு கடத்திச் செல்லப்பட்ட விக்கிரமசிங்கவை ஒட்டுக்குழுக்கள் சுமார் 11 நாட்கள் வைத்திருந்திருக்கிறார்கள். விக்கிரமசிங்கவை அவர்கள் கடுமையாகத் தாக்கி சித்திரவதை செய்துள்ளனர். துப்பாக்கியால் சுட்டுவிடுவோம் என மிரட்டி உள்ளனர். விக்கிரமசிங்க தன்னச் சுடும்படி அக் குழுவிடம் கூறியுள்ளார். உங்கள் சித்திரவதைகளை தாங்கும் சக்தி எனக்கு இல்லை எனவே என்னைச் சுட்டுவிடுங்கள் என அவர் மன்றாடியுள்ளார். அதன் பின்னர் அவர்கள் தமிழில் ஒரு கடிதத்தைக் கொடுத்து அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்து எழுதும் படி கூறியதோடு அதில் கையொப்பமிடுமாறும் கோரியுள்ளனர். இதன் பின்னர் ஒட்டுக்குழுவினர் விக்கிரமசிங்கவை CஈD பொலிசாரிடம் கையளித்துள்ளனர்.

விக்கிரமசிங்க பின்னர் 4ம் மாடிக்கு மாற்றப்பட்டுள்ளார். இதன் பின்னரே அவரது மனைவிக்கு விடையம் தெரிந்துள்ளது. ஏன் தனது கணவரைக் கைதுசெய்து வைத்திருக்கிறீர்கள் என மனைவி கேட்டபோது நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவினீர்களா என சற்றும் சம்பந்தம் இல்லாத கேள்விகளைக் கேட்டு இரகசியப் பொலிசார் அவர் வாயை அடைத்துள்ளனர். அதாவது மேலதிகமாக ஏதாவது கதைத்தால் விக்கிரமசிங்கவின் நிலைதான் அவர் மனைவிக்கும் வரும் என்பதனை அவர்கள் சொல்லாமல் சொல்லி இருக்கிறாரகள் அவ்வளவுதான். 4ம் மாடியில் வைத்து பல படிவங்களில் கையெழுத்தை வாங்கிக்கொண்டு விக்கிரமசிங்கவை 2009ம் ஆண்டு அவர்கள் நீதிமன்றின் முன் நிறுத்தியுள்ளனர். பின்னர் 2010ம் ஆண்டு அவர் போகம்பாற சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதுவரை நாம் அவர் எப்போது கடத்தப்பட்டார் என்பதனை இங்கே குறிப்பிடவில்லை. அவர் 26ம் திகதி யூன் மாதம் 2006ம் ஆண்டு தம்புல்லையில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்டார். அன்று முதல் சுமார் 4 வருடங்கள் அவர்மேல் எந்தக் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை. அவர் எந்த நீதிமன்றத்துக்கும் கொண்டுசெல்லப்படவில்லை. இன்றுவரை அவர் மேல் எந்த ஒரு குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை என்பது பெரும் அதிர்ச்சி தருவதாக ஆசிய மனித உரிமை அமைப்பு பெரும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. குற்றஞ்சுமத்தப்படாமலே பல வருடங்களாக இவர் சிறையில் இருக்கிறார். அவ்வாறு ஒருவரை தொடர்ந்து சிறையில் வைத்திருக்க இலங்கை நீதிமன்றம் எவ்வாறு அனுமதி கொடுத்தது என அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. குற்றம் இருப்பின் அதனைத் தாக்கல் செய்யலாம் இல்லையேல் அவரை விடுதலை செய்யவேண்டும் என ஆசிய மனித உரிமை கழகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

முன் நாள் இராணுவக் கப்டனுக்கே இலங்கையில் இந்த நிலை என்றால் சாதாரன பொதுமக்களின் அதுவும் தமிழர்களின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்விகள் தற்போது மேலோங்கியுள்ளது. ஆசிய மனித உரிமைக் கழகம் இந்த வழக்கு தொடர்பாக வெளிப்படையாகவே தனது கருத்தை வெளியிட்டுள்ளது வரவேற்க்கத்தக்க விடையமாகும்.

SOURCE: http://www.scoop.co.nz/stories/WO1112/S00726/sri-lanka-senior-army-officer-arbitrarily-arrested.htm

அதிர்வு

ஆணாக இருந்து பெண்ணாக மாறிய தமிழர் சோனியாவைக் கொலைசெய்தார்!

கடந்த 2010 அக்டோபர் மாதம் லண்டன் கிங்-கிரஸ் ரயில் நிலையத்தில் டேவிட் பேர்ஜஸ் என்னும் (ஆணாக இருந்து பெண்ணாக மாறிய) சோனியா தற்கொலைசெய்துகொண்டார் என அறிவிக்கப்பட்டது. அவர் ஓடும் ரயிலின் முன்னால் விழுந்து தற்கொலைசெய்ததாக அறிவிக்கப்பட்டது. டேவிட் பேர்ஜய் என்னும் 63 வயதான நபர் தன்னை சத்திர சிகிச்சைக்கு உட்படுத்தியதன் மூலம் ஒரு பெண்ணாக மாறியிருந்தார். அவரை சோனியா என்று அழைப்பார்கள். சட்டவல்லுனரான சோனியா பல தமிழர்களுக்கு உதவியும் உள்ளார். இவர் விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளர் என சிங்கள அரசு திட்டமிட்ட பல பரப்புரைகளையும் முன்னர் மேற்கொண்டு இருந்தது. லண்டன் வாழ் ஈழத் தமிழர்கள் மத்தில் இவர் பிரபல்யமானவர். இவரின் மரணம் பலரை அதிர்ச்சியடையச் செய்தது என்றால் மிகையாகாது.

இவர் மரணம் தொடர்பாக ஆராய்ந்து வந்த மெட்ரோ பொலிடன் பொலிசார் தற்போது குற்றவாளியைக் கண்டுபிடித்துள்ளார்கள். குற்றவாளி வேறுயாரும் இல்லை இவருடன் கூடித் திரிந்த நண்பி என்று சொல்லப்படுகிறது. அவர் பெயர் செந்தூரன் கனகசிங்கம் ஆகும். 35 வயதான இந்த ஈழத் தமிழ் இளைஞன் சோனியா செய்தது போல தன்னையும் சத்திர சிகிச்சை மூலம் ஒரு பெண்ணாக மாற்றியுள்ளான். இதன் பின்னர் சம்பவ தினத்தன்று செந்தூரன் சோனியாவை கிங்-கிராஸ் ரயில்வே நிலையத்தில் சந்தித்துள்ளார். யாரும் அவதானிக்காதவேளை சோனியாவை செந்தூரன் ரயில் பாதையில் தள்ளியுள்ளார். மிகவேகமாக வந்த ரயில் அவர்மேல் மோதியுள்ளது. இதனை எவரும் அவதானிக்கவில்லை என்பதே பெரும் வியப்பாகும்.

ஆனால் பிரித்தானியப் பொலிசார் சும்மா விடுவார்களா ? பாதுகாப்புக் கமரா புற ஊதாக் கதிகர்களைக் கொண்டு இயங்கும் கமரா மற்றும் சி.சி.TV கமராக்களைப் பார்த்து குற்றவாளியைக் கண்டு பிடித்தாலும் அவர் தான் சோனியாவை தள்ளிவிட்டார் என்ற சரியான ஆதாரங்கள் இல்லாமல் அவர்கள் திணறியுள்ளனர். ஆனால் இறுதியில் செந்தூரன் தனது குற்றத்தை தாமே ஒப்புக்கொண்டுள்ளார். செந்தூரன் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும், அவர் சோனியாவைக் கொலைசெய்த நேரத்தில் மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை அவர் உட்கொண்டு வந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இப்போது தேறிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. இதனை அடுத்து அவருக்கு 7 வருட சிறைத்தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

அதிர்வு

MISSION: IMPOSSIBLE - ரகசிய வரைமுறை - 16.12.2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,


ஜேம்ஸ்பாண்ட் பாணி உளவாளி கதைகள் பெருவெற்றி பெற்றிருந்த காலம் 1960கள்! அப்போது தொலைக்காட்சித் தொடராக ஆரம்பித்த மிஷன் இம்பாசிபிள் மாபெரும் வெற்றியடைந்தது! அதன் வெற்றிக்கு லாலோ ஷிஃப்ரின் இசையமைத்த தீம் மியூசிக் மிகப்பெரிய காரணம்! பின்னர் 1996ல் டாம் க்ரூஸ் நடிப்பில் திரைப்படமாக வந்தது! அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட தொடர்ந்து படங்கள் வந்த வண்ணமிருந்தன!


மிஷன் இம்பாசிபிள் பட வரிசையின் மிகப் பெரிய ரசிகன் நான் இல்லை! இருப்பினும் அவாரிசைப் படங்கள் எப்போதுமே ஜனரஞ்சக வெற்றியில் சோடை போனதில்லை! ஆகையாலேயே இந்த நான்காம் பாகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது!


கதை:


வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் பாணி கதைதான்! ரஷ்ய அணு ஆயுதங்களை முடக்கி விடக்கூடிய ரகசிய கோட்-ஐ ஒரு தீவிரவாதி கைப்பற்றி விடுகிறான்! பழியோ அமெரிக்க உளவாளிகளான ஈதன் ஹண்ட் (டாம் க்ரூஸ்) குழுவின் மீது விழுகிறது! ஆகையால் அவர்களுக்கு அமெரிக்க உளவுத்துறையிடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்காத நிலை உருவாகிறது!

பிறகு ஈதன் ஹண்ட் குழுவினர் ரஷ்யா, துபாய், இந்தியா என்று ஊர் சுற்றி சாகஸம் செய்து உலகை எப்படி காப்பாற்றினார்கள் என்பது தான் கதை!


சுவாரசியமான துணுக்குகள்:
  • வழக்கமாக மிக சீரியஸாக செல்லும் ஆக்‌ஷன் பட வரிசையான மிஷன் இம்பாசிபிள் தொடரில் இப்படம் ஒரு வரவேற்கத் தக்க மாற்றம்! படம் முழுக்க விரவிக் கிடக்கும் சுய நையாண்டி படத்தின் மிகப் பெரிய பலம்! மிஷன் இம்பாசிபிள் படங்கள் என்றாலே ஒரு சில குறிப்பிட்ட காட்சிகள் ஃபார்மூலா போல் எல்லா படங்களிலும் வரும்! அவை அனைத்தையுமே இப்படத்தில் நக்கல் செய்து விதிமுறைகளை மீறியுள்ளனர்! ஜேம்ஸ்பாண்ட் பட வரிசை ஏன் போரடிக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்! புதிதாக எதுவுமே முயற்சிப்பதில்லை!
  • மிஷனை விளக்கும் ஆரம்பக் காட்சியில் ரகசிய தகவல் வழங்கிய பின் அந்த டேப் வெடித்துச் சிதறுவது வழக்கம்! இப்படத்தில் அதுவும் கிண்டலுக்குள்ளாக்கப் பட்டுள்ளது! 
  • மிஷன் இம்பாசிபிள்  படங்களில் வழக்கமாக ஹீரோதான் மாஸ்க் அணிந்து சென்று வில்லன்களின் பாசறையில் நுழைந்து சாகஸம் செய்வார்! இதில் கடைசி வரை ஹீரோ மாஸ்க் அணிய முடியாமல் போகிறது! ஆனால் வில்லன் மாஸ்க் போட்டு ஹீரோவை ஏமாற்றி விடுகிறார்!
  • டாம் க்ரூஸிற்கு வயது ஏறவே ஏறாதோ?!! இன்னும் இளமை பொங்க வலம் வருகிறார்! ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் டூப் போடாமலே நடித்து அசத்தியுள்ளார்!
  • அந்த துபாய் ஸ்டண்ட் காட்சிகள் மயிர் கூச்செரிய வைக்கும் ரகம்! படத்தின் ஹை-லைட்டே அதுதான்! அற்புதம்! அற்புதம்!
  • ஆனால் அதற்கு பிறகு வரும் மணல் புயல் சண்டையும், இந்தியக் காட்சிகளும் சற்றே போர் அடிக்கின்றன!
  • அணில் கபூர் ஒரேயொரு காட்சியில் மட்டும் காமெடி பீஸாக வருகிறார்! இதற்கு இவருக்கு டாம் க்ரூஸுக்கு இணையாக பில்டப் போஸ்டர் வேறு! அவர் வரும் காட்சி மொக்கையோ மொக்கை!
  • மும்பை என்று சொல்லி விட்டு க்ளைமாக்ஸ் காட்சிகள் முழுவதையும் பெங்களூருவில் எடுத்துள்ளனர்! பெங்களூரு சன் டிவி ஆபீசும் முக்கிய காட்சியில் வருகிறது! இதனாலேயே இரண்டாம் பாதி காட்சிகள் மனதில் ஒட்டவில்லை!
நிறைகள்:
  • டாம் க்ரூஸ்!
  • மயிர்கூச்செரிய வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்!
  • படம் நெடுக விரவிக் கிடக்கும் நையாண்டி தொணி!
குறைகள்:
  • அணில் கபூர்!
  • மணல் புயல் காட்சி!
  • இந்தியாவில் படமாக்கப் பட்ட காட்சிகள் மனதில் ஒட்டவில்லை!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

4/6 - நான்கு தோட்டாக்கள்!
ஒரு கட்டை விரல் மேலே!

ஆக்‌ஷன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்!

ட்ரைலர்:

MISSION: IMPOSSIBLE - ரகசிய வரைமுறை - 16.12.2011 - திரைவிமர்சனம்!

வணக்கம்,


ஜேம்ஸ்பாண்ட் பாணி உளவாளி கதைகள் பெருவெற்றி பெற்றிருந்த காலம் 1960கள்! அப்போது தொலைக்காட்சித் தொடராக ஆரம்பித்த மிஷன் இம்பாசிபிள் மாபெரும் வெற்றியடைந்தது! அதன் வெற்றிக்கு லாலோ ஷிஃப்ரின் இசையமைத்த தீம் மியூசிக் மிகப்பெரிய காரணம்! பின்னர் 1996ல் டாம் க்ரூஸ் நடிப்பில் திரைப்படமாக வந்தது! அதுவும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட தொடர்ந்து படங்கள் வந்த வண்ணமிருந்தன!


மிஷன் இம்பாசிபிள் பட வரிசையின் மிகப் பெரிய ரசிகன் நான் இல்லை! இருப்பினும் அவாரிசைப் படங்கள் எப்போதுமே ஜனரஞ்சக வெற்றியில் சோடை போனதில்லை! ஆகையாலேயே இந்த நான்காம் பாகத்துக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது!


கதை:


வழக்கமான ஜேம்ஸ்பாண்ட் பாணி கதைதான்! ரஷ்ய அணு ஆயுதங்களை முடக்கி விடக்கூடிய ரகசிய கோட்-ஐ ஒரு தீவிரவாதி கைப்பற்றி விடுகிறான்! பழியோ அமெரிக்க உளவாளிகளான ஈதன் ஹண்ட் (டாம் க்ரூஸ்) குழுவின் மீது விழுகிறது! ஆகையால் அவர்களுக்கு அமெரிக்க உளவுத்துறையிடமிருந்து எவ்வித உதவியும் கிடைக்காத நிலை உருவாகிறது!

பிறகு ஈதன் ஹண்ட் குழுவினர் ரஷ்யா, துபாய், இந்தியா என்று ஊர் சுற்றி சாகஸம் செய்து உலகை எப்படி காப்பாற்றினார்கள் என்பது தான் கதை!


சுவாரசியமான துணுக்குகள்:
  • வழக்கமாக மிக சீரியஸாக செல்லும் ஆக்‌ஷன் பட வரிசையான மிஷன் இம்பாசிபிள் தொடரில் இப்படம் ஒரு வரவேற்கத் தக்க மாற்றம்! படம் முழுக்க விரவிக் கிடக்கும் சுய நையாண்டி படத்தின் மிகப் பெரிய பலம்! மிஷன் இம்பாசிபிள் படங்கள் என்றாலே ஒரு சில குறிப்பிட்ட காட்சிகள் ஃபார்மூலா போல் எல்லா படங்களிலும் வரும்! அவை அனைத்தையுமே இப்படத்தில் நக்கல் செய்து விதிமுறைகளை மீறியுள்ளனர்! ஜேம்ஸ்பாண்ட் பட வரிசை ஏன் போரடிக்கிறது என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்! புதிதாக எதுவுமே முயற்சிப்பதில்லை!
  • மிஷனை விளக்கும் ஆரம்பக் காட்சியில் ரகசிய தகவல் வழங்கிய பின் அந்த டேப் வெடித்துச் சிதறுவது வழக்கம்! இப்படத்தில் அதுவும் கிண்டலுக்குள்ளாக்கப் பட்டுள்ளது! 
  • மிஷன் இம்பாசிபிள்  படங்களில் வழக்கமாக ஹீரோதான் மாஸ்க் அணிந்து சென்று வில்லன்களின் பாசறையில் நுழைந்து சாகஸம் செய்வார்! இதில் கடைசி வரை ஹீரோ மாஸ்க் அணிய முடியாமல் போகிறது! ஆனால் வில்லன் மாஸ்க் போட்டு ஹீரோவை ஏமாற்றி விடுகிறார்!
  • டாம் க்ரூஸிற்கு வயது ஏறவே ஏறாதோ?!! இன்னும் இளமை பொங்க வலம் வருகிறார்! ஸ்டண்ட் காட்சிகள் அனைத்தும் டூப் போடாமலே நடித்து அசத்தியுள்ளார்!
  • அந்த துபாய் ஸ்டண்ட் காட்சிகள் மயிர் கூச்செரிய வைக்கும் ரகம்! படத்தின் ஹை-லைட்டே அதுதான்! அற்புதம்! அற்புதம்!
  • ஆனால் அதற்கு பிறகு வரும் மணல் புயல் சண்டையும், இந்தியக் காட்சிகளும் சற்றே போர் அடிக்கின்றன!
  • அணில் கபூர் ஒரேயொரு காட்சியில் மட்டும் காமெடி பீஸாக வருகிறார்! இதற்கு இவருக்கு டாம் க்ரூஸுக்கு இணையாக பில்டப் போஸ்டர் வேறு! அவர் வரும் காட்சி மொக்கையோ மொக்கை!
  • மும்பை என்று சொல்லி விட்டு க்ளைமாக்ஸ் காட்சிகள் முழுவதையும் பெங்களூருவில் எடுத்துள்ளனர்! பெங்களூரு சன் டிவி ஆபீசும் முக்கிய காட்சியில் வருகிறது! இதனாலேயே இரண்டாம் பாதி காட்சிகள் மனதில் ஒட்டவில்லை!
நிறைகள்:
  • டாம் க்ரூஸ்!
  • மயிர்கூச்செரிய வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகள்!
  • படம் நெடுக விரவிக் கிடக்கும் நையாண்டி தொணி!
குறைகள்:
  • அணில் கபூர்!
  • மணல் புயல் காட்சி!
  • இந்தியாவில் படமாக்கப் பட்ட காட்சிகள் மனதில் ஒட்டவில்லை!
தமிழ் சினிமா உலகின் பரிந்துரை:

4/6 - நான்கு தோட்டாக்கள்!
ஒரு கட்டை விரல் மேலே!

ஆக்‌ஷன் ரசிகர்கள் கண்டிப்பாக ஒருமுறை பார்க்கலாம்!

ட்ரைலர்:

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா