Saturday 15 October 2011

வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல அமெரிக்காவின் உதவியை நாடிய சரத் பொன்சேகா : வீக்கிலீக்


தான் உள்ளிட்ட தமது குடும்பத்தினர் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்குமாறு சரத் பொன்சேக்கா அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று இரண்டு தினங்கள் செல்லும் முன்னர், தான் உள்ளிட்ட தமது குடும்பத்தினர் வெளிநாடு செல்லும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்குமாறு முன்னாள் இராணுவ தளபதியும், எதிர்க்கட்சியின் பொது வேட்பாளருமான சரத் பொன்சேக்கா அமெரிக்க அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தாக விக்கிலீக்ஸ் இணையத்தளம் தகவல்கள் வெளியிட்டுள்ளது.
கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம், வோஷிங்டனில் உள்ள ராஜாங்க திணைக்களத்திற்கு அனுப்பி கேபிள் தகவல்களை அடிப்படையாக கொண்டு, அந்த இணையத்தளம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
சிங்கப்பூர் நோக்கி செல்லவே சரத் பொன்சேக்கா கோரிக்கை விடுத்திருந்தார். எனினும் இலங்கை படையினர் அவர் தங்கியிருந்த விடுதியை சுற்றிவளைத்திருந்ததுடன், அவர் போய் வரும் இடங்கள் குறித்து உன்னிப்பாக அவதானித்து வந்தன. இதன் பின்னர், சில குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அவர் கைதுசெய்யப்பட்டதுடன், அவருக்கு எதிராக மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

கனடா கடும் அழுத்தம் பொதுநலவாய மாநாட்டில் இலங்கை குறித்து விவாதிக்குமாறு

அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் எதிர்வரும் 28 30 காலப்பகுதியில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு இன்னும் இரண்டு வாரங்களே இருக்கும் நிலையிலும், இலங்கை விவகாரத்தில் அங்கத்துவ நாடுகளுக்கிடையே கருத்து வேறுபாடுகள் தோன்றக் கூடிய நிலையிலும், தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தின் இறுதியில் இடம் பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கும் பொறுப்புக் கூறும் விடயத்தில் இலங்கை அரசு முன்னேற்றத்தைக் காட்ட வேண்டுமென்ற கோரிக்கைகளை முன் நிறுத்தி கனேடிய பிரதமர் ஸ்டீபன் ஹார்பர் அழுத்தம் கொடுத்து வருகின்றார். மேற்படி உச்சிமாநாட்டில கேள்வியெழுப்பவுள்ளதாகவும் இலங்கையின் நடவடிக்கைகள் ஆக்கபூர்வமானவையாக அமையாதுவிடின், இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய கூட்டத்தை தான் பகிஷ்கரிக்கப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது தொடர்பாடல்கள் இணை இயக்குனரான அன்ட்ரு மக்டோகல் கருத்து வெளியிடுகையில், பொதுநலவாய மாநாட்டில் இது குறித்த கலந்துரையாடல் ஒன்றை நாம் எதிர்ப்பார்ப்பதுடன், பிரதமர் தனது நிலைப்பாட்டை அப்போது தெளிவுபடுத்துவார். ஒரு மாதத்திற்கு முன்னர் அவர் இனங்கள் பற்றிய ஊடகவியலாளர் சிலருடன் நடாத்தியிருந்த வட்ட மேசை மாநாடொன்றில் தெரிவித்திருந்த கருத்துக்களில் தொடர்ந்தும் மனவுறுதியுடன் இருப்பதாகவும் கூறினார்.

அந்தக் கூட்டத்திலேயே 2013 இல் பொது நலவாய மாநாட்டை இலங்கையில் நடாத்த அனுமதி அளிப்பது மற்றும் இலங்கை அரசால் புரியப்பட்டதாகக் கூறப்படும் மனிதவுரிமைகள் மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை ஆகியவை கனடாவின் நிலைப்பாடு குறித்து கேட்கப்பட்டிருந்த வினாக்களுக்கு ஹார்பர் பதிலளித்திருந்தமை தெரிந்தே.

பொதுநலவாய மாநாட்டின் போது இது குறித்து நான் தெளிவுப்படுத்தலாமென எண்ணியுள்ளேன். மனித உரிமைகள் விடயத்தில் இலங்கையின் நடவடிக்கை முன்னேற்றம் காணப்படாதவிடத்து, 2013 இல் அங்கு நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டில் நான் கனடாவின் பிரதமராகக் கலந்து கொள்ள மாட்டேன். ஏனைய நாட்டுத் தலைவர்களும் இதே நிலைப்பாட்டையே கொண்டிருப்பரென நம்புகிறேன். பொருத்தமான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டுமென்ற அழுத்தத்தை இது இலங்கைக்கு கொடுக்குமெனவும் நான் நம்புகின்றேன் எனவும் ஹாப்பர் பதிலளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் புலிகளுக்கெதிராகப் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் பற்றிய சர்வதேச விசாரணைக்கு உதவுவதுடன் மட்டுமன்றி, இலங்கையில் அரசியல் நல்லிணக்கம், ஜனநாயக விழுமியங்கள் மற்றும் பொறுப்புக் கூறும் தன்மை பற்றிய விடயங்களில் இலங்கை அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது அவசியமெனவும் வலியுறுத்திக் கூறிய அவர், இலங்கை அரசு படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் எதிராகச் சுமத்தியுள்ள போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் குறித்து சர்வதேச விசாரணை ஒன்று தேவை என்ற ஐ.நா. நிபுணர் குழுவின் பரிந்துரையை தான் ஆமோதிப்பதாகவும் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பரில் பிரதமர் தெரிவித்திருந்த கருத்துக்களில் எந்தவித மாற்றமும் இல்லையெனக் கூறிய மக்டோகல், 54 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள பொதுநலவாய அமைப்பு ஜனநாயக சீரமைப்பு மற்றும் சட்டத்தின் ஆட்சி என்பவற்றை கட்டியெழுப்புவதில் ஆதரவளித்து வருவதாகவும் மேலும் தெரிவித்தார்.

அதேவேளையில், இந்த விவகாரம் குறித்து பொதுநலவாய உச்சி மாநாட்டில் விவாதிப்பதை தனது நாடு விரும்பவில்லையென கனடாவுக்கான இலங்கைத் தூதுவர் சித்திராங்கனி வாசிஸ்வரா போஸ்ட் மீடியா செய்திச் சேவைக்கு கடந்த வெள்ளியன்று அளித்த செவ்வியில் கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், பேர்த்தில் நடைபெறும் மாநாட்டில் அங்கத்துவ நாடுகளிடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. கனடாவும் ,தனை ஆமோதிக்குமென நான் நம்புகின்றேன். இது பற்றி இறுதித்தீர்மானம் எடுப்பது கனடாவைப் பொறுத்ததே. அத்துடன் கடந்த 2009 இல் கூடிய பொதுநலவாய மாநாட்டுத் தலைவர்கள், எதிர்வரும் 2013 க்கான தங்கள் மாநாட்டை இலங்கையில் நடத்துவதென ஏற்கெனவே தீர்மானித்திருந்தனர் எனவும் குறிப்பிட்டார்.

இந்த விவகாரத்தை மீண்டும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வது அவ்வளவு நல்லதல்ல எனக் கூறிய அவர், இலங்கை அரசு புரிந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், அரசாங்கம் பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையை எடுத்திருந்ததெனவும் தெரிவித்தார்.

ஆயுதப்போராட்டம் படம் மூலம் கொச்சைப்படுத்தப்பட்ட தமிழீழம்


வளர்ந்து வரும் நடிகர் ஜெய் ஆகாஷ், இயக்குநர், தயாரிப்பாளர் என்று இன்னும் சில அவதாரங்கள் எடுத்திருக்கும் திரைப்படம் தான் ஆயுதப்போராட்டம். ஆனால் அவரது நடிப்பு அளவிற்கு கூட புதிய அவதாரங்களான எழுத்து, இயக்கம், தயாரிப்பு உள்ளிட்டவைக‌ள் தரமானதாக இல்லாததுதான் ஏமாற்றம்...!

ஒரு நாட்டில் உள்நாட்டு போரில் நீண்ட நெடுங்காலமாக ஈடுபட்டு வரும் போராளிகளை ஒழிக்க, மற்றொரு நாட்டின் ஆயுத சப்ளை நிறுவனம் ஆயுதம் வழங்குகிறது. இதனால் பாதிப்பிற்குள்ளாகும் போராளிகள், தங்கள் நாட்டிற்கு வரும் ஆயுத சப்ளை ஊழியர்கள் சிலரை காலி பண்ண களம் இறங்குகின்றனர். வென்றது போராளிகளா...? உண்மையை உணர்ந்து கொள்ளும் ஆயுதசப்ளை நிறுவன ஊழியர்களா...? என்பது க்ளைமாக்ஸ்! இந்த கதையுடன் காதல், ‌காமநெடி, காமெடி எல்லாவற்றையும் கலந்துகட்டி கலக்கலாக கதை சொல்ல முயன்று, படு லோக்கலாக படுத்தி எடுத்திருக்கிறார் இயக்குநர் ஜெய் ஆகாஷ்! ரசிகர்கள் தான் பாவம்!!


போராளித்தலைவனாகவும், ஆயுதசப்ளை நிறுவன ஊழியர்களில் ஒருவராகவும் ஹீரோ ஜெய் ஆகாஷ், இதில் டபுள் ஆக்ட் வேறு கொடுத்து வெறுப்பேற்றியிருக்கிறார். ஆனால் அவரது எழுத்து, இயக்கம், இத்யாதி, இத்யாதிகளுக்கு நடிப்பு பெட்டர் என்பது ஆறுதல்! படத்திற்கு "ஆயுதப்போராட்டம்" எனப்பெயர் வைத்துவிட்ட காரணத்தால், பாடல்காட்சிகளில் (மட்டும்) எல்லாம் துப்பாக்கியும் கையுமாக ஜெய், போஸ் கொடுப்பது செம காமெடி!

கதாநாயகிகள் ப்ரீத்தி மீனாள், அனிதாரெட்டி இருவருக்கும் நடிப்பை விட அவிழ்ப்பு(துணி)க்கு வாய்ப்பு அதிகம்! அதை இருவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டு ஜெய்யின் அட்டகாசங்களில் இருந்து ரசிகர்களை காபந்து செய்வது ஆறுதல்! தீப்பெட்டி கணேஷ், சாய்கிரன், அதித் சீனிவாஸ், நீரஜ் புரோகித், சித்திரம் பாஷா உள்ளிட்டவர்கள் ஜெய்க்கு பக்கபலமாக இருந்து ரசிகர்களை மேலும் பாடாய்படுத்தி விடுகின்றனர்.

சாய்சதீஷின் ஒளிப்பதிவு, நந்தன் ராஜின் இசை எல்லாம் நன்றாக இருந்தும், கதையும், களமும், இயக்கமும் சரியில்லாதது வருத்தம்! ஓபனிங் ஃபைட் சீனும், பாடல் காட்சிகளும் பிரமாதம்! பிரமாண்டம்!! க்ளைமாக்ஸில் நடிகர்சங்க போராட்டம் வலிய திணிக்கப்பட்டிருப்பது நாடகம்!

மொத்தத்தில் இலங்கை போராளிகளை கவுரவப்படுத்துகிறேன் பேர்வழி... என களமிறங்கி, இலங்கை இராணுவத்தை காட்டிலும் கொச்சைபடுத்தி இருக்கிறார் நடிகரும், இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜெய் ஆகாஷ்!

திருமணம் செய்த பூடான் மன்னருக்கு ராகுல்காந்தி வாழ்த்து


தனது நண்பரான பூடான் மன்னருக்கு திருமண வாழ்த்துக்கள் தெரிவித்தார் ராகுல் காந்தி.
பூடான் மன்னர் ஜிக்மி கெசார் நம்ஜியால் வாங்சுக் (31), தனது நீண்ட நாள் காதலி ஜெட்சன் பெமாவை (21) நேற்று முன்தினம் திருமணம் செய்தார். இவர்களது திருமணம் பழம் பெருமை வாய்ந்த புனாகா கோட்டையில் புத்த மத முறைப்படி நடந்தது.

திருமணத்தில் ஆயிரக் கணக்கானவர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவு செயலாளர், மேற்கு வங்காள கவர்னர் ஆகியோர் கலந்து கொண்டனர். நேரு குடும்பத்துக்கும், பூடான் மன்னர் குடும்பத்துக்கும் நீண்ட நாட்களாக நெருங்கிய உறவு இருந்து வருகிறது.

மேலும் பூடான் மன்னர் வாங்சுக்கும், காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியா காந்தியின் மகனுமான ராகுல்காந்தியும் நெருங்கிய நண்பர்கள். எனவே திருமண விழாவில் ராகுல்காந்தி நேரில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் எதிர்பார்த்தபடி அவரால் பங்கேற்க முடியவில்லை. இதற்கிடையே திருமணம் முடிந்து பூடான் மன்னர் தனது மனைவியுடன் தலைநகர் திம்புவுக்கு நேற்று கார் மூலம் புறப்பட்டார். அவர்களை ரோட்டின் இருபுறமும் திரண்டு நின்று ஆயிரக்கணக்கான மக்கள் வரவேற்றனர்.
வரும் வழியில் சாங்ளிங்மிதாங் என்ற இடத்தில் உள்ள மைதானத்தில் புதுமண தம்பதிகளான மன்னர் வாங்சுக்- ராணி ஜெட்சன் பெமாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி அளிக்கப்பட்டது. அப்போது அங்கு வந்த ராகுல்காந்தி பூடான் மன்னர் வாங்சுக்- பெமா தம்பதிக்கு நேரில் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

சிம்பு தேவன் இயக்கத்தில் தனுஷ்


கொமெடி இயக்குநரான சிம்பு தேவன் தனுஷை வைத்து இயக்குகிறார்.தற்பொழுது தனுஷின் அடுத்த படம் சிம்புதேவன் இயக்கத்தில் தயாராகிக்கொண்டிருக்கிறது.12ம் நூற்றாண்டுப் படமான இப்படத்திற்கு மாரீசன் எனப் பெயர் வைத்துள்ளனர்.படத்தில் தனுஷ் நான்கு வேடத்தில் வலம் வருகிறார்.ஆதிவாசியாய் வரும் கெட்டப்பில் கோவணம் கட்டி நடிக்கப் போகிறார்.
இம்சை அரசன் 23ம் புலிகேசி, இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் படங்களின் மூலம் வெற்றியை தேடியவர் சிம்பு தேவன்.ரசிகர்களை இந்தப் படத்தில் சிரிக்க வைக்காமல் விடமாட்டாராம் சிம்பு தேவன்.

விடுதலைப்புலிகளின் செயற்பாடு ஐரோப்பாவில் தணியவில்லை


விடுதலைப்புலிகளின் செயற்பாடு ஐரோப்பாவில் தணியவில்லை என்று நெதர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்; அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் இதுதொடர்பான செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. ..


இந்த நெதர்லாந்து வக்கீல்கள் புலி ஐரோப்பாவில் இருக்கின்றது என்பதற்கு காட்டும் ஆதாரங்கள் யாவை தெரியுமா?

புலிகள் 2010 இலும் பணம் சேகரித்துள்ளார்கள், நெதர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ள ஐவரில் ஒருவரான ஐரோப்பிய நிதிப் பொறுப்பாளர் சந்திரன் என்பவரின் வீட்டில் தேநீர் குவளைக்குள் ஒழித்து வைக்கப்பட்டிருந்த யூஎஸ்பி இனுள் 2010 ஆம் ஆண்டிற்கான பணம் வசூலித்த விபரங்கள் சில இருந்ததமை போன்ற விடயங்களையும், ஐரோப்பாவில் தமிழீழம் என்ற கருத்து தற்போதும் உயிர்ப்புடன் உள்ளதன் காரணமாக புலிகளின் செயற்பாடுகளும் இருக்கின்றது என்றும் அவர்கள் தொடர்ந்தும் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஐரோப்பாவில் புலிகள் தடை செய்யபப்ட்டிருக்கின்றார்கள் அது 2010 இலும் நீடிக்கப்பட்டுள்ளது என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு சமர்ப்பித்துள்ள நெதர்லாந்து அதிகாரிகள்
ஐரோப்பாவில் புலிகள் இருக்கின்றார்கள் எனவும் அவர்கள் நிதி சேகரிப்பு, ஆயுதக் கொள்வனவு, கடனட்டை மோசடி, சர்வதேச ரீதியான சட்டவிரோத ஆட்கடத்தல் போன்ற நடவடிக்கைகளை புலிகள் மேற்கொண்டு வருவதாகவும் நெதர்லாந்து அதிகாரிகள் பட்டியலிட்டுள்ளனர்.

'தலைவர்' ரெடி... விரைவில் ராணா - சௌந்தர்யா தகவல்


சூப்பர் ஸ்டார் ரஜினி இப்போது உடல் ரீதியாக பக்காவாகத் தயாராகிவிட்டார். விரைவில் ராணா படப்பிடிப்புத் தொடங்கும் என அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தகவல் வெளியிட்டுள்ளார்.

ரஜினியின் உடல் நிலை காரணமாக அவர் மூன்று வேடங்களில் நடிக்கும் பிரமாண்ட படமான ராணா வரும் வராது என அடிக்கடி வதந்திகள் கிளம்பியபடி இருந்தன.

இந்த நிலையில் அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், டிசம்பரில் படம் தொடங்குவது குறித்து அறிவிப்பு வரும் என இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மீண்டும் இந்தப் படம் தள்ளிப் போவதாக சில இணையதளங்களில் செய்தி வெளியானது.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர்களுள் ஒருவரும், ரஜினியின் இளைய மகளுமான சௌந்தர்யா கூறுகையில், "சூப்பர் ஸ்டார் ரஜினி இப்போது பக்காவாகத் தயாராகிவிட்டார். எங்கள் வசதிப்படிதான் ஷூட்டிங்கை சீக்கிரம் வைத்துக் கொள்ளுமாறு அவர் கூறி வருகிறார். ஆனால் இயக்குநரும் தயாரிப்பாளரும் அப்பா நன்றாக பழையபடி நிகழ்ச்சிகளுக்கு போகத் தொடங்கிய பிறகே ஷூட்டிங்கைத் தொடங்க வேண்டும் என முடிவு செய்திருந்தனர்.

அதன்படி இப்போது தலைவர் பக்காவாகத் தயாராகிவிட்டார். விரைவில் அவரே ஷூட்டிங் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார்," என்றார்.

ஆஹா... ரஜினி ரசிகர்களுக்கு பத்தாயிரம் வாலா செய்தியல்லவா இது!

கனடாவில் சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகள் தொடரும்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்


அரசாங்க பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சிறிலங்கா புறக்கணிப்பு போராட்டம்' பிற்போடப்பட்டுள்ள அதேவேளை, சிறிலங்கா தொடர்பிலான விழிப்பை ஏற்படுத்தும் நோக்கிலான பரப்புரைகள் தொடர்ச்சியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்படும்.
சிறிலங்கா அரசாங்கத்தினால் கனடா mississauga நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உல்லாச பயணத்துறை வர்த்தக கண்காட்சி நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புறக்கணிப்பு விழிப்புரை போராட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து இன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல் வெளிவிவகார அமைச்சகத்தின் மக்கள் தொடர்பக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில்...

கனடா (mississauga ) மிசுசாகா நகரில் சிறிலங்கா அரசினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உல்லாச பயணத்துறை வர்த்தக கண்காட்சி நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த வர்த்தக கணக்காட்சியை தடுத்து நிறுத்தும் நோக்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

mississauga நகரபிதாவையும் - நகரசபை உறுப்பினர்களையும் சந்தித்த நா.த.அரசாங்கத்தின் துணைப் பிரதமர் ராம் சிவலிங்கம் அவர்கள் தமிழர்கள் மீதான போரின் வடுக்களையும் - வலிகளையும் மறைத்து, இலங்கைத்தீவை ஒரு உல்லாசபுரியாக, சர்வதேசத்துக்கு காட்ட சிறிலங்கா அரசு முற்றபட்டு வருகின்றமை குறித்து விளக்கியிருந்தார்.

அத்தோடு, சிறிலங்கா தொடர்பில் தனது கடுமையான நிலைப்பாட்டை கனடிய அரசு எடுத்துள்ள இவ்வேளை, கனடிய மண்ணில் இரத்தக் கறைபடிந்த சிறிலங்காவுக்கு செங்கம்பளம் விரி;ப்பது கவலைதருகின்றதென்ற தமிழர்களின் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தியிருந்தார்.

இந்நிலையில் கண்காட்சி நிறுத்தப்பட்ள்ளதாக LIVING ARTS நிர்வாகம் தெரவித்துள்ள நிலையில் சிறிலங்காவின் தமிழின அழிப்பு முகத்தை அம்பலப்படுத்தும் நோக்கில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 'சிறிலங்கா புறக்கணிப்பு போராட்டம்' பிற்போடப்பட்டுள்ளது.

இதேவேளை சிறிலங்கா தொடர்பிலான விழிப்பை ஏற்படுத்தும் நோக்கிலான பரப்புரைகள் தொடர்ச்சியாக நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளால் முன்னெடுக்கப்படும்.

தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை எனும் தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை சனநாயகரீதியாக பிரதிபிலித்த நிற்கும் தமிழீழ தேசிய அரசாங்கமாகிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பின்னால் சகல தமிழர் அமைப்புக்களும் தோழமையொடு அணிதிரண்டு சுதந்திர தமிழீழத்தை வென்றெடுக்க உழைப்போம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாதம் ஊடகசேவை

மேலும் ஒரு கன்னட நடிகர் மீது மனைவி வரதட்சணை புகார்


மேலும் ஒரு நடிகர் மீது வரதட்சணைப் புகார் எழுந்துள்ளது. கன்னட நடிகர் பிரசாந்த் தன்னை வரதட்சணை கேட்டு தினமும் கொடுமைப்படுத்துவதாக அவர் மனைவி புகார் தெரிவித்துள்ளார்.

கன்னட நடிகர் தர்ஷன் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்தியதாக ஏற்கனவே கைது செய்யப்பட்டார். தற்போது ஜாமீனில் வந்துள்ளார்.

இது போல் இன்னொரு கன்னட நடிகரான பிரசாந்தும் வரதட்சணை புகாரில் சிக்கியுள்ளார். ஓரட்டா ஐலவ்யூ, வெங்கி, அஞ்சதிரு உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால் அவரால் பெரிய இடத்தைப் பிடிக்க முடியவில்லை. படத் தயாரிப்பிலும் இறங்கினாராம். இதனால் பணக் கஷ்டம் ஏற்பட்டது. மனைவியிடம் ரூ.10 லட்சம் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து அவரது மனைவி சசிரேகா மாநில மகளிர் நல ஆணையத்தில் பிரசாந்த் மீது புகார் மனு அளித்துள்ளார்.

அதில் எனது கணவர் வரதட்சணை கேட்டு என்னை தினமும் சித்ரவதை செய்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். பிரசாந்தும் சசிரேகாவும் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் இந்திப் பட வாய்ப்பைப் பிடிப்பேன்! - த்ரிஷா


காட்டா மீட்டா தோல்விக்குப் பிறகு கொஞ்ச காலம் சட்டி சுட்டதடா என்று தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமே நடித்து வந்தார் த்ரிஷா.

இப்போது அவருக்கு இந்திப் பட ஆசை மீண்டும் வந்துவிட்டது. ஒரு படம் தோற்றால், மீண்டும் அந்த மொழியில் நடிக்காமல் போவதா என்று சிலிர்த்துக் கிளம்பியுள்ளார் த்ரிஷா.

இதுபற்றி அவர் கூறுகையில், "எந்த மொழியாக இருந்தாலும் படம் தோற்றால் மனசு கஷ்டப்படுகிறது. காட்டாமீட்டா இந்திப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும் சந்தோஷப்பட்டேன். அப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நிறைய இந்திப் பட வாய்ப்புகள் வந்தன. அட்வான்ஸோடு தயாரிப்பாளர்கள் காத்திருந்தார்கள்.

ஆனால் நான் எந்த படத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. காட்டாமீட்டா ரிலீஸ் ஆனபிறகு தான் புதுப்படங்களுக்கு ஒப்பந்தமாவேன் என்று கூறிவிட்டேன்.

படம் நன்றாக போகாததால் என்னைத் தேடிவந்தவர்கள் காணாமல் போனார்கள். இதுதான் சினிமா என்றாலும், இந்த ஏமாற்றத்தை என்னால் தாங்க முடியவில்லை. ஆனால் மீண்டும் இந்திப்பட வாய்ப்பைப் பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இப்போது ஒரு தமிழ் மற்றும் இரு தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறேன்," என்றார்.

புத்தூரில் மர்ம மரணம் தொடர்பில் மூவர் கைது


புத்தூரில் சடலமாக மீட்க்கப்பட்ட சிங்கள இளம் குடும்பஸ்தரின் மரணம் சம்பந்தமாக மத குரு உட்பட மூவர் அச்சுவேலிப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் நேற்று வெள்ளிக் கிழமை மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இவர்களை எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சுன்னாகத்தைச் சேர்ந்த ஹெட்டி ஆராய்ச்சி சுரேஸ் 34 வயது இரண்டு பிள்ளைகளின் தந்தை கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் வீட்டில் இருந்து கிளிநொச்சிக்கு வேலைக்குச் செல்வதாக புறப்பட்டுச் சென்றவர் விடுதிரும்பவில்லையென சுன்னாகம் பொலிசில் மனைவியனால் முறையிடப்பட்டு இருந்தது.

இந் நிலையில் காணாமல் போனதாகத் தெரிவிக்கப்பட்ட பின்னர் இரண்டாம் நாள் குறிப்பிட்ட நபர் புத்தூர் வீதியில் உள்ள கிடங்குப் பகுதியில் காயங்களுடன் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

2ஆம் லெப்.மாலதி – விடுதலைப்போரின் இன்னொரு அத்தியாயம்

வெட்கத்தால் முகஞ்சிவந்து குனியும் பெண்ணென்றும், தளிரென்றும் உவமான உவமேயங்களுக்குள் காலங்காலமாக பூட்டி பூட்டி வைத்திருந்த தமிழ் பெண்ணினத்தை சிங்கள பேரினவாத்தின் அடக்குமுறையின் தீவிரமும், எழுச்சிகொண்ட விடுதலைப் போராட்டமும் களத்துக்கு அணிதிரட்டியது.

சிங்கள பேரினவாதத்து கொடூரங்கள் காலகாலமாக தமிழ் பெண்களின் மேல் தனது கொடும் நகங்களை பதித்தே வந்துகொண்டிருந்தது. இவற்றிலிருந்து விடுதலைபெற வேண்டுமானால் ஆயுதம் ஏந்தியே தீரவேண்டும் என்ற வரலாற்று நியதி தமிழீழ பெண்ணினத்துக்கு ஏற்பட்டபொழுதில் எழுந்து வந்தவள்தான் 2ஆம் லெப்.மாலதி.

சிங்கள பேரினவாதம் மட்டும் அல்லாமல் அமைதிப்படை என்ற பெயரில் வந்திறங்கிநின்ற இந்தியப்படைகளும் தமது குரூரமான வக்கிரத்தை இந்திய - விடுதலைப்புலிகள் யுத்தம் ஆரம்பித்த அக்டோபர் 5ம் நாளில் இருந்து தமிழீழ பெண்கள் மீது கட்டவிழ்த்துவிட ஆரம்பித்தனர்.

யுத்தம் ஆரம்பித்த நாட்களில் கொக்குவில் பிரம்படிலேன் பகுதியிலும் அதை அண்டிய பகுதிகளிலும் தனது கனரக வாகனங்களால் தமிழீழ மக்களை அரைத்து நெசித்து முன்னேறிய இந்தியப் படைகள் முன்னேறிய பகுதிகளில் பாலியல் வெறியாட்டங்களை பெண்கள் மீது மிகமோசமாக நிகழ்த்தியபடியே வந்தனர்.

காஸ்மீரிலும், நாகலாந்திலும், மிசோரத்திலும், மணிப்பூரிலும் விடுதலைக்குபோரிட்ட தனது மக்கள் மீதே கொடும் பாலியல் மிலேச்சங்களை நிகழ்த்திய இந்தியப்படை அதையே யாழ்ப்பாணத்திலும் தொடர்ந்தது.

10.10.1987அன்று நள்ளிரவுப்பொழுதில் முன்னேறிவந்த இந்தியராணுவத்தின் கனரக டாங்கி ஒன்று கோப்பாயை அண்மித்தது. காத்துக்கொண்டிருந்த விடுதலைப்புலிகளின் பெண்கள் அணி தாக்குதலை தொடங்கியது. உலகின் பெரிய ராணுங்களின் ஒன்றான இந்திய ராணுவத்தையே இடைமறித்து தாக்குகின்றோம் என்ற எந்தவொரு பயமும் இன்றி எமது மண் இது, எமது தாயகம் இது, இங்கு வந்து எமது மக்களை வேட்டையாடவும், குதறியெறியவும் நாம் அனுமதிக்கமாட்டோம் என்ற செய்தியே அந்த பெண்கள்அணியின் துப்பாக்கிகளில் இருந்து புறப்பட்ட ஒவ்வொரு தோட்டாக்களிலும் எதிரிக்கு கொடுக்கப்பட்டது.

எதிரிக்கு மிக அண்மித்து சென்று தாக்குதல் நடாத்திய பொழுதில் 2ம் லெப் மாலதி காயமடைந்து அதன் பின்னர் சயனைட் அருந்தி 10.10.1987அன்று வீரமரணமடைகிறார். அதுவரையில் பெண்கள் பற்றி இலக்கியங்கள் ஊடாகவும், மதநெறிகள் வாயிலாகவும் சமூக ஒழுக்கங்கள் என்ற பெயரிலும் தொடர்ந்து ஊட்டப்பட்டுவந்த அனைத்து மாயக்
கருத்துக்களையும் உடைத்தெறிந்ததாகவே மாலதியின் வீரமரணம் விளங்கியது.

2ஆம் லெப் மாலதி தொடங்கிவைத்த புதிய அத்தியாயம் தமிழ் பெண்கள் மத்தியில் ஆயிரம் கோடி அதிர்வுகளை உருவாக்கி அதிலிருந்தே ஆயிரம் பெண் புலிகள் தோற்றம் பெறலாயினர். போரியலிலும், விடுதலை அரசியலிலும் ஆண்கள்கூட எட்டித்தொடமுடியா உச்சங்களை எல்லாம் தொட்டுநின்ற தமிழீழ பெண் இனத்தின் தொடக்கப்புள்ளியாக மாலதி என்றும் இருப்பார்.

எங்கள் நெஞ்சம் நிறைய உறுதியெடுத்து ஒருகணம் தலை கவிழ்ந்து 2ஆம் லெப் மாலதியின் நினைவுகளை உரமுடன் பதிய வைத்து தொடர்ந்து நடப்போம் விடுதலைப் பாதையில் எந்தவித தளர்வும் இன்றி.

முதற்பெண் மாவீரர் 2ஆம் லெப்.மாலதி நினைவு நாள் (பாடல் இணைப்பு)


மூவர் தூக்கு மத்திய கபினெற்றில் ஏற்கப்பட்டதா?

பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவருக்குமான தூக்கு தண்டனைக்கு சென்னை உயர் நீதிமன்றம் விதித்த எட்டு வார இடைக்காலத் தடை சீக்கிரமே முடியப்போகிறது.

மத்திய, மாநில அரசுகள் பதில் மனுத் தாக்கல் செய்யத் தயாராகி வரும் நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் அதிமுக்கிய விவகாரத்துக்கு விடை கண்டு இருக்கிறார் காங்கிரஸ் புள்ளியான திருச்சி வேலுசாமி.

இந்த மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் நிராகரித்தது ஏன்? மத்திய அமைச்சர்கள் யார் யார் கலந்து பேசி கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்தார்கள்?’ எனப் பல கேள்விகளை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினார் வேலுசாமி. பலத்த இழுத்தடிப்புக்குப் பிறகு, இப்போது பதில் வந்துள்ளது.

மூவர் தூக்கு விவகார விசாரணை நெருங்கி வரும் நிலையில், உள்துறையின் பதில் குறித்து வேலுசாமியிடம் பேசிய போது,

ராஜீவ் கொலை வழக்கு விசாரணையில் ஆரம்பத்தில் இருந்தே ஆயிரக்கணக்கான குழப்பங்கள்... இந்தியாவின் மாபெரும் தலைவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் சில விஷமிகளைத் தப்ப வைப்பதற்காகவே பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரை விசாரணை அதிகாரிகள் பலிக்கடா ஆக்கினார்கள்.

ராஜீவ் கொலை வழக்கு விவகாரத்தை விசாரிக்கும் பல்​முனை​நோக்கு விசாரணைக் குழுவிடம் நான் ஆரம்பம்தொட்டே பலவிதமான சந்தேகங்களையும் சொல்லி வருகிறேன். ஆனால், விசாரணை முற்றுப்பெறாத நிலையிலேயே இம்மூவரையும் தூக்கு மேடையை நோக்கித் துரத்தும் விதமாக, கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

அதன் பின்னணியில், யாருடைய கைங்கரியம் இருந்தது என்பதை வெட்டவெளிச்சமாக்க நினைத்தே என் மனதில் எழுந்த கேள்விகளுக்குப் பதில் கேட்டு, தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி 13.8.11 அன்று மத்திய அரசுக்கு அனுப்பினேன்.

மூன்று பேருடைய தூக்குக்கு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அது சம்பந்தமான கேள்விகளுக்கு விரைந்து பதில் அளித்திருக்க வேண்டிய மத்திய அரசு, திட்டமிட்டுத் தாமதம் செய்தது.

அதனால், 'உரிய பதில் வராவிட்டால், நீதிமன்றத்துக்குச் செல்வோம்’ என நாங்கள் நினைவூட்டுக் கடிதம் அனுப்பிய பிறகே கடந்த செப்டம்பர் 30-ம் தேதி பதில் வந்துள்ளது.

அதில், உச்ச நீதிமன்றம் தீர்ப்புச் சொன்ன பிறகு கருணை காட்டுங்கள் எனச் சொல்வது சரியான அணுகுமுறை அல்ல என்றும், மூவருடைய தூக்கு குறித்து பலவிதமான ஆலோசனைகளை நடத்திய பிறகே, உள்துறை அமைச்சகம் கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்ததாகவும் கூறப்பட்டு உள்ளது.

இதில், மிக முக்கியமான தகவல், மத்திய உள்துறை அமைச்சரான ப.சிதம்பரம், கருணை மனு நிராகரிப்பு குறித்து மத்திய அமைச்சர்கள் யாரிடமும் கலந்து பேசவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் கலந்து பேசித்தான் கருணை மனு நிராகரிப்பு குறித்து குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்ய முடியும். ஆனால், தன்னிச்சையாகவே ப.சிதம்பரம், கருணை மனுக்களை நிராகரிக்க குடியரசுத் தலைவருக்கு சிபாரிசு செய்து இருக்கிறார். மத்திய அமைச்சரவையில் உள்ள வேறு யாரையும் கலந்து ஆலோசிக்காமல் இப்படி அவர் செய்ததே தவறு.

மூன்று பேர் தூக்கு குறித்த நீதிமன்ற விசாரணைகள் வேகமாகி வரும் நிலையில், உள்துறை செய்த இந்தக் குளறுபடியை மிக முக்கிய ஆவணமாகப் பதிவு செய்யலாம்!'' என்று சொல்கிறார் வேலுசாமி.

''தூக்குத் தண்டனைக் கைதிகள் குறித்த கருணை மனுக்களை மத்திய அமைச்சரவை கூடி விவாதித்து தன்னுடைய கருத்தை குடியரசுத் தலைவருக்குச் சொல்லவேண்டும். அந்த அடிப்படையில் அவர் முடிவை எடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. ஆனால் அப்படிப்பட்ட ஆலோசனைகள் நடக்கவில்லை என்பது வேலுசாமிக்கு வந்துள்ள கடிதத்தின் மூலம் தெரிந்துவிட்டது.

தனிப்பட்ட முறையில் உள்துறை அமைச்சரது ஆலோசனையை குடியரசுத் தலைவர் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். எனவே இந்த உத்தரவே செல்லாது!'' என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள்.

மூவருக்குமான தூக்கு குறித்த அடுத்த கட்ட விசாரணைகளில் வேலுசாமிக்கு வந்திருக்கும் கடிதத்தையும் முக்கிய ஆவணமாகக் கையில் எடுத்திருக்கிறார்கள்.

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம் 2)

இந்தியாவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் ஆரம்பமானது. அந்த யுத்தத்தை இந்தியாவே ஆரம்பித்தும் வைத்தது. இந்தியா ஈழத்தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை ஆரம்பித்துவிட்டது என்று தெரிவித்து, விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் எம்.ஜீ.ஆருக்கு அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்தார்.

அக்டோபர் 10 இல், புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை இந்தியா ஆரம்பித்திருந்த மறுநாள், அதாவது 1987 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தமிழ் நாடு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு எழுதிய கடிதத்தில்;, இந்தியா தமிழ் மக்களுக்கு எதிரான தனது யுத்தத்தை எவ்வாறு ஆரம்பித்திருந்தது என்று விபரித்திருந்தார்.

பிரபாகரன் அவர்கள் அந்தக் கடிதத்தில் இந்தியாவின் நகர்வுகள் பற்றி பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்:

'எமது தளபதிகளும் போராளிகளும் அநியாயமாகக் கொலையுண்ட சம்பவத்தின் எதிரொலியாக தமிழீழம் எங்கும் வன்முறைச் சம்பவங்கள் தலைதூக்கின. இன மோதல்கள் வெடித்தன. இந்த வன்முறை முயற்சிகளுக்கு நாம் தான் காரணம் என்றும் நாம் ஒப்பந்தத்தை முறிக்க முயன்றதாகவும் இந்தியா எம்மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தியது.

இதனைத் தொடர்ந்து கொழும்பில் இந்தியப் பாதுகாப்பு மந்திரி திரு. பந்த், இந்திய தூதுவர் திரு. தீட்சித் இந்திய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சுந்தர்ஜி ஆகியோர் ஒருபுறமும், சிறீலங்கா ஜனாதிபதி ஜெயவர்த்தனா, தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி மறுபுறமும் விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் ஒரு சதித்திட்டத்தை உருவாக்கினர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை தடை செய்வது என்றும், எமது போராளிகளுக்குப் பொது மன்னிப்பு இல்லையென்றும் ஜெயவர்த்தனா அறிவித்தார். விடுதலைப் புலிகளுக்கு எதிராகக் கடும் இராணுவ நடவடிக்கை எடுக்க இந்தியா முடிவு செய்திருப்பதாக திரு. பந்த் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்தியச் சமாதானப் படை விடுதலைப் புலிகள் மீது ஒரு விசமத்தனமான தாக்குதலைத் தொடங்கியது.

1987 ஐப்பசி 10ம் நாள் காலை அமைதிப்படையினர் யாழ்ப்பாண நகரிலுள்ள இரு தமிழ் தினசரிப் பத்திரிகை (ஈழமுரசு, முரசொலி) காரியாலயங்களுக்குள் புகுந்தனர். பின்னர் பத்திரிகை அச்சு இயந்திரத்திற்குள் வெடிகுண்டுகளை வைத்து அவற்றைத் தகர்த்தனர். அதன்பின் நண்பகல் விடுதலைப்புலிகளை வேட்டையாடி அழிக்கும் நோக்குடன் கோட்டை இராணுவ முகாமில் இருந்த இந்திய அமைதிப்படையினர் யாழ் நகருக்குள் பிரவேசிக்க முயன்றனர். அவர்களை நாம் தடுக்க முயன்றோம். அவர்கள் எம்மை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர். நாம் எமது தற்பாதுகாப்புக்காக திருப்பிச் சுட்டோம்.

போர் மூண்டது.

இந்திய இராணுவம் பீரங்கி, டாங்கி போன்ற கனரக ஆயுதங்கள் சகிதம் குடியிருப்புக்கள் நிறைந்த பகுதிகள் மீது மணிக்கணக்கான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்தும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதனால் எமது போராளிகள் மட்டுமன்றி பொதுமக்கள் பலரும் பெருமளவில் மடிந்து கொண்டிருக்கிறார்கள். பொது மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லை விடுதலைப் புலிகளை அழித்து விடவேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்கிறது இந்திய இராணுவம்.

நாலாபக்கமும் முற்றுகையிடப்பட்ட நிலையில் நாம் எமது தற்பாதுகாப்பிற்காகப் போராடி வருகிறோம். உயிருடன் கைதாகி அவமானப்பட்டுச் சாவதைவிடப் போராடி இறப்பதே மேலானது என்ற இலட்சியத்துடன் நாம் துப்பாக்கி ஏந்தியுள்ளோம்.

இவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் எம்.ஜி.ஆருக்கு அனுப்பிவைத்த அவசரக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

ஈழ தேசம் அதிர்ச்சிக்குள்ளானது.

இதேபோன்று, இந்தியாவிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பமானதைத் தொடர்ந்து, சென்னையில் விடுதலைப் புலிகளின் அரசியல்துறை ஒரு புத்தகத்தை வெளியிட்டது.

You too India? (இந்தியா.. நீ கூடவா?) என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட அந்தப் புத்தகத்திலும், புலிகளுக்கு எதிரான யுத்தத்தை இந்தியா எப்படி ஆரம்பித்திருந்தது என்பது பற்றி தெரிவிக்கப்பட்டிருந்தது:

விடுதலைப் புலிகளும், தமிழீழ மக்களும் மறைந்த தமது மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கையில், இந்திய அரசோ, தமிழ் மக்களுக்கு எதிரான ஒரு பாரிய அழித்தொழிப்பு யுத்தத்தை மேற்கொள்ளுவதற்கு தனது அமைதிகாக்கும் படையை ஏவியிருந்தது. இந்தியப் படையினருக்கு எதிரான யுத்தம்| என்பது பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளும் தமிழ் மக்களும் தமது கனவில்கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை.

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரையில் இந்தியா அவர்களது உற்ற நன்பன். அவர்களது ஒரே பாதுகாவலன். ஈழ மண்ணில் இந்தியப் படைகளின் பிரசன்னம் என்பது தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அன்பினதும், சமாதானத்தினதும் சின்னமாகவே நோக்கப்பட்டு வந்தது.

அதேவேளை, விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையிலும் இந்தியாவை அவர்களது ஊக்கு சக்தியாகவே அவர்கள் நோக்கி வந்தார்கள். விடுதலைப் புலிகளுக்கான பாதுகாப்பையும், ஆயுத உதவிகளையும் வழங்கக்கூடிய ஒரு நட்பு சக்தியாகவே அவர்கள் இந்தியாவை நோக்கி வந்தார்கள்.

இப்படி இருக்கையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்தியா யுத்தம் புரிய ஆரம்பித்த போது ஈழ தேசமே அதிர்ச்சிக்குள்ளானது.

இவ்வாறு அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

திபிந்தர் சிங் தீட்டிய திட்டம்.

விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளின் இறுதி திட்டங்களை இந்தியப் படைகளின் தென் பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் திபீந்தர் சிங் நெறிப்படுத்திக்கொண்டிருந்தார்.

பலாலி விமானப்படைத் தளத்தில், இந்தியப்படை உயரதிகாரிகள் மத்தியில் இந்தியப்படைகளின் நகர்வுகள் எவ்வாறு இருக்கவேண்டும் என்று தமது திட்டங்களுக்கு அவர் இறுதி வடிவம் வழங்கிக்கொண்டிருந்தார்.

கண்களில் ஆர்வம் பொங்கவும், வெற்றி உறுதியாகிவிட்ட மகிழ்ச்சியிலும் இந்தியப்படை அதிகாரிகள் தளபதியின் திட்டங்களைச் செவிமடுத்தபடி நின்றார்கள்.

புலிகளின் தலைவரையும், யாழ்ப்பாணத்தையும் கைப்பற்றுவதற்கு இந்தியப் படையணிகள் தயார் நிலையில் நின்றன.

யாழ் நடவடிக்கைகளுக்கான பொறுப்புக்கள், இந்திய இராணுவத்தின் 54வது டிவிஷன் படையணிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

கள நடவடிக்கைகளுக்காக இந்திய இராணுவத்தின் பின்வரும் படையணிகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தன:

18வது காலாட் படைப்பிரிவு.

41வது காலாட் படைப்பிரிவு.

72வது காலாட் படைப்பிரிவு.

91வது காலாட் படைப்பிரிவு.

115வது காலாட் படைப்பிரிவு.

65வது கவச வாகனப் பிரிவு.

831வது இலகு மோட்டார் படைப்பிரிவு.

25வது படைப்பிரிவு

10வது பரா கொமாண்டோ படைப்பிரிவு

என்பன புலிகளுடனான யுத்தத்திற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

இவற்றிற்கு மேலதிகமாக, 13வது சீக்கிய கொமாண்டோ அணியினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். குவிக்கப்பட்டிருந்த இந்திய ஜவான்கள் முன்னிலையில் தமது தாக்குதல் திட்டத்தை விபரித்த திபீந்தர் சிங், இரண்டு நாட்களுக்குள் இந்தியப் படை தமது பிரதான நோக்கத்தை நிறைவு செய்துவிட வேண்டும் என்று தெரிவித்தார்.

அங்கு திரண்டிருந்த இந்தியப்படை வீரர்களும், புலிகளுடனான தமது யுத்தம் இரண்டு நாட்களுக்குள் முடிவடைந்துவிடும் என்று உறுதியாகவே நம்பினார்கள். ஜெய்ஹிந் என்று வெற்றிக் கோஷமிட்டார்கள். அவர்களின் கோஷம் வானை எட்டும்படியாக இருந்தது.

ஆனால், இவ்வாறு வெற்றிக் கோஷம் இட்ட இந்திய ஜவான்களில்; பலர் அடுத்த இரண்டு நாட்களில் அநியாயமாக தமது உயிர்களை இழக்க இருந்தது, பாவம் அவர்களுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.

தமது தளபதி கூறியது போன்று இரண்டு நாட்களில் மட்டுமல்ல இரண்டு வருடங்கள் கடந்தும் புலிகளை வெற்றிகொள்ள முடியாது என்ற உண்மையும் அவர்களுக்கு அப்பொழுது புரிந்திருக்கவில்லை.

அந்த உண்மையை அவர்கள் உணர்ந்துகொண்டபோது காலம் கடந்துவிட்டிருந்தது.

தலைவரைக் கைதுசெய்யும் திட்டம்:

இந்தியப் படை அதிகாரிகளைப் பொறுத்தவரையில், விடுதலைப் புலிகளை வெற்றிகொள்வதற்கென அவர்கள் வகுத்திருந்த திட்டம் யதார்த்தமானது. மிகுந்த புத்திசாலித்தனமானதுடன், நடைமுறைச் சாத்தியம் மிக்கதாகவும் அமைந்திருந்தது. அனைத்து இந்தியப்படை அதிகாரிகளும் இந்த திட்டத்தை இட்டுத் திருப்தி தெரிவித்திருந்தார்கள். விடுதலைப் புலிகளை வெற்றிகொள்ளவென இந்திய இராணுவத் தலைமை வகுத்திருந்த திட்டத்தை ஆராய்ந்த இந்தியப்படை அதிகாரிகளுக்கு, அத்திட்டத்தில் எந்தவித தவறும் இருப்பதாக தெரியவில்லை. எந்தவிதச் சந்தேகமும் இன்றி இந்திய இராணுவ நடவடிக்கை வெற்றி அளிக்கும் என்றே அவர்கள் நம்பினார்கள்.

முதலில் திடீர் அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டு புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கைது செய்துவிடுவது, அல்லது அவரை கொலை செய்துவிடுவதே இந்தியப்படையினரது பிரதான திட்டமாக இருந்தது.

யாழ் பல்கலைக்கழகத்திற்கு அருகில் கொக்குவில் பிரதேசத்தில் பிரம்படி வீதியில் அமைந்திருந்த புலிகளின் தலைவரது இருப்பிடத்தின் மீது திடீர் முற்றுகை ஒன்றை மேற்கொண்டு தலைவரைக் கைப்பற்றி, மற்றைய போராளிகளிடம் இருந்து அவரை அகற்றிவிட்டால், புலிகள் அமைப்பே முற்றாகச் செயலிழந்துவிடும் என்பதை இந்தியப்படை அதிகாரிகள் திடமாக நம்பினார்கள். அத்தோடு, புலிகளின் தலைமைக் காரியாலயத்தின் மீது தாக்குதல் நடத்தி தலைமையகத்தையும், புலிகளின் தலைவரையும் கைப்பற்றிவிடும் பட்சத்தில், மற்றைய போராளிகளின் மனஉறுதி குலைந்து, அவர்களின் போரிடும் ஆற்றல் குன்றிவிடும் என்று கணித்திருந்தார்கள்.

முதலாவது தாக்குதலை வெற்றிகரமாக முடித்துவிட்டால், பின்னர் புலிகள் அமைப்பை மிக இலகுவாக வெற்றிகொண்டுவிடலாம் என்றே அவர்கள் நினைத்தார்கள்.

இந்திய இராணுவத்தில் அதிஉச்ச பயிற்சியைப் பெற்ற பராக் கொமாண்டோக்கள் 103 பேரை, யாழ் பல்கலைக்கழக மைதானத்தில் திடீரென்று தரையிறக்கி, புலிகளின் தலைவர் தங்கியிருந்த பிரம்படி வீட்டை முற்றுகையிட்டு தலைவரைக் கைது செய்வதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது. அதேவேளை, சீக்கிய மெதுரகக் காலாட்படையினர் 100 பேர், பரா துருப்பினர் தரையிறங்கிய பிரதேசத்திற்கு விரைந்து அந்தப் பகுதியைத் தளப்பிரதேசமாக தக்கவைத்திருப்பது அவர்கள் வகுத்திருந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக இருந்தது.

புலிகளின் தலைவர் தங்கியிருந்ததாகக் கூறப்படும்; கொக்குவில் பிரதேசத்தில் உள்ள பிரம்படி வீதி இல்லத்தை, இந்தியப்படையினர் ஏற்கனவே மோப்பம் பிடித்திருந்தார்கள். இந்தியப்படை உயரதிகாரிகள் அந்த இடத்தில் பல சந்திப்புக்களை மேற்கொண்டிருந்தார்கள். அந்த இருப்பிடம் பற்றிய வரைபடத் தகவல்களை மாற்றுக்குழு உறுப்பினர்களிடம் இருந்து பெற்றிருந்தார்கள்.

போதாததற்கு, கடந்த 9ம் திகதி நள்ளிரவு கால்நடையாக ஒரு நகர்வினை மேற்கொண்டிருந்த சீக்கிய காலட்படையினரும், பரா கொமாண்டோப் படைப்பிரிவில் சிலரும், திருநெல்வேலியில் இருந்து செல்லும் பாதை வழியாக நகர்வினை மேற்கொண்டு, பின்னர் பிரம்படி வீதியில் இருந்து சுமார் 300 மீற்றர் தொலைவில் அமைந்திருந்த இரயில் பாதை வழியாக திரும்பிச் சென்றிருந்தார்கள். பொதுமக்களது வளவுகளுக்குள்ளாகவும் இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பிரம்படி வீதியைப் பரிட்சயப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நகர்வென்றே இந்த இரகசிய நகர்வு பற்றிக் கூறப்படுகின்றது. அதேவேளை, சந்தர்ப்பம் கிடைத்தால் புலிகளின் தலைவரை கைப்பற்றிவிடும் நகர்வாகவும் அந்த 9ம் திகதிய நகர்வு அமைந்திருந்தது.

இவ்வாறு பிரம்படி சுற்றாடல் பற்றிய அறிவினைக் கொண்டிருந்த இந்தியப்படை பரா கொமாண்டோக்கள் முன்நகர, தலைவரது இல்லத்தை நெருங்கி நடவடிக்கை மேற்கொள்ளுவதே இந்தியப்படையினரின் பிரதான திட்டமாக இருந்தது.

அடிப்படைத் திட்டங்கள்:

அதேவேளை, இந்தப் பிரதான திட்டத்திற்குச் சமாந்தரமாக, மேலும் ஐந்து அடிப்படைத் திட்டங்களையும் இந்தியப்படை உயரதிகாரிகள் வகுத்திருந்தார்கள்.

1. ஒரே நேரத்தில் தரை, கடல், மற்றும் ஆகாய மார்;க்கமாக தரையிறக்கங்களை மேற்கொண்டு யாழ் குடாவை மிக விரைவாகக் கைப்பற்றிவிடுவது.

2. குறைந்தது ஒரு விநியோக பாதையையாவது திறந்து, யாழ் நகருக்குள் நகர்வினை மேற்கொள்ளும் துருப்பினருக்கு வினியோகங்களை மேற்கொள்ளுவது.

3. பாதுகாப்பான வினியோகப் பாதையை அமைத்துக்கொள்ளும்வரை, யாழ் நகருக்குள் நுழைந்துள்ள படையினருக்கு வான் வழியாக வழங்கல்களை மேற்கொள்ளுவது.

4. நகருக்குள் நுளையும் துருப்பினருக்கு உதவும் முகமாக, அவர்களால் குறிப்பிடப்படும் இடங்களுக்கு, விமானங்களில் இருந்தும், கப்பல்களில் இருந்தும், ஆட்டிலறிகள் மூலமும் சூட்டாதரவை வழங்குவது.

5. யாழ் குடாவிற்கான அனைத்து கடல்வழிப் பாதைகளையும் முற்றுகையிடுவது.

இவையே, யாழ் குடாவைக் கைப்பற்றுவதற்காக இந்தியப்படையினர் வகுத்திருந்த அடிப்படைத் திட்டங்களாக இருந்தன.

ஈழத் தமிழர்களின் கலாச்சாரத் தலைநகர் என்று கூறப்படுகின்ற யாழ்பாணத்தைக் கைப்பற்றி நிலைகொண்டுவிட்டால், மற்றைய பிரதேசங்களை இலகுவாக கைப்பற்றிவிடமுடியும் என்பது இந்தியப்படை அதிகாரிகளினது அசைக்கமுடியாத நம்பிக்கை.

உண்மையிலேயே இது நல்லதொரு திட்டமும் கூட.

இந்தியப் படையினரது ஆட்பலம், ஆயுத மேலான்மை, போர் அணுபவம், கேந்திர அனுகூலம் போன்றனவற்றை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது, இந்தியாவைப் பொறுத்தவரையில் இது சாத்தியமான ஒரு திட்டம் என்பதில் எந்தவிதச் சந்தேகமும் இல்லை.

கவனத்தில் எடுக்கமறந்த விடயம்:

உண்மையிலேயே புலிகளை ஒழிக்கவென வகுக்கப்பட்டிருந்த திட்டம் சிறந்த ஒரு திட்டம் என்றே தற்பொழுதும் போரியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றார்கள். எந்த ஒரு போரியல் வல்லுனராலும், அதைவிடச் சிறந்த ஒரு நகர்வுத் திட்டத்தை வகுத்திருக்கமுடியாது என்றே அவர்கள் தமது ஆய்வுகளின் போது தெரிவிக்கின்றார்கள்.

ஆனாலும், புலிகளை மடக்கவென மிகவும் கவனமாகவும், நுணுக்கத்துடனும் அந்தத் தாக்குதல் திட்டத்தை வகுத்திருந்த இந்தியப்படை உயரதிகாரிகள், அந்தத் திட்டத்தில் ஒரு முக்கிய விடயத்தைக் கவனத்தில் எடுக்காது விட்டிருந்ததுதான் இந்தியப் படையினரின் மிகப் பெரிய தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தது.

அதாவது, தமது பலம் பற்றியும், தமது நகர்வுகள் பற்றியும் சிந்தித்து திட்டம் வகுத்திருந்த இந்தியப்படை உயரதிகாரிகள், தாம் இம்முறை மோத இருப்பது விடுதலைப் புலிகளுடன் என்ற விடயத்தை மறந்துவிட்டிருந்ததுதான் அவர்களது திட்டம் படுதோல்வியடையக் காரணமாக இருந்தது.

தமது உயிரைத் துச்சமென மதித்து களமாடும் வழக்கத்தைக் கொண்ட ஒரு அமைப்பை களமுனையில் தாம் சந்திக்கவேண்டி வரும் என்ற உண்மையை இந்தியப்படை அதிகாரிகள் உணர்ந்துகொண்டிருக்கவில்லை. ஒரு நிதர்சனத் தலைவனையும், அவனால் வளர்த்தெடுக்கப்பட்டு, வழிநடத்தப்படும் ஆயிரக்கணக்கான இளைஞர்களையும் தாம் களத்தில் சந்திக்கவேண்டி வரும் என்பதையும் இந்தியப்படை அதிகாரிகள் மறந்துவிட்டிருந்தார்கள். தாம் வகுந்தெடுத்த எதிரிக்குப் பக்கபலமாக, அரசியல்மயப்படுத்தப்பட்ட ஒரு மக்கள் கூட்டமும் களமிறங்கிவிடும் என்ற யதார்த்தத்தையும் இந்தியப்படையினர் உணர்ந்துகொள்ளத் தலைப்படவில்லை.

இவ்வாறு சில அடிப்படைகளைக் கவனத்தில் கொள்ளாது, புலிகளுக்கு எதிராக திட்டங்களை இந்தியப்படையினர் வகுத்திருந்த காரணத்தினாலே, ஈழ மண்ணில்; பல வரலாற்றுத் தோல்விகளையும், அவலங்களையும் அவர்கள் தொடர்ச்சியாகச் சந்திக்கவேண்டி ஏற்பட்டது.

அந்த அவலங்களின் அத்தியாயங்களை அடுத்து வரும் வாரங்களில் நாம் விரிவாகப் பார்க்க இருக்கின்றோம்.

தொடரும்...

Niraj David
nirajdavid@bluewin.ch

அவலங்களின் அத்தியாயங்கள் (பாகம் 1)

லேகாஃபுட்ஸ் விளம்பரத்தில் 'அம்புலி' நாயகி சனம் ஷெட்டி!


அம்புலி 3 டி படத்தின் நாயகியான சனம் ஷெட்டியின் முதல் தமிழ்ப் படம் வெளி வரும் முன்பே விளம்பரப்படம் வந்துவிட்டது. அது லேகா ஃபுட்ஸுக்காக அவர் நடித்துள்ள புதிய விளம்பரம்!

விளம்பரம், சினிமா, இசை என பல தளங்களில் இயங்குபவர் லேகா ரத்னகுமார். வழக்கமாக படத்தின் பெயரால்தான் நடிகைகள் அறியப்படுவார்கள். ஆனால் லேகா புண்ணியத்தால், நல்லெண்ணெய் சித்ரா என ஒரு தயாரிப்பின் பெயரால் பிரபலமானவர் சித்ரா.

இவர் மட்டுமல்ல, ஜோதிகா, சினேகா, பாக்யராஜ், பூர்ணிமா என அத்தனை பிரபலங்களையும் தனது விளம்பரப் படங்களில் நடிக்க வைத்த லேகா ரத்னகுமார், இப்போது புதிதாக உணவுகள், அதன் செய்முறை என பக்காவான தகவல்கள் அடங்கிய இணையம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

லேகாஃபுட்ஸ் எனும் இந்த இணையதளத்தில் உலகின் அத்தனை விதமான உணவு வகைகள், அதைச் செய்யும் முறைகள் ஆகியவற்றை செய்முறை விளக்கங்கள் மற்றும் படங்களுடன் வெளியிட்டுள்ளனர்.

இந்த தளத்துக்காகத்தான் விளம்பர மாடலாக நடித்துள்ளார் சனம் ஷெட்டி.

என்ன திடீர்னு சமையல், இணையதளம்னு இறங்கிட்டீங்க? என்று ஆரம்பித்தோம்.

இது திடீர் யோசனை அல்ல. பல ஆண்டுகளாக மனதில் இருந்த திட்டம். என்னுடைய ஆரம்ப நாட்களில் சமையல் பொருள்கள், பருப்புப் பொடி போன்றவற்றை பேக் செய்து விற்பனை செய்தோம். அப்போதே ஹோட்டல் ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான முயற்சிகளில் இறங்கினோம்.

ஆனால் விளம்பரப் படங்கள், இசை, சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் என பரபரப்பாகிவிட்டோம்.

ஆனால் மனசுக்குள் இந்த சமையல் - ஹோட்டல் இரண்டும் ஒரு மூலையில் இருந்து கொண்டே இருந்தது. நான் இயக்கும் விளம்பரப் படங்களும் கூட சமையலுடன் தொடர்புடையவைதான். சரி, இப்போதைக்கு, நல்ல உணவுகள் எவை என்பதை மக்களுக்கு எழுத்தில் காட்டுவோம். இதை பெரிய அளவில் செய்யலாம் என்றுதான் லேகாஃபுட்ஸ் எனும் இந்த தளத்தை தொடங்கியுள்ளேன்.

இதில் வரும் உணவுக் குறிப்புகள் அத்தனையும் ஒரிஜினலானவை. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சமையல் கலைஞர்கள், எழுத்தாளர்கள் ரெஸிபிகளை எங்களுக்கு எழுதிக் கொடுக்கிறார்கள்.

விரைவில், இந்த தளத்துக்காகவே சமையல் செய்முறை விளக்கங்களை வீடியோவாக எடுத்து நேரடியாக வெளியிடத் திட்டமிட்டுள்ளேன்," என்றார்.

இந்த தளத்துக்காக எடுக்கப்பட்ட 3 நிமிடங்கள் ஓடக்கூடிய அசத்தலான விளம்பரப் படத்தில்தான் சனம் ஷெட்டி நடித்துள்ளார். இந்த விளம்பரம் யு ட்யூப்பிலும் ரிலீசாகிறது.

விரைவில் உலகளாவிய சமையல் போட்டியொன்றை நடத்தவிருக்கும் லேகா, ஐபோன் மற்றும் ஐபேட்களை அதற்குப் பரிசாக அறிவிக்கப் போகிறாராம்.

நவம்பர் 7 முதல் மிஷ்கினின் முகமூடி ஷூட்டிங் ஆரம்பம்!


மிஷ்கின் இயக்கும் முகமூடி படத்தின் ஷூட்டிங் வரும் நவம்பர் 7-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது.

யுத்தம் செய் படத்துக்குப் பிறகு, மிஷ்கின் இயக்கும் புதிய படம் முகமூடி. சூப்பர் மேன் மாதிரி ஒரு சூப்பர் ஹீரோ கதை இது.

ஜீவா நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் இரண்டாவதாக வந்த பூஜா ஹெக்டேவும் நடிக்கின்றனர்.

மிஷ்கினால் சித்திரம் பேசுதடி படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நரேன், முதல் முறையாக இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். யுத்தம் செய் படத்தின் பின்னணி இசையைக் கவனித்த கே, முகமூடியில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

நவம்பர் 7-ம் தேதி சென்னையில் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. மிஷ்கின் இயக்கத்தில் உருவாகும் முதல் பெரிய பட்ஜெட் படம் முகமூடி என்பது குறிப்பிடத்தக்கது.

மலையாள நாவலைப் படமாக்கும் பாலா!


வழக்கமாக தன் சொந்தக் கதைகளை மட்டுமே இயக்கும் பாலா இந்த முறை மலையாள நாவல் ஒன்றைப் படமாக்குகிறார்.

பாலாவின் படங்களில் பிரபலமான எழுத்தாளர்கள் பணியாற்றினாலும் அவர்களை வசனம் எழுத மட்டுமே அவர் பயன்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் அவன் இவன் படம் சொல்லிக் கொள்ளுமளவு போகாத காரணத்தால், இந்த முறை அவர் நாவலைப் படமாக்கும் முயற்சியொன்றில் இறங்கியுள்ளார்.

மலையாளத்தில் வெளியான நாவல் ஒன்றை தமிழில் எரியும் தணல் எனும் பெயரில் மொழிபெயர்த்துள்ளனர். இந்த நாவலைத்தான் சினிமாவாக எடுக்கிறார் பாலா. இரண்டு குழந்தைகளின் பெற்றோர் படும் பாடுகளைச் சொல்லும் கதை இது.

குடும்ப உறவுகளை மையப்படுத்திய இந்தக் கதையில், கமர்ஷியல் ஹீரோக்கள் நடித்தால் சரிவராது என்பதால், தனது வழக்கமான நாயகர்களை விட்டுவிட்டு அதர்வாவை நாயகனாக்கியிருக்கிறார் பாலா.

ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். விரைவில் படம் குறித்து முழுமையான அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

மகிந்தவின் அழைப்பாணையை தமிழ் நெட்டில் பிரசுரிக்க நீதிமன்றம் உத்தரவு


அமெரிக்காவில் மகிந்தர் மீது போடப்பட்ட வெவ்வேறு வழக்குகள் இருக்கிறது. இதில் சட்டவல்லுனராகச் செயல்படும் திரு புரூஸ் பெஃயின் அவர்கள் தொடுத்த வழக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது. மகிந்தருக்கு எதிராக டாக்ட்டர் காசிப்பிள்ளை மனோகரன் என்பவர் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தார். இவ்வழக்கிற்கு நீதிமன்றத்தால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால் அதனை ஏற்க மகிந்தர் மறுத்து, அனுப்பப்பட்ட அனைத்து கடிதங்களையும் வழமைபோல திருப்பி அனுப்பியது அலரி மாளிகை. எனவே இந்த அழைப்பாணையை அவருக்கு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது அமெரிக்க சட்டவரைபில் குற்றஞ்சாட்டப்பட்டவர் இந்த வழக்கு குறித்து நிச்சயம் அறிந்திருக்கவேண்டும் என்பது அவசியமாகும்.

அழைப்பாணையை அனுப்புவதன் மூலமோ இல்லை கடிதம் ஒன்றை அனுப்புவதன் மூலமோ குற்றஞ்சாட்டப்படும் நபர் தனக்கு எதிராக நீதிமன்றில் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளதை அறியவேண்டும். எனவே தற்போது சட்ட வல்லுனரான திரு புரூஸ் பெஃயின் அவர்கள் இலங்கையில் இருந்து வெளிவரும் 2 பத்திரிகையில் முதல் பக்கத்தில் மகிந்தருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்துள்ள அழைப்பாணையை விளம்பரமாக பிரசுரிக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளார். அதுமட்டுமல்லாது நீதிமன்ற அனுமதியோடு அதனை தமிழ் நெட் இணையத்திலும் பிரசுரிக்க அவர் ஏற்பாடுகளைச் செய்துள்ளார். இதனை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உத்தரவை வழங்கியுள்ளது.

எனவே மகிந்தருக்கு எதிரான அழைப்பாணையை தமிழ் நெட் இணையமும் இலங்கையில் இருந்து வெளியாகும் 2 பத்திரிகைகளும் பிரசுரிக்கின்றன. இதன் மூலம் மகிந்தருக்கு உத்தியோகபூர்வமாக அவர் மேல் அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்ற செய்தி சென்றடையும் என நம்பப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மகிந்தர் தனது பக்க நிலையை தெளிவுபடுத்தவேண்டிய கட்டாயம் தோன்றும். அதற்குமேலும் அவர் மெளனமாக இருக்க முடியாது. அப்படி அவர் இருந்தால் மேற்கொண்டு பல பின்விளைவுகளை அவர் சந்திக்க நேரிடும். திறமையாக வாதாடியும் பல வித்தியாசமான கோணங்களில் சிந்தித்தும் இந்த வழக்கை திறம்பட நகர்த்திவரும் சட்டவல்லுனர் திரு புரூஸ் பெஃயின் அவர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.

உலகில் சிறந்த சுற்றுலா வழிகாட்டியாக இலங்கையின் தமிழ் தோட்டதொழிலாளியின் மகன் தெரிவு


உலகில் சிறந்த முதலாவது சுற்றுலா வழிகாட்டியாக இலங்கையின் தமிழர் ஒருவர் தெரிவாகி தங்கப் பதங்கம் பெற்றுள்ளார்.பிரித்தானிய சுற்றுலா சஞ்சிகையான வோன்டர்லஸ்ட் Wanderlust இந்த தெரிவை அறிவித்துள்ளது.

Bruno Dawsan Noel என்ற தமிழர், இலங்கையின் வசிக்கும் தேயிலை கொழுந்து பறிக்கும் இந்திய வம்சாவளி தொழிலாளியின் குடும்பத்தில் பிறந்தவராவார்.

இந்தநிலையில் தமது தெரிவு குறித்து அவர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.

இத்தாலிய மற்றும் பிரித்தானியாவின் இருவர் முறையே வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.

பேஸ்புக்கின் மூலம் சுற்றுலா பயணிகள் மத்தியில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பின் மூலமே நோயல் இந்த முதலிடம் கிடைத்தது.

7 பேரைக் கொண்ட குடும்பத்தின் 6 வது பிள்ளையான நோயல் கிறிஸ்தவ மதகுரு ஒருவரால் இந்த துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமது தொழிலில் 24 மணித்தியாலங்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நோயல், தமது தொழிலில் இதுவரை மதுபானமோ புகைப்பிடித்தலுக்கோ உட்படவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

தமது வாடிக்கையாளர்களின் நலன்களை மாத்திரமே குறிக்கோளாக கொண்டு தாம் செயற்பட்டதாக நோயல் குறிப்பிட்டுள்ளார்.

வேலாயுதத்துக்கு 'யு' சான்றிதழ்!


விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்துக்கு, அனைவரும் பார்க்கக் கூடிய படம் என யு சான்றிதழ் அளித்துள்ளனர்.

விஜய் - ஜெனிலியா, ஹன்ஸிகா, சந்தானம், சரண்யா மோகன் நடிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள வேலாயுதம் படத்தை, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.

இந்தப் படம் வரும் தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியாகிறது. படத்தை தணிக்கைக் குழுவினருக்கு நேற்று திரையிட்டுக் காட்டினர். படத்தைப் பார்த்த பிறகு, நல்ல பொழுதுபோக்குப் படமாக இருப்பதாகக் கூறிய அதிகாரிகள், படத்தில் சண்டைக் காட்சிகளில் மட்டும் சில வெட்டுக்களைக் கொடுத்தனர். பின்னர் அனைவரும் பார்க்கக் கூடிய படம் என யு சான்று அளித்தனர்.

இந்தப் படம் திங்களன்றுதான் சென்சாருக்கு திரையிடுவதாக இருந்தது. ஆனால் உள்ளாட்சித் தேர்தல் காரணமாக, நேற்றே திரையிடப்பட்டுவிட்டது.

தீபாவளிக்கு ஒரு நாள் முன்பாகவே வேலாயுதம் அரங்குகளுக்கு வருகிறது.

இமானுவல் அடிகளாரை திருப்பியனுப்பியது அக்கிரமம்: சீமான்


உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இமானுவல் அடிகளார் இந்தியாவுக்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டது அக்கிரமம் என சீமான் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் துபாயில் இருந்து உரிய பயண ஆவணத்துடன் சென்னைக்கு வந்த உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளாரை, மத்திய அரசின் குடியேற்றத் துறையினர், விமானத்தில் இருந்து இறங்க விடாமல், அதே விமானத்தில் திருப்பி அனுப்பியதை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டித்துள்ளார்.

இது தொடர்பாக சீமான் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஈழத் தமிழ் மக்களின் இன்னலைத் துடைக்கவும், உலக நாடுகளிடையே ஈழத் தமிழினத்தின் உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் சட்டப்பூர்வ அமைப்பான உலகத் தமிழர் பேரவையின் தலைவர் இம்மானுவல் அடிகளாரை, விமானத்தில் இருந்து இறங்க அனுமதிக்காத மத்திய அரசின் குடியேற்ற அதிகாரிகள், அப்படியே திருப்பி அனுப்பியுள்ளது மனிதாபிமானமற்ற, சட்டத்திற்குப் புறம்பான அக்கிரமச் செயலாகும்.

77 வயதான மதிப்புமிக்க பெருமகனை திருப்பி அனுப்பியதன் மூலம், உலகத் தமிழினத்தை மீண்டும் ஒரு முறை இந்திய மத்திய அரசு அவமதித்துள்ளது. இச்செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தியாவிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் வந்து செல்லத்தக்க பயண அனுமதியை (Multiple Entry Visa) இம்மானுவல் அடிகளார் வைத்திருந்தும், அவரிடம் எந்த ஒரு காரணத்தையும் கூறாமல், வந்த விமானத்திலேயே மீண்டும் துபாய்க்கு திருப்பி அனுப்பியுள்ளது இந்தியக் குடியேற்றத் துறை.

எப்படி 80 வயதிற்கு அதிகமான பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக சென்னைக்கு வந்தபோது, எவ்வித காரணமும் கூறாமல், விமானத்தில் இருந்து இறங்கக் கூட அனுமதிக்காமால், மனிதாபிமானமற்று திருப்பி அனுப்பியதோ, அதேபோல் உரிய பயண ஆவணங்களுடன் வந்திருந்த இம்மானுவல் அடிகளாரையும் திருப்பி அனுப்பியுள்ளது.

தமிழ் மக்களை அவமானப்படுத்த வேண்டும் என்கிற திட்டமிட்ட நோக்குடன் இப்படிப்பட்ட நடவடிக்கைகளில் இந்தியக் குடியேற்றத் துறை தொடர்ந்து செயல்ப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக நாம் விசாரித்ததில், அவர் முன்பொருமுறை இந்தியா வந்திருந்தபோது, அனுமதிக்கப்பட்ட காலத்திற்கும் அதிகமாக இங்கு தங்கிவிட்டார் என்றும், அதன்படி அவர் இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கு நுழைய அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.

இன்னும் 3 ஆண்டுகளுக்கு இந்தியாவில் நுழைய அவருக்கு அனுமதி இல்லையென்றால், அவருக்கு லண்டனில் உள்ள இந்தியத் தூதரகம் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தியா வந்து செல்லக் கூடிய விசா வழங்கியது ஏன்? எனவே இது மத்திய அரசின் தூண்டுதலால் செய்யப்பட்ட திட்டமிட்ட அவமதிப்பாகும்.

ஈழத் தமிழர்கள் ஒன்றே முக்கால் இலட்சம் பேரை இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபக்சவை உலக நாடுகள் தூற்றுகின்றன.

நமது நாட்டு மீனவர்கள் 540 பேர் இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டுள்ளனர், இன்றளவும் நடுக்கடலி்ல் வைத்து தாக்கப்படுகின்றனர். ஆனால், இந்திய மத்திய அரசோ, ராஜபக்சவிற்கு அழைப்பு விடுத்து, சிகப்புக் கம்பளம் விரித்து, அரசு விருந்தினராக வைத்துக் கொண்டாடி புளங்காகிதம் அடைகிறது.

அதே நேரத்தில், கடும் துயரத்தில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழினத்திற்கு பெருமனது கொண்டு தொண்டு செய்துவரும் மதிப்புமிக்கப் பெருமகனார் இம்மானுவல் அடிகளார் போன்றவர்களை அவமதித்து திருப்பி அனுப்பி வைக்கிறது. தன்னை ஜனநாயக நாடு என்று அழைத்துக்கொள்ளும் இந்தியாவிற்கு சற்றும் பொருந்ததாத, நாகரீகமற்ற நடவடிக்கைகளாகும் இது.

ஈழத் தமிழினத்தை அழிக்க ராஜபக்சவுடன் கைகோர்த்துச் செயல்பட்ட மத்திய காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு, தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழர்கள் பாடம் புகட்டிய பிறகும் அது திருந்தவில்லை. தமிழினத்திற்கு எதிரான அதன் போக்கு மாறவில்லை, தமிழினத்தை வஞ்சிக்கும் எண்ணத்துடன் செயல்பட்டு வருகிறது என்பதற்கு இந்த நிகழ்வு அத்தாட்சியாகும்.

எனவே காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும், மீண்டும் தமிழர்கள் பாடம் புகட்ட வேண்டும். சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வாக்களித்து, அதற்கு மாபெரும் தோல்வியைத் தந்ததுபோல், நடைபெறவுள்ள தமிழக உள்ளாட்சித் தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர்கள் அனைவருக்கு எதிராகவும் தமிழின மக்கள் வாக்களித்து, அதனை தமிழ்நாட்டிலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் கெல்லி எறிய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தமிழர்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறது என்றும் அவர் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Friday 14 October 2011

இங்கே போயிருப்பீர்கள்..! இப்படிப் பார்த்திருப்பீர்களா?(பட இணைப்பு)


இலங்கையின் அதிசயிக்கத்தக்க பகுதிகளில் சிகிரியாக் குன்றும் ஒன்றாகும். நம்மில் பலர் அங்கு சென்று வந்திருப்போம். அதிசயிக்கத்தக்க குகை ஓவியங்களை கண்டு மகிழ்ந்திருப்போம்.

அருகிலிருந்து பார்த்தால் ஓங்கி உயர்ந்து விரிந்து அகலமாகக் காட்சியளிக்கும் சிகிரியா குன்றை ஆகாயத்திலிருந்து பார்த்தால் எப்படியிருக்கும்?

அதனை நீங்கள் இங்கே பார்த்துக்கொள்ளலாம்.

Pics by: Sajith Kularatne






பாலிவுட் பார்ட்டியில் அனுஷ்காவுக்கு 'இச்' கொடுத்து சிக்கிய ஷாஹித்


பார்ட்டி ஒன்றில் இந்தி நடிகர் ஷாஹித் கபூர், நடிகை அனுஷ்கா ஷர்மாவை ஓரங்கட்டி 'உம்மா' கொடுக்கும்போது கையும், களவுமாகப் பிடிபட்டுள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூரும், பிரியங்கா சோப்ராவும் அவ்வப்போது சேர்வதும், பிரிவதுமாக உள்ளனர். தற்போது அவர்கள் நிரந்தரமாக பிரிந்துள்ளனர். அதற்கு காரணம் ஷாருக் கான் என்று கூறப்படுகிறது. பிரியங்காவும் ஷாஹித்தை பிரிந்த பிறகு ஷாருக்குடன் ஜாலியாக ஊர் சுற்றிக் கொண்டிருக்கிறார். இதனால் ஷாருக் மனைவி கௌரி கடுப்பாகியுள்ளார் என்று பாலிவுட்டில் பேசப்படுகிறது.

இந்த நிலையில், ஷாஹித் கபூரும் இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. ஆனால் அதை உறுதிபடுத்த முடியவில்லை. இந்நிலையில் இம்ரான் கான் நடிதத் மேரி பிரதர் கி துலஹன் பட வெற்றியைக் கொண்டாட பார்ட்டி கொடுக்கப்பட்டது.

பார்ட்டிக்கு வந்த ஷாஹித் அங்கு அத்தனை பேர் இருப்பதை மறந்துவிட்டு அனுஷ்காவை ஓரங்கட்டி அவருக்கு இச், இச் என்று முத்தம் கொடுத்துள்ளார். இதைப் பார்த்த பாலிவுட் நட்சத்திரம் ஒருவர் யப்பா, மீடியாக்காரங்க இருக்காங்க, அப்புறம் முத்தம் கொடுக்கலாம்னு சொல்லி இருவரது 'உதடு'களையும் கஷ்டப்பட்டு பிரித்து வைத்துள்ளார்.

இருந்தாலும் பிரியாமல், ஒட்டி உறவாடியபடி, பார்ட்டி முழுவதும் ஷாஹித்தும், அனுஷ்காவும் ஒட்டிக் கொண்டே திரிந்துள்ளனர். கரீனா கபூரை காதலிக்கும்போது ஷாஹித் அவருக்கு லிப் டூ லிப் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அனுஷ்காவும், ஷாஹிதும் சேர்ந்து பத்மாஷ் கம்பெனி என்ற படத்தில் நடித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இப்போது இருவரும் வேறு 'கம்பெனி'க்கு மாறிவிட்டது உறுதியாகி விட்டது இந்த 'இச் இச்' மூலம்.

தைரியம் எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி! - சினேகா சிறப்புப் பேட்டி


நடிக்க வந்து முழுசாக பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன.... தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசியாக இன்னமும் வீற்றிருக்கிறார் சினேகா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து பிரபல நடிகை என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

தட்ஸ்தமிழின் தீபாவளி ஸ்பெஷலுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

இந்த பதினோரு ஆண்டு திரையுலக அனுபவங்கள் குறித்து....

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். திரையுலகில் இன்றைக்கு இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிப்பதே கஷ்டம்தான். எனக்கு அந்த வாய்ப்ப்பு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் நான் எவ்வளவோ படங்கள் நடித்தாலும், என்னைத் திரையில் பார்த்து அல்லது என் நடிப்பைப் பார்த்து யாரும் முகம் சுளித்ததில்லை. இது எனக்கு பெரிய அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. நிறைய பாடங்களை இந்த பதினோரு ஆண்டுகளில் கற்றுக் கொண்டேன்.

எல்லோருக்கும் தங்கள் ஆதர்ஸ நடிகை என்று யாராவது இருப்பார்கள். இவர்களைப் பார்த்துதான் நான் நடிக்க வந்தேன் என்று சொல்வார்கள். உங்களுக்கு?

எனக்கு அப்படி யாரும் இல்லை. காரணம் நான் யாரைப் பார்த்தும் உந்தப்பட்டு இந்த துறைக்கு வரவில்லை. ஒரு விபத்து போலத்தான் என் திரைப்பிரவேசம் அமைந்தது.

ஆனால் நான் திரையுலகில் மிகவும் ஆச்சர்யத்துடன் பார்ப்பது, இவரைப் போல இருக்க வேண்டும் என நினைப்பது, ராதிகா மேடத்தை பார்த்துதான். எனக்கு தனிப்பட்ட முறையிலும் சரி, திரையிலும் சரி அவரை ரோல்மாடல் என்று சொல்லலாம். அவரது துணிச்சல், பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், சவால்களை அவர் சந்திக்கும் பாங்கு... எல்லாமே எனக்குப் பிடிக்கும்.

சினிமாவில் போலீஸ் அதிகாரியாக நடித்தீர்கள். துணிச்சலாக சண்டையெல்லாம் போட்டிருந்தீர்கள். நிஜத்தில் உங்கள் துணிச்சலின் அளவு என்ன?

முன்பெல்லாம் நான் கொஞ்சம் பயந்த சுபாவமாகத்தான் இருந்தேன். ஆனால் இந்த சினிமாவில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என்னை நிறைய மாற்றிவிட்டன. இன்றை பிரச்சினைகளைப் பார்த்து பயப்படுவதில்லை. வருவது வரட்டும் என துணிந்து நிற்கிறேன். யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்வதில்லை. என் சுபாவத்தை மாற்றுவதில்லை. இப்போது எனக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான்!

ஒரு இடைவெளி விழுந்த மாதிரி இருக்கே... அடுத்தடுத்த படங்கள் என்ன?

பொன்னர் சங்கரில் ஒரு ரோல் பண்ணியிருந்தேன். இப்போது முரட்டுக்காளை, விடியல்னு ரெண்டு படம் வரவேண்டியிருக்கு.

தெலுங்கில் ராஜன்னா என்ற படமும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். என்னைப் பொருத்தவரை எந்த மொழி என்று பார்க்காமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதால் இடைவெளி ஏதும் தெரிவதில்லை.

நமக்கான பாத்திரம், திறமைக்கேற்ற வேடம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

இதில் வருத்தப்பட என்ன உள்ளது. சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம். இங்கு ஹீரோயின்கள் வேலை மிகவும் குறைவு. ஆரம்பத்தில் நான்கு சீன்கள் இருக்கும். இடையில் நான்கு பாடலுக்கு கூப்பிடுவார்கள். க்ளைமாக்ஸில் இருந்தால் இருப்போம். இல்லாவிட்டால் எல்லாம் முடிந்து கடைசி சீனில் மகிழ்ச்சியாக ஒரு போஸ்... இவ்வளவுதான் ஹீரோயின்கள் வேலை. எப்போதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள் கிடைப்பதுண்டு. எனவே கிடைக்கிற வாய்ப்புகளில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வழக்கமான கேள்விதான்... ஆனால் கேட்க வேண்டியது அவசியமாக உள்ளது. திருமண திட்டம் என்ன?

சினிமா போதும், போரடித்துவிட்டது என எப்போது எனக்குள் குரல் கேட்கிறதோ அப்போது, வேறு தளத்துக்கு மாறிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் இப்போதைக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டியுள்ளது.

வதந்திகள், கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

அது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. அதுவும் என்னைப் போன்றவர்கள் இருப்பது ஷோ பிஸினஸ். இங்கு கிசுகிசுக்கள் வராமலிருந்தால்தான் ஆச்சர்யம். உண்மை தெரியாமல் எழுதுகிறார்களே என்று முதலில் வருத்தமாக இருந்தாலும், இப்போதெல்லாம் அதை சகஜமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

இந்த தீபாவளிக்கு உங்கள் படம் எதுவும் வரவில்லை என்ற வருத்தம் உள்ளதா?

நிச்சயமாக. எல்லா நடிகைகளுக்குமே தங்கள் படம் பண்டிகையின்போது வரவேண்டும் என்ற ஆசை இருக்கும். சரி, அதனால் என்ன... எப்படியும் சின்னத்திரையில் என்னைப் பார்ப்பார்கள் ரசிகர்கள். அடுத்த தீபாவளிக்கு என் படம் ரிலீசாகும் என நம்புகிறேன்.

மக்கள் ரசனையில் குறையில்லை... நல்ல படங்கள் அதற்கான மரியாதையைப் பெற்றே தீரும்! - வசந்தபாலன்


பொதுவாக தமிழ் சினிமா ரசிகர்கள் மீது படைப்பாளிகளும் தயாரிப்பாளர்களும் வைக்கும் குற்றச்சாட்டு, 'ரசனை மாறிவிட்டது' என்பதுதான். நல்ல படம் கொடுத்தாலும் ரசிக்கமாட்டேன் என்கிறார்களே என பலரும் புலம்புவதைக் கேட்க முடிகிறது.

ஆனால் வசந்த பாலன் பார்வை வேறு. மக்கள் ரசனையில் பழுதில்லை. நல்ல படைப்புகள் அவற்றுக்குரிய மரியாதை - அங்கீகாரத்தைப் பெற்றே தீரும், என்கிறார்.

ஆல்பம் படத்தில் தன் பயணத்தை ஆரம்பித்தவர் வசந்த பாலன். ஆனால் அந்தப் படம் சரியாகப் போகவில்லை. வசந்த பாலனுக்கு அது பெரும் ஏமாற்றத்தையும் சோதனைகளையும் தந்துவிட்டது. ஆனால் அவர் மக்களையோ, ரசிகர்களையோ குறை சொல்லவில்லை. அதே நேரம் தன் தரத்தில் சமரசமும் செய்து கொள்ளவில்லை.

அடுத்த படம் வெயில் கொடுத்தார். வாழ்க்கையில் தோற்றவனின் கதையைச் சொல்லி வென்றார். பாக்ஸ் ஆபீஸில் மட்டுமல்ல, சர்வதேச அளவிலும் அங்கீகாரம் பெற்றது அந்தப் படம்.

அடுத்த படமான அங்காடித் தெரு, தமிழ் சினிமாவின் புதிய மைல்கல் என்று போற்றப்பட்டது. நல்ல வசூல், பெரிய அளவில் அங்கீகாரம் என வசந்த பாலன் அடுத்த கட்டத்துக்குப் போனார்.

அடுத்தடுத்து ஜெயித்தாலும், இந்த வழக்கமான கதைகளிலிருந்து வெளியில் வர விரும்பியவர், அரவானைக் கையிலெடுத்தார்.

பழந்தமிழரின் வாழ்வை மையப்படுத்திய ஒரு கதை. 300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழ் சமூகம், களவை மையமாகக் கொண்டு வாழ்க்கை நடத்திய ஒரு கூட்டத்தின் வாழ்க்கை நெறிகள், சாகஸங்கள், சோகங்கள் என வித்தியாசமான படைப்பை உருவாக்கி முடித்துவிட்டு, மீடியாக்களை சந்தித்து வருகிறார்.

பிரசாத் லேபில் பத்திரிகையாளர் சந்திப்பை முடித்துவிட்டு, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பேட்டி கொடுத்த வசந்த பாலன், தட்ஸ்தமிழுக்கு அளித்த பேட்டி:

அரவான் எடுக்க உங்களை உந்தியது எது?

ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை நாம் தரவேண்டும். இந்த எண்ணம் மனதில் உதித்தவுடன், என்னால் வழக்கமான எந்த கதைகள் பற்றியும் யோசிக்கவே முடியவில்லை. என்ன தரலாம், எப்படி உருவாக்கலாம் என மனசு பூரா பரபரவென இருந்தது. ஒரு நாள் காவல் கோட்டம் நாவல் படித்துக் கொண்டிருந்தேன். அது வேறு உலகத்துக்கு என்னை கூட்டிச் சென்றது. அந்தக் கதையில் வரும் ஒரு பத்து பக்க சமாச்சாரம்தான் அரவானுக்கான விதை.

இதுதான் நாம் எடுக்க வேண்டிய சினிமா. ரசிகர்களுக்கு இப்படி ஒரு தீனிதான் இப்போது அவசியம் என முடிவெடுத்ததும் விறுவிறுவென உருவானது அரவான் திரைக்கதை.

பொதுவாக, ரசிகர்களின் ரசனை மாறிவிட்டது, நல்ல படங்களை ரசிப்பதில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகிறார்கள். உங்கள் கண்ணோட்டம் என்ன?

யார் குற்றம் சொல்கிறார்கள் என்றெனக்குத் தெரியவில்லை. ரசிகர்களின் ரசனை அப்படியேதான் இருக்கிறது. அதில் எந்த மாற்றமும் எனக்குத் தெரியவில்லை. என்ன, மாற்றுப் பொழுதுபோக்குகள் அதிகரித்துவிட்டதால், திரையரங்குக்கு அவர்கள் அடிக்கடி வரமுடியாமல் போயிருக்கலாம். அல்லது வேறு காரணங்கள் இருக்கலாம்.

ஆனால் நல்ல படங்கள் அவற்றுக்கான அங்கீகாரத்தை ரசிகர்களிடம் பெறத் தவறியதே இல்லை. வெயிலும், அங்காடித் தெருவும் வெளியான போதும் தமிழ் சினிமாவில் இதே சூழல்தானே இருந்தது? என் படங்கள் இரண்டு ஓடிவிட்டதால் இப்படி நான் சொல்லவில்லை. இன்னும் எத்தனையோ நல்ல படங்கள் சரியான திட்டமிடலோடு, உரிய நேரத்தில் வெளியாகி வெற்றியை ஈட்டியுள்ளன.

எனக்கு மக்கள் ரசனை மீது, நமது ஊடகங்கள் மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கைதான் என்னை அரவான் என்ற பீரியட் பிலிம் எடுக்க வைத்தது.

உங்கள் படைப்புகளில் அரவானை எப்படிப் பார்க்கிறீர்கள்?

அரவான் நிச்சயம் தமிழ் சினிமா வரலாற்றில் தடம் பதிக்கும் படமாக இருக்கும். இதில் பங்காற்றியுள்ள அத்தனை பேருக்கும் தனி மரியாதையை இந்தப்படம் பெற்றுத் தரும். தனித்தனியாக ஒவ்வொருவரையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதில்லை. அனைவருமே அப்படியொரு உழைப்பை இந்தப் படத்தில் கொட்டியிருக்கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.

இதுவரை நான் பண்ணதெல்லாம் சின்ன பட்ஜெட் படங்கள்தான். இந்தப் படத்தில் ஒரே ஜம்பாக எகிறிவிட்டேன். ஆனால் நான் கீழே விழுந்துவிடாமல் பத்திரமாக தரையிறங்கக் காரணமாக இருந்தவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் டி சிவா. இவரைப் போன்றவர்கள் இருக்கும்வரை தமிழ் சினிமா தழைக்கும். நல்லா இருக்கும். சினிமாவை நிஜமாக நேசிக்கிற ஒரு மனிதருக்குப் படம் பண்ணதில் எனக்கு ஆத்ம திருப்தியும் கூட.

சரித்திரப் படம் என்றால் அந்த உணர்வை திரையில் கொண்டு வருவது முக்கியம். உங்கள் இசையமைப்பாளர் கார்த்திக் ஒரு மாடர்ன் இளைஞர். எப்படி வந்திருக்கிறது அரவான் இசை?

மிகப் பிரமாதமாக வந்திருக்கிறது. இன்றைக்கு அரவான் படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரிய ஹிட். இந்தப் படத்துக்காக அவரை பிழிந்தெடுத்தேன் என்று சொன்னால் மிகையில்லை. அந்த அளவுக்கு மெனக்கெட்டுள்ளோம். திரையில் நீங்கள் எதிர்ப்பார்க்கும் உணர்வு நிச்சயம் கிடைக்கும்.

கார்த்திக் என்றில்லை. என் கேமராமேன் சித்தார்த், கலை இயக்குநர் விஜயமுருகன் என அத்தனை பேரும் பிரமிக்க வைக்கும் அளவு பங்களிப்பைத் தந்துள்ளனர் அரவாணுக்கு. எனக்கு என் தயாரிப்பாளரின் பணத்தை வீணடிக்கக் கூடாது என்ற பதைப்பு. கிடைத்த பெரிய வாய்ப்பு சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற தவிப்பு. அதற்காக அத்தனை பேரையும் கடுமையாக வேலை வாங்கியிருக்கிறேன். என் செட்டில் ஒருவருக்குக் கூட ரத்தக்காயம் ஏற்படாமல் இருந்ததில்லை. அதற்காக கவலைப்பட்டுக் கொண்டிருக்கவும் நேரமில்லை. ரிசல்ட் சரியாக இருக்க வேண்டும். அதற்காக எத்தனை கஷ்டத்தையும் பட்டே தீரவேண்டும்.

பொதுவாக நடிகைகளுக்கும் இயக்குநர்களுக்கும் அல்லது நடிகைகளுக்கும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும் என்பார்கள். ஆனால் பசுபதிக்கும் உங்களுக்கும் அப்படியொரு புரிதல். உங்கள் படங்களில் அவர் பங்களிப்பு அவுட்ஸ்டேன்டிங்காக உள்ளது. எப்படி?

அதுதான் பசுபதியின் சிறப்பு. அவருடைய கேரியரில் ஒரு நல்ல படத்தைக் கொடுத்தேன் என்ற சின்ன திருப்தி எனக்கு இருக்கிறது. ஆனால் அவரது திறமைக்கு அவர் சர்வதேச அளவில் எங்கோ இருக்க வேண்டும். தமிழ் சினிமாவே இன்னும் அவரை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற ஆதங்கம் எனக்கு உண்டு.

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

மற்றவர்களைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும். என் படங்களில் ஆண் பெண் என்ற பேதமில்லாமல், கதைப்படி முக்கியத்துவம் இருக்கும். சொல்லப்போனால், இதுவரை நான் எடுத்த மூன்று படங்களிலுமே பெண் பாத்திரங்களின் பங்களிப்பு கணிசமாகவே இருக்கும்.

அடுத்தபடம் குறித்து...?

அரவான் வெளியாகும் வரை எனக்கு வேறு சிந்தனையே இல்லை!

ஓட்டல் ஆரம்பிக்க திட்டமிட்டு உணவு தளம் ஆரம்பித்த லேகா ரத்னகுமார்!


வசூல் அதிகமாயிடுச்சி... நன்கொடை கேட்டு நச்சரிக்கிறாங்க! - இயக்குநர் சித்திக்


பாடிகார்ட் இந்திப் படத்தின் வசூல் எக்கச்சக்கம் என செய்தி வெளியாகியுள்ளதால் தினமும் நன்கொடை கேட்டு நச்சரிக்கிறார்களாம் அந்தப் படத்தின் இயக்குநர் சித்திக்கை.

கேரள பட உலகின் முன்னணி இயக்குனர் சித்திக். இவர் தமிழில் விஜய் நடித்த பிரண்ட்ஸ், எங்கள் அண்ணா உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார். பாடிகார்ட் மலையாள படத்தை தமிழில் காவலன் என்ற பெயரில் இயக்கினார். இதில் விஜய் நடித்தார். அதே போல் இந்தியிலும் பாடிகார்ட் படத்தை இயக்கினார். இந்தியில் வெளியான பாடிகார்ட் படம் 200 கோடி வரை வசூல் செய்தது.

இதனால் மலையாள பட தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் சங்கத்தில் உறுப்பினராக சித்திக் இணைந்தார். பாடிகார்ட் படம் மூலம் கோடிக்கணக்கான பணம் வசூல் ஆனது தெரிந்து, தன்னை தினமும் பல சேவை அமைப்புகள் நன்கொடை கேட்டு நச்சரிப்பதாகவும், இதனால் தனக்கு தூக்கமே போய்விட்டதாகவும் சித்திக் புலம்ப ஆரம்பித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், "படத்தை இயக்குவதோடு எனது கடமை முடிந்து விடுகிறது. அதில் வரும் லாபம் அனைத்தும் தயாரிப்பு நிறுவனத்துக்குதான் சேரும். இது புரியாமல் பலரும் என்னை தேடி வருவதால் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியவில்லை. பாடிகார்ட் படம் மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது. இதனால் படத்தை தயாரித்தவர்களுக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது. எனக்கும் திருப்தியான சம்பளம் கிடைத்துள்ளது.

மலையாள படங்களை மாற்று மொழிகளில் இயக்குவது கடினமானதாகும். ஆனாலும் பிற மொழி தயாரிப்பாளர்கள் தொடர்ந்து தன்னிடம் படம் இயக்கி தருமாறு கேட்பதால் மறுக்க முடியவில்லை. விரைவில் மீண்டும் தமிழ் மற்றும் இந்தியில் ஒரு படத்தை இயக்க உள்ளேன்," என்றார்.

இரண்டாவது இன்னிங்ஸிலும் அசத்துவேன் - சோனியா அகர்வால்


அழகு, நடிப்பு என ஒரு நல்ல நடிகைக்குரிய அனைத்து லட்சணங்களுடன் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் சோனியா அகர்வால்.

செல்வராகவனுடன் திருமணம், விவாகரத்து என அவரது வாழ்க்கை இடையில் சில ஆண்டுகள் கழிந்தது.

இப்போது விவாகரத்துக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள அவருக்கு நல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்துள்ளன. பொதுவாக கல்யாணமான நடிகைகளை வயது வித்தியாசமின்றி அக்கா அம்மா வேடங்களுக்குத் துரத்திவிடும் தமிழ் சினிமா, சோனியாவுக்கு மட்டும் மீண்டும் ஹீரோயின் அந்தஸ்தைக் கொடுத்துள்ளது.

ஒரு நடிகையின் வாக்குமூலம் என்ற படத்தி்ல கதையின் நாயகியாக நடிக்கும் சோனியா, அடுத்து தீர்வு எனும் படத்தில் நாயகியாக நடிக்கிறார். அதேநேரம் இன்னொரு ஹீரோயின் நடிக்கும் படங்கள் என்றாலும் இன்னொரு நாயகியாக நடிக்க தயங்குவதில்லை அவர்.

இதனால் முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வரத் தொடங்கியுள்ளதாம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "நான் எதிர்பார்க்காத வரவேற்பு இப்போது கிடைத்துள்ளது. இதை தக்கவைத்துக் கொள்வேன். முதல் நாயகியா இரண்டாவது நாயகியா என்று பார்க்கும் நிலையில் நான் இல்லை. என் பாத்திரம் பேசப்படுமானால் எந்த வேடமும் ஓகே. இரண்டாவது இன்னிங்ஸிலும் மக்களின் விருப்பத்துக்குரிய நடிகையாக இருக்க வேண்டும் என்பதே என் ஆசை," என்றார்.

தயாரிப்பாளரிடம் சம்பளத்தை திருப்பித் தந்த விமல்!


நல்ல படம்... அருமையான படைப்பு என போற்றப்படும் சில படங்கள் வணிக ரீதியில் தாக்குப் பிடிக்க முடியாத சூழல் உருவாகிறது. இதில் ரசிகர்களின் பங்கும் மீடியாவின் பங்கும் 'மகத்தானது'!

மசாலா படங்களைத் தாங்கு தாங்கென்று தாங்கும் இவர்கள் நல்ல படங்களைக் கண்டுகொள்ளாமல் போவதால் உயர்ந்த லட்சியத்தோடு வரும் படைப்பாளிகள் மசாலா ரூட்டுக்குத் தாவுகிறார்கள்.

சமீபத்தில் வெளியாகி, மிக அருமையான படைப்பு என விமர்சகர்களால் புகழப்பட்ட சற்குணத்தின் வாகை சூட வா படத்துக்கும் அப்படியொரு நிலை ஏற்பட்டுள்ளது. ரசிகர்கள் வணிக ரீதியாக ஆதரவு தராததால் இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம்.

ஒருவேளை இந்தப் படம் ஓடாவிட்டால் என் சம்பளத்தை திருப்பித் தந்துவிடுகிறேன் என படத்தின் நாயகன் விமல் முன்பே தயாரிப்பாளர் முருகானந்தத்துக்கு வாக்களித்திருந்தாராம்.

இந்த நிலையில் படம் வணிக ரீதியாகப் போகவில்லை என்று தெரிந்ததும், தனது வாக்கைக் காப்பாற்றும் விதத்தில் சம்பளப் பணம் முழுவதையும் திருப்பிக் கொடுத்துள்ளார் விமல். அடுத்து இரு புதிய படங்களில் ஒப்பந்தமான அவர், அந்தப் படங்களுக்காக வாங்கி அட்வான்ஸ் தொகையை முருகானந்தத்துக்குக் கொடுத்து, அவரை சிக்கலிலிருந்து காப்பாற்றியுள்ளார்.

விமலின் இந்த செயல் கோடம்பாக்கத்தையே வியக்க வைத்துள்ளது. சினிமா காப்பாற்றப்பட வேண்டும் என்ற அவரது உயர்ந்த நோக்கத்தைக் கண்டு நெகிழ்ந்துவிட்டாராம் தயாரிப்பாளர். வாகை சூட வாவில் மிக கஷ்டப்பட்டு உழைத்திருந்தார் விமல். சேற்றிலும் புழுதியிலும் புரட்டி எடுத்திருந்தார்கள் அவரை. இப்படி கஷ்டப்பட்டு சம்பாதித்ததை, தயாரிப்பாளருக்கு திருப்பித் தந்திருப்பது அவரது உயர்ந்த குணத்தைக் காட்டுவதாக தயாரிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். இப்படி பணத்தைத் தந்ததோடு, அடுத்த படத்தில் இலவசாகவே நடிச்சுத் தர்றேன் கவலைப்படாதீங்க என்று தயாரிப்பாளரை திக்கு முக்காட வைத்துள்ளார் விமல்.

சித்தார்த் - ஸ்ருதி பிரிந்தனர்!


நடிகர் சித்தார்த்தும் ஸ்ருதியும் பிரிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு நடிகர் சித்தார்த்தும், ஸ்ருதி ஹாஸனும் ஒரு படத்தில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டு, திருமணமாகாமலேயே இணைந்து வாழ்வதாக கடந்த சில மாதங்களாகக் கூறப்பட்டு வந்தது. கமல் ஹாஸனுக்கும் மகளின் இநத உறவு குறித்து தெரியும் என்றும் கூறினர்.

இதனை ஸ்ருதி மறுக்கவில்லை. அவரிடம் கேட்டபோதெல்லாம், அது எனது தனிப்பட்ட விவகாரம் என்றே கூறி வந்தார். சித்தார்த்தும் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வந்தார்.

இந்த நிலையில் இருவரும் இப்போது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டதாக தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பாக செய்தி பரவி வருகிறது.

உறவு குறித்து மவுனம் காத்தது போலவே, இந்தப் பிரிவு குறித்தும் ஸ்ருதி - சித்தார்த் எதுவும் கூற மறுத்துவிட்டனர். ஆனால் சித்தார்த் தன்மேல் ஆதிக்கம் செலுத்துவது பிடிக்காததால் ஸ்ருதி விலகிக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

சித்தார்த் ஏற்கெனவே திருமணமாகி, மனைவியை விவாகரத்து செய்தவர் என்பவது குறிப்பிடத்தக்கது.

மாயவரம் இயக்குநர் ராஜேந்திரனை கைது செய்ய நடவடிக்கை!


சென்னை: போலீஸ் அனுமதி இல்லாமல் படப்பிடிப்பு நடத்திய சினிமா இயக்குநர் ராஜேந்திரனை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சென்னை நந்தம்பாக்கம் போலீஸ் நிலைய எல்லைக்குள் பர்மா காலனி உள்ளது. இங்குள்ள முனீஸ்வரர் கோவில் அருகே கடந்த 12-ந் தேதி அன்று 'மாயவரம்' என்ற படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

நள்ளிரவில் நடந்த இந்த படப்பிடிப்புக்கு அரசு அனுமதியோ, போலீஸ் அனுமதியோ வாங்கப்படவில்லை. முறையாக போலீசாருக்கு தகவல் கூட தெரிவிக்கவில்லை.

தன்னிச்சையாக படப்பிடிப்பு நடத்தி வந்த படப்பிடிப்பு குழுவினர் நள்ளிரவில் பெரிய ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதை தட்டிக்கேட்ட அந்த பகுதியை சேர்ந்த சுப்புலட்சுமி என்பவரையும் மிரட்டியுள்ளனர். இதனால் சுப்புலட்சுமி நந்தம்பாக்கம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக நந்தம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

வலைவீச்சு

உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. போலீசாரை பார்த்ததும் அந்த படத்தின் தயாரிப்பு மேலாளர் மூர்த்தி, படத்தின் இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர்.

அவர்கள் மீது போலீஸ் அனுமதியில்லாமல் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் விதத்தில் படப்பிடிப்பு நடத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சோனா 'எபக்ட்': பார்ட்டினாலே தலைதெறிக்க ஓடும் வெங்கட் பிரபு


நடிகை சோனா-எஸ்.பி.பி. சரண் விவகாரம் பூதாகரமாக வெடித்ததையடு்தது இயக்குனர் வெங்கட் பிரபு இப்போதெல்லாம் நைட் பார்ட்டி என்றாலே தலைதெரிக்க ஓடுகிறாராம்.

மங்காத்தா படம் ஹிட்டானதற்காக அதில் நடித்த நடிகர் வைபவ் மது விருந்து வைத்தார். அதில் கலந்து கொண்ட கவர்ச்சி நடிகை சோனா பாடகர் எஸ். பி. பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ். பி. பி. சரண் தன்னை கற்பழிக்க முயன்றதாக போலீசில் புகார் கொடுத்தார். வீடியோ ஆதாரங்களையும் கொடுத்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சரணை சும்மாவிட மாட்டேன் என்று வீர வசனம் பேசிய சோனா கடைசியில் சமாதானம் ஆகிவிட்டார். மன உளைச்சல் காரணமாக 1 ஆண்டுக்கு சினிமாவில் நடிக்கப் போவதில்லை என்றும் அறிவித்தார்.

சம்பந்தப்பட்ட பார்ட்டியில் வெங்கட் பிரபுவும் இருந்தார். அவரது பெயரும் கூட லேசுபாசாக அடிபடத் தொடங்கியது. தற்போது இரவுப் பார்ட்டி, மது பார்ட்டி என்றாலே பிரபுவுக்கு அலர்ஜியாகி விட்டதாம். பார்ட்டிக்குப் போலாமா என்று கேட்டாலே ஓடி விடுகிறாராம்.

தன் மகள் ஷிவானியின் பிறந்தநாளை கடந்த ஆண்டு சென்னையில் கோலாகலமாகக் கொண்டிய அவர் இந்த ஆண்டு மலேசியாவுக்கு ஷிப்ட் பண்ணி விட்டாராம்.

வெங்கட் பிரபு மலேசியாவில் கொடுத்த பார்ட்டியில் சர்ச்சைக்குரிய சென்னை பார்ட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் ஆஜராகியிருந்திருக்கின்றனர். ஆனால் சோனாவை மட்டும் அழைக்கவேயில்லையாம்.

இவர்தான் இப்படி, இவரது தம்பி பிரேம்ஜி அமரனுக்கு இந்தப் பயமெல்லாம் இல்லையாம். தொடர்ந்து வழக்கம் போல கை விரல்களை நீட்டி மடக்கி வித்தை செய்தபடி பார்ட்டிகளுக்குப் போய் வருகிறாராம்.

சிரஞ்சீவி தம்பிக்கு குரல் கொடுக்கும் 'தல'


இயக்குனர் விஷ்ணுவர்தனின் தெலுங்கு படமான பஞ்சா தமிழில் டப் செய்யப்படுகிறது. அதில் ஹீரோ பவன்குமாருக்கு அஜீத் குமார் குரல் கொடுக்கிறார்.

அஜீத் குமார் பில்லா 2 படத்தில் படு பிசியாக இருக்கிறார். அதே போன்று இயக்குனர் விஷ்ணுவர்தன் சிரஞ்சீவி தம்பியை வைத்து பஞ்சா என்னும் படத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த படத்தில் 'தீராத விளையாட்டுப் பிள்ளையில்' நடித்த நடிகை சாரா ஜேன் மற்றும் மாடல் அழகி அஞ்சலி லாவனியாவும் நடிக்கின்றனர்.

இந்த படத்தை தமிழில் டப் செய்கிறார் விஷ்ணுவர்தன். ஹீரோ பவன் கல்யாணுக்கு தமிழில் குரல் கொடுக்க யாரை அணுகலாம் என்று யோசித்த அவருக்கு சட்டென்று நினைவுக்கு வந்தது நம்ம 'தல' தான்.

என்னதான் விஷ்ணுவர்தன் பில்லா 2 படத்தில் இருந்து விலகினாலும் அவருக்கும், அஜீத்துக்கும் இடையேயான நட்பு கெடவில்லை. அதனால் அஜீத் குமாரை அணுகி பவன் கல்யாணுக்கு கொஞ்சம் குரல் கொடுங்களேன் என்று கேட்க அவரும் ஓகே சொல்லிவிட்டார் என்று கூறப்படுகிறது.

இந்த படம் டிசம்பர் மாதம் ரிலீஸாகிறது. அஜீத் பில்லா-2 படத்தையும், விஷ்ணுவர்தன் பஞ்சா படத்தையும் முடித்த பிறகு இருவரும் சேர்ந்து பணிபுரியவுள்ளனர்.

நித்யா மேனனுக்கு 'ஷாக்' கொடுத்த 'பவர் ஸ்டார்' சீனிவாசன்-'பியூஸ்' போய் திரும்பினார்!


தமிழ்த் திரையுலகைக் காக்க வந்த 'ஆபத்பாந்தவன்', 'பவர் ஸ்டார்' சீனிவாசன் மற்றும் ஒரு 'அலப்பறை'யை அரங்கேற்றியுள்ளார்.

தான் நடிக்கும் படத்திற்கு தன்னுடன் ஜோடி சேர நித்யா மேனனை அணுகியுள்ளார் சீனிவாசன். இதை சற்றும் எதிர்பாராத நித்யா மிரண்டு போய்விட்டாராம். 'பவர்' தாக்குதலில் சிக்கி அதிர்ந்த அவர் சற்றே சுதாரித்து சீனியர்களுடன் ஜோடி சேர மாட்டேன் என்று கூறி அனுப்பி விட்டாராம்.

வழக்கமாக ரசிகர்கள் தான் நடிகர்களுக்கு அடைமொழி வைப்பார்கள். ஆனால் டாக்டர் சீனிவாசனோ தனக்குத் தானே 'பவர் ஸ்டார்' என்ற வைத்துக் கொண்டு தமிழ்த் திரையுலகைக் கலாய்த்து வருகிறார். இவரது லத்திகா என்ற படம் '200 நாட்களைத் தாண்டி ஓடி' தமிழ்த் திரையுலகினரை பேரதிர்ச்சியி்ல ஆழ்த்தியுள்ளது. ஆனாலும் சற்றும் சளைக்காமல் அதைப் பற்றி தொடர்ந்து விளம்பரம் கொடுத்து கலக்கிக் கொண்டிருக்கிறார் சீனி.

50 வயதைத் தாண்டிய இவர் நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பாராம். அதுவும் ஆடி, ஓடி 'முடிந்த' நடிகைகளை அணுகி தனக்கு ஜோடியாக நடிக்குமாறு கேட்கிறாராம். தற்போது தனது 'டேஸ்ட்'டில் சற்று மாற்றத்தைக் கொண்டு வர முடிவு செய்த சீனி, எத்தனை நாளைக்குத் தான் இப்படியே நடிக்கிறது நாமும் 'யூத் டிரெண்டில்' தற்போதுள்ள இளம் நாயகிகளுடன் நடிக்க வேண்டாமா என்று 'புரட்சிகர' எண்ணம் அவருக்கு வந்துள்ளது.

உடனே தனது பட்டாளத்துடன் '180' பட நாயகி நித்யா மேனனை சந்தித்துள்ளார். அவரைப் பார்த்தும் நித்யா இவரு 'அவராச்சே', எதற்காக இங்கு வந்திருக்கிறார் என்று நினைத்திருக்கிறார். உடனே சீனிவாசன் தான் நடிக்கும் புதிய படத்தில் தன்னுடன் ஜோடி சேருமாறும், அதற்காக ரூ. 1 கோடி வரை சம்பளம் தருவதாகவும் தெரிவித்திருக்கிறார்.

அவர் 1 கோடி தருவதாக கூறியது கூட நித்யாவுக்கு அதிர்ச்சி தரவில்லையாம், மாறாக, கூட நடிக்குமாறு கேட்டதுதான் பெரும் அதிர்ச்சியாகி விட்டதாம். சினிமா உலகில் வாய்ப்பு தேடி வந்தால், அது பிடிக்காவிட்டால் நேரடியாக முடியாது என்று கூற மாட்டார்கள். ஏதாவது சாக்கு போக்குச் சொல்லி சங்காத்தமே வேண்டாம் என்று விலகி விடுவார்கள். அதே பாணியில், நாசூக்காக சீனியர் நடிகர்களுடன் நான் நடிப்பதில்லை என்று கூறியுள்ளார். இதை கேட்ட பவர் ஸ்டாருக்கு கொஞ்ச நேரம் 'பவர்' போய்விட்டது.

இருந்தாலும் வேறு வழியில்லாமல், மனதைத் தேற்றிக் கொண்டு அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். 'பவர் ஸ்டார்' முகம் பவரில்லாமல் இருப்பதைப் பார்த்த ஆதரவாளர்கள் விடுங்கண்ணே நித்யா மேனன் இல்லை என்றால் என்ன. நாம் டாப்ஸியை கேட்போம் என்று ஆறுதல் கூறியிருப்பதாக தெரிகிறது.

அனேகமாக டாப்ஸி 'டாப் கியரில்' சென்னையை விட்டு தற்காலிகமாக வேறு ஏரியாவுக்குப் பறந்து விடலாம் என்று தெரிகிறது.

வேலூர் மாவட்டம் - விமர்சனம்


பொதுவாக சென்னை அல்லது தென் மாவட்டங்களை மையப்படுத்திதான் திரைப்படங்கள் வருகின்றன. தமிழ் சினிமா கண்டுகொள்ளாத வேலூர் மாவட்டத்தை மையப்படுத்தி ஒரு படம் வருவது அநேகமாக இதுவே முதல் முறையாக இருக்கும். அதுவும் போலீஸ் கதை.

ஐஏஎஸ் அதிகாரியாக வேண்டும் என்ற லட்சியத்துடன் படிக்கும் நந்தாவுக்கு, ஐபிஎஸ்தான் வாய்க்கிறது. இருந்தாலும் பரவாயில்லை என்று அதை ஏற்றுக் கொண்டு வேலூர் மாவட்ட ஏஎஸ்பியாக பணியில் சேர்கிறார்.

வழக்கம்போல, ஏஎஸ்பி நந்தாவின் நேர்மைக்கும் உள்ளூர் அரசியல் பின்புலத்தோடு வளைய வரும் தாதா அழகம்பெருமாளுக்கும் மோதல். அவரைக் கைது பண்ண இவர் திட்டமிட, இவரை காலி பண்ண அவர் திட்டமிட... இந்த போலீஸ் - திருடன் கண்ணாமூச்சில் போலீஸ் உயர் அதிகாரிகளும் தாதா பக்கமே நிற்கிறார்கள். வெறுத்துப் போய் வேலையை ராஜினாமா செய்கிறார்.

ராஜினாமா செய்துவிட்டு வீடு திரும்பும் வழியில் தாதா கும்பல் அவரை அடித்து குற்றுயிராய் விட்டுவிட்டுப் போக, சிகிச்சைக்குப் பின் வீடு திரும்புகிறார். ஆனால் அவரது ராஜினாமாவை ஏற்காத போலீஸ் தலைமையகம், அவரை மீண்டும் வேலூரில் பணியாற்றவும் அனைத்து உதவிகளைச் செய்யவும் உறுதியளிக்கிறது. மீண்டும் புத்துணர்ச்சியோடு பணியில் சேரும் நந்தா, தான் நினைத்ததைச் சாதித்தாரா என்பது க்ளைமாக்ஸ்.

ஏற்கெனவே நமக்குப் பரிச்சயமான அதே போலீஸ் கதைதான் என்றாலும், கதை நிகழுமிடம் புதிது என்பதால், பார்க்க ப்ரெஷ்ஷாகத்தான் இருக்கிறது!

தனி ஹீரோவாக, தன் திறமையை முழுமையாகக் கிடைத்த வாய்ப்பை நந்தா நன்றாகப் பயன்படுத்தியுள்ளார். தன்னை நேர்மையாக செயல்படவிடாமல் சக அதிகாரிகளே தடுக்கும்போதும், அரசியல் தாதா விபச்சாரியுடன் உல்லாசம் இருக்க, அவருக்கு காவலுக்கு நிற்க நேர்ந்த அவமானத்தையும் தத்ரூபமாக வெளிப்படுத்துகிறார். இந்தப் படத்துக்குப் பிறகாவது இந்த நல்ல நடிகரை பயன்படுத்துங்கப்பா!

பூர்ணாவுக்கு பெரிதாக வேலை ஒன்றுமில்லை. கொடுத்த வேலையைச் செய்திருக்கிறார். இடைவேளைக்குப் பின் சில காட்சிகளில் மட்டுமே தலை காட்டுகிறார், களைத்துப் போய்!

மெயின் வில்லனாக வரும் அழகம் பெருமாள் அசல் அரசியல் தாதாவை கண்முன் நிறுத்துகிறார். வேலூர் மாவட்டத்தில் உண்மையிலேயே இவரைப் போல பலரைப் பார்த்த நினைவு!

அமைச்சராக வருபவர் ஒரிஜினல் அரசியல்வாதி ஒருவரை நினைவுபடுத்துகிறார். நல்ல தேர்வு.

டிரைவராக வரும் சந்தானத்துக்கு சில சீரியஸ் காட்சிகளை வைத்திருக்கிறார்கள். இதுபோக தனக்கு கொடுத்த நகைச்சுவை வாய்ப்பில் கொஞ்சம் கிச்சுகிச்சு மூட்டவும் அவர் தவறவில்லை.

சுந்தர் சி பாபுவின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்க முடிகிறது. பின்னணி இசை பரவாயில்லை. கோட்டை, மார்க்கெட், குவாரி என வேலூரை முழுமையாக சுற்றிக் காட்டியிருக்கிறது வெற்றியின் கேமரா. போலீஸ் கதைக்கான வேகத்தை சரியாக மெயின்டெய்ன் பண்ணுகிறது சுரேஷின் எடிட்டிங்.

ஒரு போலீஸ் கதைக்கே உரிய வழக்கமான விஷயங்கள்தான் என்றாலும் ஆர்என்ஆர் மனோகரின் விறுவிறுப்பான இயக்கம் படத்தை பார்க்க வைக்கிறது!

Thursday 13 October 2011

ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கத்தில் சசிகுமார்!


நினைத்தாலே இனிக்கும், யுவன் யுவதி படங்களைத் தந்த ஜிஎன்ஆர் குமாரவேலன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கிறார் இயக்குநர் சசிகுமார்.

சுப்ரமணியபுரம், நாடோடிகள் என சசிகுமாரின் நடிப்பில் அனைவரையும் கவர்ந்தவர் சசிகுமார். இவர் கடைசியாக நடித்த படம் நாடோடிகள். இயக்கிய படம் ஈசன்.

இப்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் போராளி எனும் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பிறகு புதிய படத்தை இயக்க உள்ளார்.

இதற்கிடையே, யுவன் யுவதி படத்துக்குப் பின் ஜி.என்.ஆர். குமாரவேலன் இயக்கும் படம் ஒன்றின் கதையைக் கேட்ட சசிகுமாருக்கு, அந்தக் கதை பிடித்துவிட்டதால் நடித்த ஒப்புக் கொண்டுள்ளாராம்.

தனது இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு முன்பே இதில் அவர் நடிக்கக் கூடும் என்கிறார்கள்.

இந்தப் படங்கள் தவிர, மலையாளத்தில் மாஸ்டர்ஸ் எனும் படத்திலும் நடித்து வருகிறார் சசிகுமார்.

'ஃபர்ஸ்ட் ஹீரோ' விஜய் மீது எப்பவும் தனி விருப்பம் உண்டு: பிரியங்கா சோப்ரா


நடிகர் விஜய் மீது எனக்கு எப்பொழுதுமே தனி விருப்பம் உண்டு. மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது என்று நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

உலக அழகியாக தேர்வான பிரியங்கா சோப்ராவுக்கு நடிகை என்ற அந்தஸ்தை கொடுத்தது தமிழ் சினிமா தான். அவர் முதன்முதலாக இளைய தளபதி விஜய்யுடன் சேர்ந்து தமிழன் படத்தில் நடித்தார். அது தான் அவர் நடித்த முதல் படம். அதன் பிறகு தான் பாலிவுட் கண்கள் பிரியங்கா மீது பட்டது. தற்போது பாலிவுட்டின் முன்னணி நடிகையாக உள்ளார்.

அவருடன் ஜோடி சேர பல ஹீரோக்கள் காத்திருக்கையில் பிரியங்கா விஜயுடன் ஜோடி சேர விரும்புகிறார்.

அண்மையில் சென்னையில் நடந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கட் இறுதிபோட்டியை காண வந்த பிரியங்கா நிருபர்களிடம் கூறியதாவது,

என்னை கோலிவுட் தான் அறிமுகப்படுத்தியது. எனது முதல் படத்தின் ஹீரோ விஜய். அவர் மீது எனக்கு எப்பொழுதுமே தனி விருப்பம் உண்டு. மீண்டும் அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. தமிழ் ஹீரோக்கள் பலரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமாவில் பலமடங்கு மாற்றம் ஏற்பட்டுள்ளது. அண்மையில் வெளியான தமிழ் படங்களைப் பார்த்து அசந்துவிட்டேன்.

எனக்கு தமிழ் படங்களில் நடிக்க மிகவும் ஆசையாக உள்ளது. அதிலும் குறிப்பாக விஜய்க்கு ஜோடியாக நடிக்கத் தான் ஆசை. அது நிறைவேறினால் நான் பெருமகிழ்ச்சி அடைவேன் என்றார்.

தியேட்டர்களுக்கு வெளியே தீபாவளி!


முன்பெல்லாம் ஊர்களில் ஒரு தியேட்டரை சொந்தமாக வைத்திருந்தால் அவர்தான் பெரிய 'தலை'. ஊர் பஞ்சாயத்து தலைவர் பதவியையே அவருக்குதான் தருவார்கள்!

எண்பதுகளில் இப்படி பஞ்சாயத்து தலைவரான பலரை நான் பார்த்திருக்கிறேன்!

அதேபோல, தீபாவளிக்கு நிறைய படங்கள் வெளியாகும். மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை குறைந்தது 6 படங்களாவது வெளிவந்து கொண்டிருந்தன.

ஆனால் இன்றைக்கு அதெல்லாம் சாத்தியமில்லாத சமாச்சாரம். பிரதான காரணம், மக்களுக்கு மாற்றுப் பொழுதுபோக்குகள் நிறைய கிடைப்பதுதான்.

ராசிபுரம், கிருஷ்ணகிரி போன்ற சிறு நகரங்களுக்கு அருகிலும் பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளிட்ட பல சமாச்சாரங்கள் கடைவிரித்துவிட்டன. சுற்றுலாத் தளங்கள் எல்லாவற்றிலும் பண்டிகைக் காலங்களில் கூட்டம் நெருக்கியடிக்கிறது. போதாக்குறைக்கு இரண்டு நாளைக்கு விடிய விடிய டிவிகளில் தீபாவளி நிகழ்ச்சிகள் வேறு!

எனவே விசேஷ நாளை சினிமா தியேட்டரில் கழிக்கும் நிலை அடியோடு மாறிவிட்டது.

இன்னொன்று தியேட்டர்கள் பற்றாக்குறை. தமிழகம் முழுவதும் ஒரு காலத்தில் 2500 அரங்குகள் இருந்தன. டூரிங் கொட்டகைகளையும் சேர்த்து. சினிமா கொட்டகை இல்லாத ஊரில் குடியிருப்பது வேஸ்ட் என்பார்கள் முன்பு தமாஷாக!

ஆனால் இன்று மிஞ்சிப் போனால் 1000 அரங்குகள் தேறுவதே கடினம் என்ற நிலை. சென்னையில் பழைய திரையரங்குகள் மூடப்பட்டாலும், அவற்றுக்கு பதில் நான்கைந்து திரைகள் கொண்ட மல்டிப்ளெக்கள் நிறைய வந்துவிட்டன.

ஆனால் மற்ற நகரங்களில் நிலைமை அப்படியில்லை. அங்கெல்லாம் திரையரங்குகள் கல்யாண மண்டபங்களாகி நீண்ட வருடங்களாகிவிட்டன. கிட்டத்தட்ட டூரிங் கொட்டகைகளே இல்லாத நிலை. பல ஊர்களில் டூரிங் கொட்டகைகள் இருந்த இடங்கள் களத்து மேடாகக் காட்சியளிக்கின்றன!

இருக்கிற திரையரங்குகளும் கூட நல்ல வசதியான, ஆரோக்கியமான சூழலில் இல்லை. நல்ல ஒலியமைப்பு, துல்லியமான காட்சி திரையிடல் போன்ற வசதிகளோடு உள்ள அரங்குகள் 600-700 தான் என்கிறார்கள் சினிமா வர்த்தக ஆய்வாளர்கள். மக்கள் தியேட்டர்களை விட்டு ஓட, தாறுமாறான டிக்கெட் கட்டணங்களையும் ஒரு முக்கிய காரணமாக சொல்கிறார்கள்.

திரையரங்குகள் எண்ணிக்கை மீண்டும் பெருகும் சூழல் உருவாகுமா? மீண்டும் இது ஒரு லாபகரமான வர்த்தகமாக மாறுமா?

"நிச்சயம் தியேட்டர் நடத்துவது லாபகரமான தொழில்தான். ஆனால் அதை நடத்தும் முறைதான் முக்கியம். இப்போது மக்கள் மனநிலை மாறியிருக்கிறது. நிறைய வசதிகள் வேண்டும் என்கிறார்கள். சுத்தமான அரங்கு, துல்லியமான ஒலியமைப்பு, தரமான உணவுப் பொருள்கள், இணக்கமான அணுகுமுறை என ஆரோக்கியமான மாறுதல்கள் இருந்தால் நிச்சயம் மக்கள் ஆதரவு தருவார்கள் என்று நம்புகிறேன்.

அதேபோல, நான் நீண்ட நாள்களாக சொல்லிவரும் விஷயம், 150 பேர் அமரும் வகையில் மினி தியேட்டர்களை அமைக்க வேண்டும் என்பது. பராமரிப்பு செலவு குறைவாக இருக்கும். குறைந்த ஊழியர்கள் போதும். மக்களையும் தக்க வைத்துக் கொள்ளலாம். இத்தகைய திரையரங்குகள் ஊர்தோறும் அமைய அரசு உதவ வேண்டும். அப்போது இந்தத் தொழிலுக்கே புத்துயிர் கிடைக்கும்," என்கிறார் விநியோகஸ்தர் சங்கத் தலைவரான கலைப்புலி சேகரன்.

இதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறார் அபிராமி மெகா மால் உரிமையாளரும், திரையரங்க உரிமையாளர் சங்கத் தலைவருமான அபிராமி ராமநாதன்.

"வெறும் சினிமா ஹாலாக மட்டும் இருந்தால் இனி வேலைக்காகாது. அதனால்தான் அபிராமி காம்ப்ளெக்ஸ் மெகா மாலாக மாறியது. மாற்று பொழுதுபோக்கையும் முடிந்த வரை நாமே தரவேண்டும். தரமான அரங்குகளுக்கு மக்கள் ஆதரவு எப்போதும் இருக்கத்தான் செய்கிறது. இதற்கு அபிராமியே ஒரு சிறந்த உதாரணம்," என்கிறார்.

வரும் நாட்களில் தியேட்டர்களுக்கு உள்ளே தீபாவளி கொண்டாடும் நாள் வருமா?

தைரியம் எனக்கு கொஞ்சம் ஜாஸ்தி! - சினேகா சிறப்புப் பேட்டி


நடிக்க வந்து முழுசாக பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன.... தமிழ் சினிமாவின் புன்னகை இளவரசியாக இன்னமும் வீற்றிருக்கிறார் சினேகா.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தொடர்ந்து பிரபல நடிகை என்ற அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

தட்ஸ்தமிழின் தீபாவளி ஸ்பெஷலுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

இந்த பதினோரு ஆண்டு திரையுலக அனுபவங்கள் குறித்து....

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். திரையுலகில் இன்றைக்கு இத்தனை ஆண்டுகள் தாக்குப் பிடிப்பதே கஷ்டம்தான். எனக்கு அந்த வாய்ப்ப்பு கிடைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளில் நான் எவ்வளவோ படங்கள் நடித்தாலும், என்னைத் திரையில் பார்த்து அல்லது என் நடிப்பைப் பார்த்து யாரும் முகம் சுளித்ததில்லை. இது எனக்கு பெரிய அந்தஸ்தைக் கொடுத்துள்ளது. நிறைய பாடங்களை இந்த பதினோரு ஆண்டுகளில் கற்றுக் கொண்டேன்.

எல்லோருக்கும் தங்கள் ஆதர்ஸ நடிகை என்று யாராவது இருப்பார்கள். இவர்களைப் பார்த்துதான் நான் நடிக்க வந்தேன் என்று சொல்வார்கள். உங்களுக்கு?

எனக்கு அப்படி யாரும் இல்லை. காரணம் நான் யாரைப் பார்த்தும் உந்தப்பட்டு இந்த துறைக்கு வரவில்லை. ஒரு விபத்து போலத்தான் என் திரைப்பிரவேசம் அமைந்தது.

ஆனால் நான் திரையுலகில் மிகவும் ஆச்சர்யத்துடன் பார்ப்பது, இவரைப் போல இருக்க வேண்டும் என நினைப்பது, ராதிகா மேடத்தை பார்த்துதான். எனக்கு தனிப்பட்ட முறையிலும் சரி, திரையிலும் சரி அவரை ரோல்மாடல் என்று சொல்லலாம். அவரது துணிச்சல், பிரச்சினைகளை அவர் எதிர்கொள்ளும் விதம், சவால்களை அவர் சந்திக்கும் பாங்கு... எல்லாமே எனக்குப் பிடிக்கும்.

சினிமாவில் போலீஸ் அதிகாரியாக நடித்தீர்கள். துணிச்சலாக சண்டையெல்லாம் போட்டிருந்தீர்கள். நிஜத்தில் உங்கள் துணிச்சலின் அளவு என்ன?

முன்பெல்லாம் நான் கொஞ்சம் பயந்த சுபாவமாகத்தான் இருந்தேன். ஆனால் இந்த சினிமாவில் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் என்னை நிறைய மாற்றிவிட்டன. இன்றை பிரச்சினைகளைப் பார்த்து பயப்படுவதில்லை. வருவது வரட்டும் என துணிந்து நிற்கிறேன். யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்வதில்லை. என் சுபாவத்தை மாற்றுவதில்லை. இப்போது எனக்கு கொஞ்சம் தைரியம் ஜாஸ்திதான்!

ஒரு இடைவெளி விழுந்த மாதிரி இருக்கே... அடுத்தடுத்த படங்கள் என்ன?

பொன்னர் சங்கரில் ஒரு ரோல் பண்ணியிருந்தேன். இப்போது முரட்டுக்காளை, விடியல்னு ரெண்டு படம் வரவேண்டியிருக்கு.

தெலுங்கில் ராஜன்னா என்ற படமும், மலையாளத்தில் ஒரு படத்திலும் நடித்து வருகிறேன். என்னைப் பொருத்தவரை எந்த மொழி என்று பார்க்காமல் தொடர்ந்து நடித்துக் கொண்டிருப்பதால் இடைவெளி ஏதும் தெரிவதில்லை.

நமக்கான பாத்திரம், திறமைக்கேற்ற வேடம் கிடைக்கவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறீர்களா?

இதில் வருத்தப்பட என்ன உள்ளது. சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம். இங்கு ஹீரோயின்கள் வேலை மிகவும் குறைவு. ஆரம்பத்தில் நான்கு சீன்கள் இருக்கும். இடையில் நான்கு பாடலுக்கு கூப்பிடுவார்கள். க்ளைமாக்ஸில் இருந்தால் இருப்போம். இல்லாவிட்டால் எல்லாம் முடிந்து கடைசி சீனில் மகிழ்ச்சியாக ஒரு போஸ்... இவ்வளவுதான் ஹீரோயின்கள் வேலை. எப்போதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள் கிடைப்பதுண்டு. எனவே கிடைக்கிற வாய்ப்புகளில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வழக்கமான கேள்விதான்... ஆனால் கேட்க வேண்டியது அவசியமாக உள்ளது. திருமண திட்டம் என்ன?

சினிமா போதும், போரடித்துவிட்டது என எப்போது எனக்குள் குரல் கேட்கிறதோ அப்போது, வேறு தளத்துக்கு மாறிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் இப்போதைக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டியுள்ளது.

வதந்திகள், கிசுகிசுக்களை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

அது வாழ்க்கையின் ஒரு அங்கமாகிவிட்டது. அதுவும் என்னைப் போன்றவர்கள் இருப்பது ஷோ பிஸினஸ். இங்கு கிசுகிசுக்கள் வராமலிருந்தால்தான் ஆச்சர்யம். உண்மை தெரியாமல் எழுதுகிறார்களே என்று முதலில் வருத்தமாக இருந்தாலும், இப்போதெல்லாம் அதை சகஜமாக எடுத்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டேன்.

இந்த தீபாவளிக்கு உங்கள் படம் எதுவும் வரவில்லை என்ற வருத்தம் உள்ளதா?

நிச்சயமாக. எல்லா நடிகைகளுக்குமே தங்கள் படம் பண்டிகையின்போது வரவேண்டும் என்ற ஆசை இருக்கும். சரி, அதனால் என்ன... எப்படியும் சின்னத்திரையில் என்னைப் பார்ப்பார்கள் ரசிகர்கள். அடுத்த தீபாவளிக்கு என் படம் ரிலீசாகும் என நம்புகிறேன்.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா