Saturday 20 August 2011

சிரியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா



சிரிய அதிபர் பஷீர் அல் ஆசாத் பதவி விலக வேண்டுமென கோரி கடந்த 6 மாதங்களுக்கு மேலாக பொதுமக்கள்



மேற்கொண்டு வரும் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக அமெரிக்கா சிரியா மீது பொருளாதார தடை ஏற்படுத்தியுள்ளது.



இதன் மூலம் அமெரிக்க அரசின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதிக்குள் உள்ள சிரிய சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன. ஆசாத் தலைமையிலான அரசுடன் அமெரிக்க நிறுவனங்களோ அல்லது தனிநபர்களோ வர்த்தக தொடர்புகளை பேணக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளதுடன் சிரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பெட்ரோல் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளது.



மேலும், சிரியாவுக்கு எதிரான அழுத்தத்தை இந்தியா, கத்தார், பக்ரைன், எகிப்து, ரஷ்யா,பிரேசில்,பிரான்ஸ்,ஜேர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகளும் கொடுக்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவு செயலர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.



கடந்த மார்ச் மாதம் முதல் இதுவரை சுமார் 2 ஆயிரம் பொதுமக்களை சிரிய இராணுவம் சுட்டுக்கொன்றுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையகம் தெரிவித்துள்ளது. இதனை சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு கொண்டு செல்ல வேண்டும் என அவர் கூறினார். இதேவேளை சிரிய நிலைமைகளை கண்காணிப்பதற்காக ஐ.நாவின் சிறப்பு படையினர் இன்று சிரியாவுக்கு செல்கின்றனர்.



முன்னதாக கடந்த 40 ஆண்டுகளாக பதவியிலிருக்கும் அரச குடும்பத்தினர் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டுமெனவும், சிரிய அதிபர் பஷீர் அல் ஆசாத் உடனடியாக பதவி விலக வேண்டுமென கோரி அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமாவும் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.



இதேவேளை அதிபர் பஷீர் அல் ஆசாத்துக்கு எதிராக நேற்று இடம்பெற்ற போராட்டங்களின் போது இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் பலியாகியிருக்கிறார்கள்.



Friday 19 August 2011

கௌதம் மேனன் படத்தில் ஜீவா!

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

கௌதம் மேனன் படத்தில் ஜீவா!

8/19/2011 9:49:20 AM

விஜய்யை வைத்து யோஹன். அத்தியாயம் ஒன்று படத்தை அடுத்த வருடம் தொடங்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அதற்கு முன்…? விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ‌ரீமேக்கை முடித்து வெளியிட வேண்டும். அப்படியும் நாட்கள் மீந்து போகுமே? அந்த இடைவெளியில் ‌‌ஜீவாவை வைத்து படமெடுக்க கௌதம் திட்டமிட்டிருப்பதாக‌த் தெ‌ரிகிறது. வந்தான் வென்றான் படத்தை முடித்த ‌‌ஜீவா தற்போது ஷங்க‌ரின் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சூப்பர் ஹீரோவாக நடிக்கும் மிஷ்கினின் முகமூடி இருக்கிறது. ஜனநாதனின் படமும் உள்ளது. இதற்கு நடுவில் கௌதம் படத்திலும் நடிக்கயிருக்கிறார்.

காணதவறாதீர்கள் சுவிஸ் நாட்டிலும் "தீராநதி"



பாரிஸில் 9/07/2011 - 10/07/2011 & 16/07/2011 ( House full 6 show ) ஆகிய நாட்களில் திரையிடபட்டு பலரது பாராட்டும் வாழ்த்துக்களையும் பெற்று வெற்றிநடை போடுகின்றது எம்மவர் திரைப்படம்.



இதை அடுத்து நோர்வே நாட்டிலும் வெற்றிகரமாக திரையிடப்பட்டு இப்பொழுது சுவிஸ் நாட்டிலும் திரையிடப்படுகின்றது.



எதிர்வரும் 21st August 2011 10h30 Kino ABC BERN & TISINO CINESTAR 14h00 & 28/08/2011 10h30 Zurich Uto kino ZURICH & 29/08/2011 19h00 SCHAFTHAUSEN Kinepolis contact Sasi ..076 348 97 35 Mahi 079 443 44 94



அதை அடுத்து இலண்டன் நாட்டிலும் எதிர்வரும் .27.08.2011 @ 17h00 Harrow Safari cinema 28/08/.2011..@ 19h00 Boleyn Cinema Eastham Contact Gaji 074 011 90 774

ஆகிய நாட்களில் திரையிடப்படுகின்றது.



அதை அடுத்து கனடநட்டிலும்..Woodside Cinema ( McCowan & Finch ) Scarborough contact Theepan (647) 628 3151 திரையிடப்படுகின்றது.



ஈழத்தமிழர் திரைப்படத்துறையில் இதுவே அனைத்து நாட்டிலும் திரையிடப்படும் முதல் படமாகும் முற்றிலும் ஈழத்தமிழர்கள் பணிபுரிந்த இவ் திரைப்படம் எம்மவர்கழலும் முடியும் என்பதை நிருபித்து இருக்கின்றார்கள் எம்மவர்கள்...

தூக்கு தண்டனைக்கு எதிராக மோட்டார் சைக்கிள் பேரணி.சத்யராஜ்.மணிவண்ணன் தொடங்கி வைத்தனர்



ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் அனுப்பப்பட்டன.



கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருக்கும் இவர்களின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டதையடுத்து 3 பேரும் தூக்கு தண்டனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்நிலையில் மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பில் 1000 பேர் பங்கேற்ற மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெற்றது. சென்னை கடற்கரை கண்ணகி சிலை அருகில் இருந்து மோட்டார் சைக்கிள் பேரணி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இங்கு போலீசார் அனுமதி மறுத்து விட்டனர்.



இதையடுத்து கிண்டி கத்திப்பாரா மேம்பாலம் அருகே ஆலந்தூரில் இருந்து இன்று காலையில் மோட்டார் சைக்கிள் பேரணி புறப்பட்டது. நடிகர்கள் சத்யராஜ், மணிவண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஆலந்தூரில் இருந்து 300 பேர் மோட்டர் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர்.



கவிஞர்கள் தமிழச்சி தங்கபாண்டியன், சல்மா, எழுத்தாளர்கள் விஜயலட்சுமி, கவின் மலர், பிரியா தம்பி, மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ், முருகையன் மற்றும் நாம் தமிழர் கட்சியினரும் பேரணியில் பங்கேற்றனர்.



மோட்டார் சைக்கிள் பேரணியில் பங்கேற்ற அனைவரும் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் படங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள் அணிந்திருந்தனர். தாம்பரம், செங்கல்பட்டு, வாலாஜாபாத், காஞ்சிபுரம் வழியாக செல்லும் மோட்டார் சைக்கிள் பேரணி வேலூர் சிறை முன்பு நிறைவடைகிறது.



செல்லும் வழிகளில் எல்லாம் அந்தந்த பகுதி மக்கள் மோட்டார் சைக்கிள் பேரணியில் தங்களை இணைத்துக் கொண்டனர். மொத்தம் 1000 பேர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.



பேரணியில் சென்ற 30 பேர், வேலூர் சிறைக்கு சென்று பேரறிவாளன், சாந் தன், முருகன் ஆகியோரை சந்தித்து பேசுகின்றனர்.





தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழரின் பூர்வீக நிலங்கள் அபகரிக்கபடுகின்றன! பா.உ.சிறீதரன்



தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் தமிழ் மக்களது பூர்வீக நிலங்களை அபகரிக்கும் செயற்பாடாகவே அரசின் இந்த அறிவிப்பை நோக்க முடிகிறது எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் வடக்கின் சில பிரதேசங்களில் தற்போதைக்கு மீள்குடியேற்றம் செய்வது சாத்தியம் இல்லை என நேற்று அரச முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்த கருத்துத் தொடர்பாகத் தொடர்பு கொண்டு கேட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.



இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:



வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் பெருமளவான பிரதேசங்கள் உயர்பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. நந்திக்கடல் கடற்கரைப் பகுதி முற்றுமுழுவதுமாக இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்டுள்ளது.



முள்ளிவாய்க்கால் வடக்கு, மேற்கு, தெற்கு அம்பலவன் பொக்கனை ஆகிய பிரதேசத்து மக்களை கோம்பாவில் பகுதியில் இப்போது அரசு மீள்குடியமர்த்தியுள்ளது.



இது அகதி முகாம் போலவே உள்ளது. இந்தப் பகுதியிலேயே இவர்களுக்கு நிரந்தர காணிகள் வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.



முல்லைத்தீவின் கடற்கரைப் பகுதிகளை ஆக்கிரமிக்கும் இராணுவத்தினர் சிங்கள மக்களை இரகசியமாக குடியமர்த்த திட்டமிட்டு வருகின்றனர் மீன் வளத்தைச் சுரண்டுகின்றனர்.



தவிர போர்க்குற்றத்தை மறைக்கும் வகையில் இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் அதனை அண்டிய பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களது உடலங்கள் எச்சங்கள் அழியும் வரை அவற்றை உயர்பாதுகாப்பு பகுதியாகவே வைத்திருக்க அரசு முயல்கிறது.



தற்போது வடக்கில் புதிய காணிச் சட்டங்களை அமுல்படுத்தி தமிழ் மக்களது காணிகளை அபகரிக்கும் முயற்சியிலும் அரசு ஈடுபட்டுள்ளது.



வடக்கில் உயர்பாதுகாப்பு வலயம் என்று எவையும் இல்லை என இராணுவத்தினரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் ஏன் யாழ். அரச அதிபரும் கூடக் கூறுகின்றனர்.



ஆனால் மயிலிட்டி, கட்டுவன், தெல்லிப்பளையில் பல இடங்களில் மக்களை மீளக் குடியமர்த்த அனுமதி வழங்கப்படவில்லை.



இவைதவிர வடக்கில் மண்டைதீவில் 42 செம்மண் தோட்டத்தில் கடற்படைத்தளம் அமைக்கப்பட்டுள்ளது.பூநகரியில் இரணைதீவு 12 சதுர கிலோமீற்றர் பரப்பைக் கொண்டது அங்கு 1990 க்கு முன்னர் 900 குடும்பங்கள் இருந்தன. இப்போது இராணுவத்தினரே அங்கு நிலை கொண்டுள்ளனர்.



கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் கிராமம் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ளது. இங்கு வசித்த 400 குடும்பங்கள் வேறு இடங்களிலேயே தங்கியுள்ளன.



120 ஏக்கருக்கும் அதிகமான பரப்புடைய வெள்ளாங்குளம் பண்ணை கார்கில்ஸ் நிறுவனத்துக்கு அரசு இரகசியமாக விற்றுள்ளது.



இவ்வாறு தமிழ் மக்களது பூர்வீக நிலங்களில் பல்வேறு கோணங்களில் அரசு ஆக்கிரமித்து வருகிறது.



இவ்வாறான அரசின் இனப்பாரபட்சமான நடவடிக்கைகளை பார்த்துக்கொண்டு இருக்கமுடியாது. இதனை வெளி உலகுக்கு அம்பலப்படுத்துவதுடன் பொதுமக்களை இணைத்து ஜனநாயக ரீதியில் வெகுஜனப் போராட்டங்களை நடத்தவுள்ளோம் என்றார் சிறீதரன் எம்.பி.

2 முறை தேசிய விருதுபெற்ற இசையமைப்பாளர் ஜான்சன் மரணம்!


சென்னை: பிரபல மலையாள திரைப்பட இசையமைப்பாளர் ஜான்சன் மாரடைப்பால் நேற்று சென்னையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 58.

கேரள இசையமைப்பாளர் ஜான்சன் நூற்றுக்கணக்கான மலையாள சினிமா பாடல்களுக்கு இசையமைத்து உள்ளார். 2 முறை தேசிய விருதுகளை பெற்ற இவர் கேரள மாநில அரசின் விருதை 5 முறை பெற்று உள்ளார்.

சென்னையில் தங்கியிருந்த அவருக்கு நேற்று மாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

இசையமைப்பாளர் ஜான்சன் மறைவுக்கு கேரள முதல்வர் உம்மன்சாண்டி அனுதாப செய்தி வெளியிட்டுள்ளார்.

சக இசையமைப்பாளர்கள் அவருக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவித்து வருகின்றனர்.

அவரது இறுதிச் சடங்குகள் சொந்த ஊரான திருச்சூரில் இன்று நடக்கிறது.

சிறுநீரகக் கோளாறு... இயக்குநர் டி.கே.போஸ் மரணம்!


சென்னை: சிறுநீரகக் கோளாறால் அவதிப்பட்ட பிரபல இயக்குநர் டி கே போஸ் நேற்று மரணமடைந்தார்.

திருக்கல்யாணம், சின்னஞ்சிறு கிளியே, என்னை விட்டுப்போகாதே, ராசாவே உன்னை நம்பி, கவிதை பாடும் அலைகள், சமீபத்தில் வெளியான கொடைக்கானல் உள்பட பல படங்களை இயக்கியவர் டி.கே.போஸ். இவர், கடந்த சில மாதங்களாக சிறுநீரக கோளாறு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு, அவருக்கு திடீர் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக சென்னை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல், நேற்று பகல் 11 மணிக்கு அவர் மரணம் அடைந்தார்.

அவருடைய உடல் சென்னை விருகம்பாக்கம் ரத்னா நகரில் உள்ள வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் டைரக்டர் பாரதிராஜா, இணைச்செயலாளர் வேல்முருகன் ஆகியோர் டி.கே.போஸ் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்கள்.

மரணம் அடைந்த டி.கே.போசுக்கு வயது 66. அவருடைய சொந்த ஊர், சிவகங்கை மாவட்டம் சிராவயல். அவருக்கு பத்மா என்ற மனைவியும், தேன்மொழி என்ற வளர்ப்பு மகளும் இருக்கிறார்கள்.

டி.கே.போசின் உடல் தகனம் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள மயானத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு!


நடிகர் சிம்பு நேரடியாக மோதாமல் பின்னால் மறைந்திருந்து குத்துகிறார் என்று நடிகர் ஜீவா குற்றம்சாட்டினார்.

தமிழ் சினிமாவில் இப்போது முட்டிக் கொண்டு நிற்கும் இரு ஹீரோக்கள் சிம்பு- ஜீவா.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்து வெளிவந்த படம், ‘கோ.’ இந்த படத்தில் முதலில் சிலம்பரசன்தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, ஜீவாவை ஒப்பந்தம் செய்தார்கள். அவருக்கு ஜோடியாக பழைய கதாநாயகி ராதாவின் மகள் கார்த்திகா நடித்தார். படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படம் தொடர்பாக சிலம்பரசனுக்கும், ஜீவாவுக்கும் இடையே புகைச்சல் இருந்து வருகிறது.

சிம்பு என்றுமே என் நண்பரில்லை!

இந்த நிலையில், நடிகர் ஜீவா நேற்று நாளிதழ் நிருபர்களை மட்டும் சந்தித்தார். அப்போது, சிலம்பரசனுடன் நடக்கும் மோதல் பற்றி ஜீவாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, “சிலம்பரசன் என்றைக்குமே எனக்கு நண்பராக இருந்ததில்லை. யாராக இருந்தாலும் நேரடியாக சவால் விட்டு மோதுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். அதை வரவேற்கலாம். ஆனால், பின்னாலிருந்து குத்தும் வேலையைச் செய்கிறார். அது ஆரோக்கியமான போட்டி அல்ல,” என்றார்.

இப்போது வந்தான் வென்றான், முகமூடி படங்களில் நடிக்கும் ஜீவா, எஸ்பி ஜனநாதன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

Thursday 18 August 2011

ஜெயலலிதாவிற்கு கோத்தபய அறிவுரை



ஈழத் தமிழர்களின் நலனில் அக்கறையிருந்தால், அவர்களின் மறுவாழ்வு பற்றி பேசுங்கள், அதை விட்டுவிட்டு, போர்க் குற்றம், பன்னாட்டு விசாரணை என்றெல்லாம் பேசுவது பயன்றறது என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபய அறிவுரை கூறியுள்ளார்.



ஹெட்லைன்ஸ் டுடே ஆங்கில தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கோத்தபய இவ்வாறு கூறியுள்ளார்.



அதில் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கோத்தபய, அது அரசியல் ஆதரவு பெறுவதற்கான முயற்சி என்று கூறியுள்ளார்.



தீர்மானம் நிறைவேற்றியதெல்லாம் அரசியல் ஆதரவைப் பெருக்கிக்கொள்ளும் முயற்சி. உண்மைகளை அறியாமல் நிறைவேற்றப்பட்ட அர்த்தமற்ற தீர்மானங்கள். ஜெயலலிதாவிற்கு தமிழர்கள் மீது அக்கறை இருக்குமானால், இலங்கையின் கடற்பரப்பிற்குள் வந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தட்டும். அதை அவர் முதலில் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.



இலங்கை நிலவரம் தொடர்பான விஷயங்களை நாங்கள் ஜெயலலிதாவிற்கு அளிக்க வேண்டும். தமிழர்கள் அவர்கள் வாழ்ந்த இடங்களில் மீள் குடியமர்த்தப்பட வேண்டும், மறுவாழ்வு தரப்பட வேண்டும், அதுதான் முக்கியமானது.



அதை விட்டுவிட்டு போர்க் குற்றம் என்றெல்லாம் பேசுவது எந்தப் பயனையும் தராது. அந்த மக்கள் குடியேற உதவ வேண்டும். அதை விட்டுவிட்டு, போர்க் குற்றம் பற்றிப் பேசுவது, பன்னாட்டு விசாரணை கோருவது என்பதெல்லாம் வீணானது என்று மற்றொரு கேள்விக்கு கோத்தபய பதிலளித்துள்ளார்.



சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக் களங்கள் என்ற ஆவணப்படம் போலியானது, அந்த தொலைக்காட்சியின் நடவடிக்கை நேர்மையற்றது என்று கூறிய கோத்தபய, இலங்கை ஒரு சர்வாதிகார நாடல்ல, ஜனநாயக நாடுதான் என்றும், அங்கு சட்டத்தி்ன் ஆட்சிதான் நடக்கிறது என்றும் கூறிவிட்டு, பன்னாட்டு விசாரணைக்கு எந்த விதத்திலும் ஒப்புக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார்.



நாங்கள் ஒரு இறையாண்மை உள்ள நாடு, நாங்கள் கூறுவதை பன்னாட்டுச் சமூகம் நம்ப வேண்டும். எந்த ஒரு இறையாண்மை உள்ள நாடும் பன்னாட்டு விசாரணைக் குழுவை அனுமதிக்காது என கோத்தபய கூறியுள்ளார்.



மர்மமனிதர்கள் விவகாரத்தை காரணம் காட்டி கிழக்கில் படைகளைக் குவிக்கிறது சிறிலங்கா அரசு



கிழக்கு மாகாணத்தில் மர்மமனிதர் விவகாரத்தினால் எழுந்துள்ள பதற்ற நிலையைக் காரணம் காட்டி சிறிலங்கா அரசு அங்கு தனது படைகளைக் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அண்மையில் பொதுமக்களுக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற கிண்ணியா பிரதேசத்துக்கு மேலதிகமாக இரண்டு பற்றாலியன் சிறிலங்கா இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



இந்த இரண்டு பற்றாலியன்களையும் சேர்ந்த சுமார் 1500 சிறிலங்கா படையினர் கிண்ணியா பிரதேசத்தில் புதிய படை முகாம்களை நிறுவி நிலை கொண்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை நாட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.









இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கிழக்குப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, புதிதாக அமைக்கப்பட்டுள்ள படைமுகாம்கள் கிண்ணியாவின் முழுப்பகுதியினதும் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ளவுள்ளதாகக் கூறியுள்ளார்.



அதேவேளை கிண்ணியா கடற்படை முகாமை அகற்ற முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இந்த முகாமின் பாதுகாப்புக்காக மேலதிக கடற்படையினரை அனுப்பி வைத்துள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.



இதுபோன்றே அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.









குறிப்பாக தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலேயே இவ்வாறு படைக்குவிப்பு இடம்பெற்று வருகிறது.



அத்துடன் சிறிலங்கா படையினர் போர்க்காலத்தில் சட்டத்தை தம் கையில் எடுத்துக் கொண்டு செயற்பட்டது போன்று பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கிழக்கில் பல்வேறு இடங்களிலும் மர்ம மனிதர்களைத் துரத்திச் சென்றவர்கள் சிறிலங்காப் படையினரின தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.



வீடுகளுக்குள் புகுந்தும் வீதிகளிலும் பொதுமக்கள் சிறிலங்காப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் கிழக்கில் அதிகரித்துள்ளன.

இதன்காரணமாக பொதுமக்கள் மத்தியில் பீதியும் பதற்றமும் அதிகரித்து வருகிறது.



அதேவேளை கலகத்தை அடக்குகின்ற போர்வையில் சிறிலங்கா படையினர் மீளவும் டாங்கிகள், கவசவாகனங்கள் போன்றவற்றை பொதுமக்கள் மீதான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.









கிழக்குப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தாம் கவசவாகனங்களையும், டாங்கிகளையும் பூட்டி வைத்திருப்பதாக மட்டக்களப்பில் கூறியிருந்தார்.



ஆனால், பொத்துவில் வன்முறையை அடுத்து இரண்டு டாங்கிகளுடன் அங்கு சென்றதாக அவரே குறிப்பிட்டிருந்தார்.



அதேவேளை மட்டக்களப்பிலும் சிறிலங்காப் படையினர் கவசவாகனங்களில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் அதில் சென்று பொதுமக்களைத் தாக்கியும் வருகின்றனர்.



நேற்று கவசவாகனத்தில சென்ற சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாசிலாமணியும் அவரது இணைப்புச் செயலாளரும் காயமடைந்துள்ளனர்.



மர்மமனிதர்கள் விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்கா படைத்தரப்பு கிழக்கில் படைக்குவிப்பை மேற்கொண்டு வருவதுடன், அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போர்க்கால நடவடிக்கைளிலும் ஈடுபட்டு வருகிறது.



சிறிலங்காப் படையினரின் படைக்குவிப்புக்கு மத்தியில் மர்மமனிதர்கள் பற்றிய பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.http://www.puthinappalakai.com/view.php?20110818104496





அடுத்தவர் பணத்தில் உதவி வழங்குவதற்காக வெட்கப்படுகிறேன் - சேரன்


அடுத்தவர் பணத்தில் உதவி வழங்கும் அற்பத்தனத்தை சில நடிகர்கள் செய்கிறார்கள் என்று நடிகர் சிம்புவை காட்டமாக விமர்சித்துள்ளார் இயக்குநர் சேரன்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் - நடிகர் சேரன் கலந்து கொண்டார். ஏழைகளுக்கு ரூ 10 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருள்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கினார்.

எம்எம்டிஏ காலனியில் உள்ள கார்ப்பொரேஷன் பள்ளிக்கு ரூ 1.48 லட்சம் மதிப்பில் கழிப்பறைகள் புதுப்பித்துத் தரப்பட்டன. இவற்றை பள்ளியிடம் அவர் ஒப்படைத்தார். இந்தப் பள்ளிக்கு ரூ 13000 செலவில் கணிப்பொறி அச்சு எந்திரம் வழங்கப்பட்டது.

10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் உதவிகள் வழங்கினார் சேரன்.

பின்னர் அவர் பேசுகையில், "இந்த விழாவில் கலந்துகொள்வதில் எனக்கு சந்தோஷம், இளைஞர்கள் இப்படி பட்ட செயல்களை செய்வதில் மகிழ்ச்சியாக உள்ளது. இது போன்ற விழாக்களில் கலந்துகொள்ளும் போது எனக்கு மனதில் ஒரு கேள்வி எழும். நடிகனாக, இயக்குனராக நான் அறியப்படாலும்... இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பதில் எனக்கு கொஞ்சம் சங்கடமாக தான் இருக்கிறது.

அதற்காக நான் வெட்கப்படுகிறேன்! இந்த உதவிகளில் எந்த ஈடுபாடும் எனக்கு இல்லை. அதில் 10பைசா கூட நான் உதவியாக கொடுக்கவில்லை. அப்படி எதுவுமே செய்யாமல் இங்கே நின்று போட்டோவுக்கு ஃபோஸ் கொடுப்பது கூச்சமாக தான் இருக்கிறது. யார் இதற்காக உண்மையாக உழைத்தார்களோ, உதவி செய்தார்களோ அவர்களுக்குத்தான் அந்த புகழ் சென்றடைய வேண்டும். உலகில் தலை சிறந்த விஷயம் தர்மம் தான்.

மக்கள் நற்பணி மன்ற இளைஞர்கள் இது போன்ற உதவிகளை தொடர்ந்து செய்ய வேண்டும். அடுத்த வருட நிகழ்ச்சிக்கு நான் வருகிறேனோ இல்லையோ என் பங்கும் நிச்சயம் இதில் இருக்கும் என்றார்...

இன்னும் விடியாத நள்ளிரவுச்சுதந்திரம்: ச.ச.முத்து

நாம் தவிர்க்கவோ விலத்தவோ நினைத்தாலும் நினைத்தாலும் தவிர்க்கமுடியாதபடி எமக்கு இடப்பட்ட ஒரு புவியியல்சாபம் போல அது எமக்கு அருகில் அசையாத ஒரு பெரு நிலமாக இருக்கின்றது.அதுதான் இந்தியா என்ற பெயரால் அழைக்கப்படும் நிலப்பரப்பு.இந்தவாரம் அதன் அறுபத்திநான்காவது சுதந்திரதினம் ஓகஸ்ட்15ம் நாள் வந்துள்ளது.



பிரித்தானிய காலனிஆட்சியாளர்களின் வருகை இந்தியாவுக்கு செய்த மிகப்பெரிய நன்மை என்னவென்றால் நானூறுக்கும் மேற்பட்ட சமஸ்தானங்களாகவும்இசிறியதேசங்களாகவும் சிதறிக்கிடந்த ஒரு நிலப்பரப்பை இந்தியா என்ற பெயரில் தமது நிர்வாகதேவைக்காக ஒன்றிணைத்தது ஆகும்.இந்தியா என்பது அதற்கு முன்னர் ஒருபோதுமே ஒரே தேசமாக இருந்தது கிடையாது.



இந்தியா எங்கும் மண்ணுக்கு வெளியிலும் மண்ணுக்கு கீழேயும் விளைந்துகிடந்த பொருட்கள் காலகாலமாக அந்த நிலப்பரப்பை நோக்க சக்கரவர்த்திகளையும்இ மன்னர்களையும் கடற்பயணக்காரர்களையும் ஈர்த்துக் கொண்டே இருந்தது. வாசனைத்திரவியங்களும் இவைரங்களும் இபொன்னும் அயலில் இருந்த மொகலாய மன்னர்களை மட்டுமல்லாமல் கொஞ்சம்தூரத்தில் இருந்து பாரசீக சக்கரவர்த்திகளையும்இமிகஎட்டத்திலிருந்து மகாஅலெக்சாண்டர்களையும்கூட அந்த பாரதத்தை நோக்கி படையுடன் வரவைத்திருந்தது.



நாடுகளைதேடும் கடற்பயணங்கள் எல்லாம் ஒருவகையில் காலனிகளை உருவாக்கும் முயற்சிகளாகவே ஐரோப்பியரால் நடாத்தப்பட்டன.அந்தவகையில் 1498 போத்துக்கேசிய கடற்பயணக்காரரான வாஸ் கொட காமா வின் கப்பல் இந்தியாவின் கோழிகோடு; துறைமுகத்துள் வந்தபோதே இந்தியாவுக்கான ஐரோப்பிய காலனிஆட்சி ஆரம்பித்தது எனலாம்.



அதன்பின் ஒல்லாந்திய பிரென்சிய பிரித்தானிய என்று நீண்ட காலனிஆட்சிகள் நான்கு நூற்றாண்டுகளாக நீடித்து இறுதியில் உலகம்முழுதும் காலனிஆட்சிகள் பொல பொலவென உதிர்ந்து கொண்டிருந்த காரணத்தாலும் இரண்டாம் உலக யுத்தத்தின் சுமையும் பாதிப்புகளும் ஐரோப்பியகாலனி ஆட்சியாளர்களை மிகவும் பாதித்தபடியாலும் போனால்போகிறது என்று பல ஆசியநாடுகளை விட்டு அவர்கள் வெளியேறினார்கள்.



அப்படி ஒரு பொழுதுதான் இந்தியாவின் சுதந்திரதினமாக 1947ஓகஸ்ட் 15ல் வழங்கப்பட்டது. ஆனால் மிகவும் தந்திரமாகவே இந்த இந்தியசுதந்திரம் என்பது சாத்வீகபோராட்டம் ஓன்றினாலே கிடைத்தது என்றும் தனிமனித உண்ணாவிரதமும் இகடற்கரையில் உப்பு அள்ளியதாலும்தான் சூரியனே அஸ்தமிக்காத பிரித்தானியசாம்ராஜ்யம் வெளியேறியதாக ஒரு கருத்துருவாக்கம் காங்கிரஸ்பெருந்தலைகளால் காலகாலமாக செய்யப்பட்டுவருகின்றது.



காந்திகள் இந்தியாவை தொடர்ந்து ஆளுவதற்கு மோகன்தாஸ் கரம்சந்த்காந்தியின் மீதான இந்த பிம்பங்கள் மிகஅவசியமாக அவர்களுக்கு இருக்கின்றது.ஆனால் வரலாற்றின் மிகவும் மறைக்கப்பட்ட பக்கங்களாக இந்தியவிடுதலைக்கான எண்ணற்றவர்களின் வீரமிகு போராட்டமும் அவர்களின் உயிர்த்தியாகங்களும் இருக்கின்றன.



இந்தியாவின் விடுதலைப்போராட்டத்தினுள் எந்தவிதமான தீவிரமும் கவனிப்பும் காட்டாத காந்தி தென்னாபிரிக்காவில் புகையிரவண்டியில் இருந்து நிறவெறியனால் வெளியே தள்ளி விழுத்தப்பட்;ட பின்னரே இந்தியாவின் விடுதலைஅரங்கினுள் 1915ல் வருகிறார்.ஆனால் அதற்கு பலபத்து வருடங்களுக்கு முன்னரே ஐம்பத்திஏழு வருடங்களுக்கு முன்னரே பிரித்தானியருக்கு எதிராக உருவான சிப்பாய்க்கலவரத்தின் வீரமிகுபுதல்வர்களை பற்றிய விபரங்கள் ஏறத்தாள முழுமையாக மறைக்கப்பட்டேஇருக்கின்றன.



அதில் ஒரு உருக்கமான கட்டம் என்னவென்றால் 1857ம்ஆண்டு பாரக்புரிஎன்ற இடத்தில் பிரித்தானிய ராணுவ அதிகாரியை தாக்கினான் என்பதற்காக மங்கள்பாண்டே என்ற இந்தியவீரனை கைது செய்யும்படி பிரித்தானிய படையில் இருந்த ஒரு இந்திய ஜமேதாருக்கு பிரித்தானிய தளபதி ஜெணரல் கார்சே உத்தரவிட்டான்.தனது தேசத்தவன் ஒருவனை கைதுசெய்ய மறுத்த ஜமேதாரும்இமங்கள்பாண்டேயும் 1857ஏப்ரல் 7ம்திகதி ஒன்றாக தூக்கிலிடப்பட்டார்கள்.



இதன் தொடர்ச்சியாக எழுந்த கலவரத்தை அடக்குவதற்கு பிரத்தியேக படைகளை சீனாவை நோக்கிசென்று கொண்டிருந்த தமது ஐரோப்பியபடைப்பிரிவில் இருந்தும் பெற்றுக்கொண்டு போராவேண்டிய அளவுக்கு இந்தியர்களின் எழுச்சி எழுந்திருந்தது.இறுதியில் 1858 யூலை 20ம்திகதி குவாலியரில் நடந்த மோதலில் ராணி லட்சுமிபாய் கொல்லப்பட்டு குவாலியர்கோட்டை பிரித்தானியரால் மீட்கப்பட்டதுடன் தற்காலிகமாக ஓய்ந்தது. வெறும் வர்த்தக கம்பனியான கிழக்கிந்திய கம்பெனியை வைத்து இனியும் இந்தியாவை ஆளமுடியாது என்று பிரித்தானியர் முடிவெடுத்த தருணம் இதுதான்.



இந்தியவிடுதலைக்கான முதற்புரட்சி முதல்எதிர்வினையின் மூலவர்களை பற்றிய பக்கங்கள் ஏனோதானோ என்று விரிவாக இல்லாமலும்இமறைத்தும் வைத்துக்கொண்டு இந்தியாவின் சுதந்திரதினம் தனது அறுபத்திநான்கு வருடத்தை கடந்து வந்திருக்கிறது.



இதோ இந்தியாவின் விடுதலையை மானுடவிடுதலையை மானுடவிடுதலையாகவும் சமதர்மவிடுதலையாகவும் கனவுகண்டு அதற்காகவே போராடி தூக்குக்கயிற்றை முத்தமிட்ட பகத்சிங்கின் வரலாற்றை பாருங்களேன்.எத்தனை உன்னதமானது அவனது வாழ்வு. இருபத்துமூன்று வயதுக்குள் முடிந்துபொன அவனின் வாழ்வுஎங்கும் காணப்படும் இலட்சிய உறுதியும் இசுதந்திரத்தின் மீதான வாஞ்சையும்தான் இன்றைய இந்தியாவின் விடுதலை.



இன்றைக்கும் அவனின் நினைவு தினத்தன்றைக்கு (மார்ச்23) அரசியல்வாதிகள் வந்து மலர்மாலை வைப்பதுடன் அவனின் நினைவுகள் மறைக்கப்பட்டு மறக்கப்பட்டுள்ளது. இன்றைக்கும் சலசலத்து ஓடிக்கொண்டிருக்கும் சாலெட்ஜ் நதியின் கரையில் இருக்கும் அவனின் நினைவிடம் விடுதலைக்கு போராடும்அனைத்து மக்களுக்கும் ஆயிரம் செய்திகளை சொல்லியபடிக்கு அமைதியாகநின்றுகொண்டிருக்கிறது.



இந்தியா விடுதலை அடையவேண்டும் என்பதற்கும் மேலாக அது அனைவரையும் சமனாக நடாத்தும் ஒரு சமதர்மதேசமாக மலரவேண்டும் என்பதற்பகாக இந்துஸ்தான் சோசலிச குடியரசு ஒன்றை அமைக்கும் அமைப்பு ஒன்றை கட்டியெழுப்பி புரட்சியை விதைதவன் அவன்.லாஜாலஜபதி ராய் என்ற மிதவாத தலைவருடன் ஆயிரம் முரண்பாடுகளும் கருத்துவேறுபாடுகளும் பகத்சிங்குக்கு இருந்தபோதிலும் லாலாலஜபதிராய் பிரித்தானிய காவல்துறையால் கொல்லப்பட்போது அதற்கு பதில்சொல்ல பகத்சிங் முடிவெடுத்தார்.அதற்கு காரணமான அதிகாரி சாண்டிரஸை அழித்த வழக்கில் பகத்சிங்கிற்கும் நண்பர்களுக்கும் மரணதண்டனை கிடைத்தது.



பகத்சிங்கிற்கும் நண்பர்களுக்கும் தூக்குத்தண்டனை கொடுக்கக்கூடாது என்று நாடு முழுவதிலும் மக்கள் கூட்;டமாக தெருக்களில் எழுச்சிகொண்டிருந்தபோது இன்று இந்தியாவின் தேசத்தந்தையாக உருவகப்படுத்தப்படும் காந்தி இந்தியாவின் வைசிராய்க்கு ஒரு கடிதம் எழுதினார்.(வைசிராய் என்பவர் இங்கிலாந்துராணியின் பிரதிநிதியாக இந்தியாவை ஆளுபவர்).பகத்சிங்கின் தூக்குதண்டனைக்காக பிரித்தானியர் நிர்ணயித்த திகதிக்கு மூன்றுநாட்கள் முன்னதாகவே அந்த தண்டனையை வழங்குங்கள் என்று கேட்டிருந்தார். ஏனென்றால் தூக்குத்தண்டனை நிறைவேற்ற நிர்ணயிக்கப்பட்ட நாளில் அவருக்கு வேறுமுக்கிய அலுவல் இருந்ததாம்.பகத்சிங் காந்தியையோ அவரின் போராட்டமுறைகளையோ அவரின் இந்துமத சனாதன முறைகளையோ ஏற்றுக்கொண்வராக இருந்தது கிடையாது.அதனால் அந்த அற்புதமானவீரனின் அறமும்இவிடுதலைக்கான பிரகடனமும் பெரிய அளவில் இன்றளவும் இந்தியாவில் வெளிப்படுத்தப்படவில்லை.



ஆனால் பகத்சிங் இத்தகைய அங்கீகாரங்களையோ அடிபணிவுகளையோ ஒருபோதும் பொருட்டாக நினைக்காமல் போரடிய வீரன்.அவன் மிகவும் தெளிவாக தன்னை யார் என்றும் தான் யாருக்காக போராடுகிறேன் என்றும் தெளிவாக இருந்தவன்.



“நான் ஒரு மனிதன்.மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடும் சம்பந்தப்பட்டவையே” என்று தனது இருபத்திஇரண்டு வயத்துக்குள் பிரகடனப்படுத்தியவன் அவன்.



பகத்சிங்கின் முயற்சிகள் இருபத்துமூன்றுவயத்துக்குள் முடிந்திருக்கலாம்.ஒரு தூக்குகயிற்றின் இறுக்கத்துடன் அவனின் வாழ்வு முடிந்திருக்கலாம்.பகத்சிங் தனது இறுதிக்கணம்வரைக்கும் தனது தாயகத்தின்மீதான பற்றுதலைஇதனது மண்ணின் மீதான சமரசம் செய்யமுடியாத தாகத்துடனும் இருந்தவன்.அவனுக்கு தூக்குதண்டனை கொடுத்தபோதும் அவர் அதனை ஏற்காமல் தன்னை துப்பாக்கியால் சுட்டோஇபீரங்கியால் சுட்டோ கொல்லும்படி கேட்டவர்.ஏன் அப்படி கேட்கிறாய் என்று அதிகாரிகள் கேட்டபோது தூக்கிலே போட்டால் உயிர்பிரியும்போது தனது கால்கள் தனது தாய்மண்ணில்படாமல் அந்தரத்தில் இருக்கும் என்றும் துப்பாக்கியால்சுட்டால் தனது உயிர்போகும்போது தனது கால்கள் தனது மண்ணை தீண்டிபடியே போகும் என்றும் எந்தவிதமானசலனமும் இல்லாமல் வீரமுடன் கூறியவன் அவன்.



இந்தியசுதந்திரம் என்பது அரசியல்வாதிகளுக்கு வேண்டுமானால் காந்தியின் முயற்சியாக இருக்கலாம்.ஆனால் அடிமைப்பட்ட ஒரு இனத்தின் மக்கள் என்ற முறையிலும் விடுதலைக்காக போராடவேண்டி கட்டாயத்துக்குள் வாழும் ஒரு மக்கள் என்ற முறையிலும் எமக்கு பகத்சிங்கின் வாழ்வுதான் இந்தியசுதந்திரமாக தெரிகிறது.



பகத்சிங் போன்ற பல்லாயிரம் வீரர்களினதும் இந்தியதேசிய ராணுவத்தை உருவாக்கிய சுபாஸ்சந்திரபோசின் படையில் போராடிய பல ஆயிரம் இந்தியவீரர்களின் கனவாகவேஎமக்கு இந்தியசுதந்திரம் தெரிகிறது.



பகத்சிங் தனது சிறையின் சுவரில் எப்போதும் எழுதிவைத்திருந்த சார்ல்ஸ் மகாய் அவர்களின் கவிதை பகத்சிங்கின் ஆன்மத்தை அழகாகவே காட்டுகிறது.



“பகைவர்களே இல்லை என்கிறாயா..?



அந்தோ என் நண்பனே



இப்பெருமிதம் மிக அற்பமானது



உனக்கு எதிரிகளே இல்லாது போனால்



நீ செய்திருப்பது அற்ப சொற்பமானது



துரோகி யாரையும் வீழ்த்தியிருக்கமாட்டாய்



போராட்டத்தில் கோழையாக இருந்திருப்பாய்..”



என்று நீளும் இந்த கவிதையை போலவே பகத்சிங்கிற்கு அவர் வாழும் போது எதிரிகளாக பிரித்தானியபேரரசு இருந்தது. அவர் மரணித்த பிறகு அவரின் நினைவையும் அவரின் கருத்துகளையும் மறைக்கும் இந்தியாவை ஆளும் காந்திகள் இருக்கிறார்கள்.

துரோகம் தொடர்ந்தால் வரைபடம் மாறும்: வைகோ

மத்திய அரசின் துரோகம் தொடர்ந்தால், இந்தியாவின் வரைபடத்தில் சில பகுதிகள் மறைய வாய்ப்புள்ளது,” என மதுரையில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ பேசினார். பெரியாறு அணை பகுதியில் புதிய அணை கட்டும் கேரளாவின் முயற்சியை கண்டித்தும், துணை போகும் மத்திய அரசை கண்டித்தும் மதுரையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது.



உண்ணாவிரதத்தில் வைகோ பேசியதாவது: ஊழலை எதிர்த்த அன்னா ஹசாரேவை, ஊழல்வாதிகள் நிறைந்த திகார் சிறையில் அடைத்துள்ளனர். ராஜிவ் கொலையில் மரண தண்டனை விதித்தவர்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா உதவ வேண்டும். தமிழர்களை வஞ்சிக்க, காங்., கம்யூ.,கள் கேரளாவில் இணைகின்றன. இங்கும் அது நடக்க வேண்டும். மதுரை உட்பட தென்மாவட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்பு, ஒட்டுமொத்த தமிழகத்தை பாதிக்கும். கேரளா உதவ மறுத்தால், அவர்களுக்கு பொருள் செல்லும் கம்பம் மெட்டு, போடி மெட்டு, களியக்காவிளை ரோடுகள் பெயர்க்கப்படும். தமிழகத்திற்கு மத்தியஅரசின் துரோகம் தொடர்ந்தால், நூற்றாண்டு சுதந்திரம் காணும் போது, இந்தியாவின் வரைபடத்தில் சில பகுதிகள் விடுபட நேரிடும், என்றார்.



பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் அப்பாஸ், பெரியார் திராவிடக்கழக தலைவர் கொளத்தூர் மணி, ம.தி.மு.க., அவைத்தலைவர் துரைச்சாமி, பொருளாளர் மாசிலாமணி, துணை பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், கொள்கை பரப்புச்செயலாளர் நாஞ்சில் சம்பத், அரசியல் ஆய்வு மைய செயலாளர் செந்திலதிபன், நகர் செயலாளர்

பூமிநாதன், புறநகர் மாவட்ட செயலாளர் தமிழ்செல்வன், நான்காம் பகுதி செயலாளர் ரஞ்சித்குமார், ஐந்தாம் பகுதி செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். உலக தமிழர் பேரமைப்பு தலைவர் நெடுமாறன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரத்தை நிறைவு

செய்தார்.



அய்யோ… பாவம் தி.மு.க.,! : கேரளா விவகாரத்தில் தி.மு.க., விளைத்த துரோகம் அதிகம். நொந்து, வெந்து போய்; அய்யோ… பாவம் என்ற கதியில் நிராயுதபாணியாக நிற்பவர்களை நாம் விமர்ச்சிக்க வேண்டாம். என் போராட்ட பின்னணியில் ஓட்டு வேட்கை இல்லை. தமிழக உரிமையை மீட்க தமிழக அரசு எடுக்கும் முயற்சிக்கு ம.தி.மு.க., துணை நிற்கும். இதை கூட்டணிக்கு தூதாக யாரும் நினைக்க வேண்டாம். பலன் எதிர்பாராமல் தமிழகத்தை நேசிக்கிறோம், ஆதரவு கொடுங்கள், என வைகோ உருக்கமாக பேசினார்.

மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ 10 லட்சம் உதவி வழங்கிய சேரன்!


சுதந்திர தினத்தையொட்டி மக்கள் கல்வி அறக்கட்டளை சார்பில் ரூ 10 லட்சம் நல உதவிகளை வழங்கினார் இயக்குநர் சேரன்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மக்கள் கல்வி அறக்கட்டளை பல்வேறு நற்பணிகளைச் செய்துவருகிறது. இந்த அறக்கட்டளை சார்பில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது.

விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் - நடிகர் சேரன் கலந்து கொண்டார். ஏழைகளுக்கு ரூ 10 லட்சம் மதிப்பிலான உதவிப் பொருள்கள் மற்றும் நிதியுதவிகளை வழங்கினார்.

எம்எம்டிஏ காலனியில் உள்ள கார்ப்பொரேஷன் பள்ளிக்கு ரூ 1.48 லட்சம் மதிப்பில் கழிப்பறைகள் புதுப்பித்துத் தரப்பட்டன. இவற்றை பள்ளியிடம் அவர் ஒப்படைத்தார். இந்தப் பள்ளிக்கு ரூ 13000 செலவில் கணிப்பொறி அச்சு எந்திரம் வழங்கப்பட்டது.

10 மற்றும் 12-ம் வகுப்புகளில் பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் இந்தப் பள்ளியில் படிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் உதவிகள் வழங்கினார் சேரன்.

பப்ளிசிட்டிக்காக எங்களை பலியாக்குவதா? - பிரஜின் - சான்ட்ரா ஆதங்கம்


சுற்றுலா படத்தின் பப்ளிசிட்டிக்காக எங்களைப் பலியாக்கிவிட்டனர் அதன் தயாரிப்பாளரும் இயக்குநரும் என சின்னத்திரை நடிகர் பிரஜின் - சான்ட்ரா ஜோடி குற்றம் சாட்டியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை குன்னூரில் படப்பிடிப்பிலிருந்தபோது பிரஜினும் சான்ட்ராவும் மாயமாகிவிட்டதாக குற்றம்சாட்டினர் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும்.

ஆனால் இதுகுறித்து விசாரிக்கையில் வேறு சில உண்மைகள் தெரிய வந்தன.

இதுகுறித்து பிரஜின் - சான்ட்ராவை தொடர்பு கொண்டு விசாரித்தோம். அவர் கூறுகையில், "இருபத்து மூன்று நாட்கள் தேதி கொடுத்து நடித்தோம். இன்னும் இருபத்தைந்து நாட்கள் எங்களுடைய வேலை பாக்கி இருந்தது. நாங்கள் தொடர்ந்து இருந்து நடித்துவிட்டுப் போகிறோம் என்று இயக்குனரிடம் சொன்னோம். அவர்களோ வேறு காட்சிகளை நாங்கள் சூட் பண்ண வேண்டியிருக்கு. உங்கள் வேலை முடிந்தது. அடுத்த செட்யூலில் உங்கள் தேதி தேவைப்படும். தற்போது நீங்கள் போகலாம் என டிக்கெட் எடுத்து தந்தவர்களே அவர்கள்தான்.

வீடு வந்து சேர்ந்தபோது எங்களுக்கு அதிர்ச்சி. நாங்கள் படப்பிடிப்பில் காணாமல் போய்விட்டோமென.. அப்படி பாதியில் ஓடி வரவேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லை. நடிக்க போனவர்கள் முழுமையாக நடிக்காமல் ஏன் வரவேண்டும்? நானும் என் மனைவியும் எப்படியாவது நடித்து ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்றுதான் போராடி நடித்து வருகிறோம்.

இயக்குனர்தான் இப்படி எங்கள் பெயரைக் கெடுத்து செய்தி கொடுத்திருக்கிறார். நீங்கள் நன்றாக விசாரித்துப் பாருங்கள் எங்களைப் பற்றி எந்த சங்கத்திலும் அவர்கள் கம்ப்ளைன்ட் கொடுக்கவே இல்லை. பத்திரிகைகளில் மட்டும் எல்லா சங்கத்திலும் கம்ப்ளைன்ட் கொடுத்ததாக செய்தி வருகிறது. பப்ளிசிட்டிக்காக எங்களை பலிகடாவாக்கிவிட்டார் இயக்குனர். பப்ளிசிட்டிக்காக எங்கள் வாழ்க்கையை ஏன் கெடுக்க வேண்டும்?

அப்படி நாங்கள் தவறு செய்திருந்தால் சங்கங்கள் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கட்டும். நடிக்காமல் கூட இருந்துவிட்டுப்போகிறோம். அப்படியில்லாவிட்டால் அவர்கள் பத்திரிகையை கூப்பிட்டு உண்மையை சொல்லவேண்டும் அதன்பிறகுதான் மேற்கொண்டு இந்த படத்தில் நடிக்க இருக்கிறோம்," என்றனர்.

பாவம் வளர்ற பிள்ளைகளை ஏம்பா வம்புல மாட்டிவிடுறீங்க?

அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்த 'சங்கையா!'


திரைப்பட விழாக்களில் அரிதாகக் கலந்துகொள்ளும் அரசியல் தலைவர்களில் ஒருவர் பாமகவின் முக்கியத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ்.

அப்படி அவர் அரிதாகக் கலந்து கொண்ட சினிமா நிகழ்ச்சி 'சங்கையா' திரைப்படத் துவக்கவிழா.

ஏவிஎம் ஸ்டுடியோவில் இன்று காலை நடந்த இந்தப் படத்தின் பூஜை மற்றும் துவக்க விழாவுக்கு சிறப்பு விருந்தினரே அவர்தான். ஜெகன், பரணி நடிக்கும் இந்தப் படத்தை கேந்திரன் முனியசாமி இயக்குகிறார். இவர் அய்யன் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைரமுத்து பாடல்களை எழுத, கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கிறார். மக்கள் தொடர்பை நிகில் கவனிக்கிறார்.

அருண்குமார் ஒளிப்பதிவு செய்ய, பிரவீண் - ஸ்ரீகாந்த் எடிட்டிங் செய்கின்றனர்.

படத் துவக்கவிழாவில் பங்கேற்ற அன்புமணி, குழுவினரை வாழ்த்தியதோடு, சமூகத்துக்கு பயனுள்ள படங்களை எடுக்க வேண்டும் என்றார். பசும்பொன் தேவர் கழகத் தலைவர் வெள்ளைச்சாமி தேவரும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அன்னாவை கைது செய்தது தவறு: தெலுங்கு, கன்னட நடிகர், நடிகையர் கண்டனம்


பெங்களூர்: அன்னா ஹஸாரேவின் போராட்டத்திற்கு தென்னிந்திய நடிகர்-நடிகைகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். அன்னாவை கைது செய்தது தான் மத்திய அரசு செய்த தவறு என்று நடிகர் சித்தார்த் தெரிவித்துள்ளார்.

அன்னா ஹஸாரே திஹாரில் இருக்க நாடே அவரைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறது. நாடு முழுவதும் அவருக்கு ஆதரவாக போராட்டங்கள், பேரணிகள் நடந்து கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் அவருக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. இணையதளத்தில் மட்டும் 3 லட்சம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தென்னிந்திய சினிமா நட்சத்திரங்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

நாளைய இந்தியாவை ஒளிமயமானதாக்க இன்று அன்னா ஹஸாரேவை ஆதரியுங்கள். ஊழலை ஒழிக்க உதவி செய்யுங்கள். ஜெய் ஹிந்த்! ஜெய் ஜன் லோக்பால் என்று தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா டுவிட்டரில் எழுதியுள்ளார்.

இது குறித்து இயக்குனரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் கூறியதாவது,

அன்னாவின் இயக்கத்தை அரசு எந்த அளவுக்கு அடக்க நினைக்கிறதோ, அந்த அளவுக்கு ஆதரவு பெருகிக் கொண்டே இருக்கிறது. ஊழலால் பெரிதும் பாதிக்கப்படும் நடுத்தர மக்கள் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இந்த போராட்டம் நிச்சயம் வெற்றி அடையும். அன்னா மற்றும் அவரது குழுவின் கோரிக்கைகள் நியாமற்றவை என்று தோன்றவில்லை. நாட்டில் உள்ள அனைவரையும் லோக்பால் மசோதாவில் சேர்ப்பதில் என்ன தவறு?

கர்நாடகாவில் லோக்ஆயுக்தாவால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட முன்னாள் முதல்வர் எதியூரப்பா தனது பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. குற்றம் சாட்டப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் அன்னாவுக்கு ஆதரவு பெருகி வருகிறது.

அன்னா ஹஸாரே போன்று ஆயிரம் பேர் வர வேண்டிக் கொண்டிருக்கிறேன் என்று நடிகை குத்து ரம்யா டுவி்ட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சித்தார்த் தொடர்ந்து அன்னாவுக்கு ஆதரவாக டுவிட்டரில் எழுதி வருகிறார். அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது,

அன்னாவை கைது செய்ததன் மூலம் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தவறு செய்துவிட்டது. அரசின் இந்த தவறால் அவர்களுக்கு ஆதரவாக இருந்த சில செய்தி சேனல்கள் கூட தற்போது அன்னாவுக்கு ஆதரவாக மாறியுள்ளன. எதுவும் நடக்கலாம் என்று கூறியுள்ளார்.

தெலுங்கு பாப் பாடகியும், நடிகையுமான ஸ்மிதா அன்னாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிரபல கன்னட பாடகி சைத்ரா பெங்களூர் சுதந்திர பூங்காவில் அன்னாவுக்கு ஆதரவாக நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். ஊழலை ஒழிக்க வேண்டுமானால் அன்னா ஹஸாரே பின் செல்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர் பிரச்சினை படமாகிறது... கதை- வசனம் ஜெயமோகன்; இயக்கம் மணிரத்னம்!


சிங்கள கடற்படையினரிடம் சிக்கி தமிழக மீனவர்கள் படும் பாடுகளை திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம்.

இந்தப் படத்துக்கான கதை வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதுகிறார்.

தமிழக மீனவர்களுக்கும் சிங்கள கடற்படையினருக்கும் பல ஆண்டுகளாக பிரச்சினை இருந்து வருகிறது. நடுக்கடலில் தமிழ் மீனவர்களை மடக்கி நிர்வாணப்படுத்தி துன்புறுத்தும் சிங்கள வெறியர்கள், பல நேரங்களில் சுட்டுக் கொன்றுவிடுவதும், கைது செய்து இலங்கைச் சிறைகளில் அடைப்பதும் தொடர்கிறது.

இதனை இந்திய அரசு இதுவரை தட்டிக் கேட்கவில்லை. தமிழக அரசின் எதிர்ப்புக் குரலை பொருட்படுத்துவதும் இல்லை மத்திய அரசு.

இந்த தொடர் அவலத்தை ஜெயமோகன் கதை வசனத்தில் ஒரு திரைப்படமாக உருவாக்குகிறார் மணிரத்னம்.

இந்தப் படத்தில் ஹீரோ ஹீரோயின் என அனைவரும் புதியவர்களே. ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்க, ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு செய்கிறார். ஏற்கெனவே பம்பாய் படத்தில் மணிரத்னமும் ராஜீவ் மேனனும் இணைந்து பணியாற்றியுள்ளனர். இந்தப் படத்தை முழுக்க முழுக்க கன்னியாகுமரி மற்றும் ராமேஸ்வர கடற்கரைகளில், கடல்பகுதிகளில் எடுக்கிறாராம் மணிரத்னம்.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டம் குறித்து அரைகுறையாக கருத்து ('இது ஆயுத வியாபாரிகளின் போராட்டம்') சொல்லி தமிழ் உணர்வாளர்களின் கண்டனத்துக்கு ஆளானவர் மணிரத்னம். இந்த முறை மீண்டும் ஒரு உணர்ச்சிப்பூர்வமான விஷயத்தைக் கையிலெடுக்கிறார்.

அதை எப்படி எடுக்கப் போகிறார் என்பதை தமிழ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறார்கள்!

மூன்று இளைஞர்களை தூக்கு கொட்டடிக்கு அனுப்புவது ஏன்?: பெ. மணியரசன்

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரது மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி தமிழ் தேச பொதுவுடமை கட்சியின் சார்பில் சென்னையில் ஆர்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்தில், பேரறிவாளனின் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார், தமிழ்த் திரைப்பட இயக்குநர் தங்கர் பச்சான், தமிழுரிமைக் கூட்டமைப்பின் செயலாளர் புலவர் கி.த.பச்சையப்பனார், ஓவியர் வீரசந்தனம், எழுகதிர் ஆசிரியர் முனைவர் அருகோ, தமிழர் உலகம் ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் புலவர் சி.பா.அருட்கண்ணனார், புலவர் இராமச்சந்திரன் உள்ளிட்டேர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.



ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கிப் பேசினார்.



அவர் பேசும் போது, ”தமிழினத்தின் அடையாளமாக சிறையில் உள்ள இம்மூவரும் இன்றுள்ளனர். செய்யாத குற்றத்திற்காக அவர்கள் ஏற்கெனவே 21 ஆண்டுகள் அநியாயமாக சிறை வைக்கப்பட்டு விட்டனர்.

இலங்கை அதிகாரிகளை வெளியேற்ற வேண்டும்: வைகோ

இலங்கையருக்கு இந்தியாவின் எந்த மூலையிலும் எவ்விதமான பயிற்சியையும் வழங்கக் கூடாது. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் ரயில்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கும் இலங்கை அதிகாரிகள் 12 பேரையும் இங்கிருந்து வெளியேற்றவேண்டும் என ம.தி.மு.க.பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.



இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, வில்லிவாக்கத்தில் உள்ள மத்திய அரசின் பெரம்பூர் ரயில்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில், இலங்கையைச் சேர்ந்த 12 இலங்கை அதிகாரிகளுக்கு உயர் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதை எண்ணி மிகுந்த வேதனையும், அதிர்ச்சியும் அடை ந்தேன். மத்திய காங்கிரஸ் அரசு தொடர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்வதையே தங்கள் அரசின் செயற்றிட்டமாக வைத்திருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகிறது.



எனவே, மத்திய அரசின் ரயில் பெட்டி தயாரிப்புத் தொழிற்சாலையில் இலங்கையருக்கு பயிற்சி அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தி ம.தி.மு.க.வினர் ஐ.சி.எப். தொழிற்சாலையை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் கண்டனப் போராட்டம் நடத்தினார்கள்.



7 கோடி தமிழர்கள் குடிமக்களாக இருக்கும் இந்தியாவின் எந்த மூலையிலும் இலங்கையருக்கு எந்தவிதமான பயிற்சியும் அளிக்கக்கூடாது என்பதோடு, அவர்க ளை உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தண்டனையை நிறைவேற்றுவது நாகரீகம் ஆகாது (படங்கள் இணைப்பு)

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் மரணத் தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னையில் இருந்து வேலூர் நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் பேரணியில் ஏராளமான இளைஞர்கள் பங்கேற்றனர்.



ஆலந்தூர் நகராட்சி அலுவலகம் அருகே நடிகர் சத்தியராஜ் இந்த பேரணியை துவங்கி வைத்தார். சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பல்வேறு பகுதியில் இருந்தும் வந்த பெண்கள் உள்பட பலர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.



20 ஆண்டுகள் சிறையில் இருந்த மூவருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவது நாகரீகம் ஆகாது என்று பேரணியில் கலந்து கொண்ட திரைப்பட நடிகரும், இயக்குநருமான மணிவண்ணன் தெரிவித்தார்.



அவர் மேலும் கூறுகையில், மரண தண்டனைக்கு எதிராக காந்தியடிகள் சொன்னதற்கு மேலாக நான் ஒன்றும் சொல்லிவிடப்போவதில்லை. நியாயம் கிடைக்க வேண்டும். அந்த இளைஞன் வாழ்க்கையில் தண்டனை குறைக்கப்பட வேண்டும். நீதி காப்பாற்றப்பட வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஆகவே நாங்கள் எங்களால் முடிந்த போராட்டங்களை செய்வோம் என்றார்.



பேரறிவாளன், சாந்தன், முருகனை விடுதலை செய்ய பேரணி - படங்கள் இணைப்பு

மரண தண்டனைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்ப்பு!

பேரறிவாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகியோருக்கு இந்திய நீதிமன்றம் விதித்துள்ள மரணத் தண்டனைக்கு சர்வதேச மன்னிப்புச் சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. .



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் பேரில் மூவருக்கும் மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. இம்மூவருக்கும் பொதுமன்னிப்பு வழங்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் நிராகரித்துள்ளார்.



இந்நிலையில், உலகின் சகல மரணத் தண்டனை விதிப்புக்களுக்கும் எதிர்ப்பை வெளியிடுவதாக சர்வதேச மன்னிப்புச் சபை அறிவித்துள்ளது.



பொதுமன்னிப்பு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பான தீர்ப்பை வழங்குவதற்கு 11 ஆண்டுகள் கடந்துள்ளதாகவும், இது மனிதாபிமானமற்ற செயலாகும் என்றும் மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.



2004 ஆம் ஆண்டிற்கு பின்னர் இந்தியாவில் மரணத் தண்டனை நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசை மண்டியிட வைத்த மக்கள் சக்தி!

வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்த அண்ணா ஹசாரேவை, யோகா குரு ராம்தேவ் மீது போலீஸை ஏவிவிட்டு அடக்கியதைப் போன்று நசுக்கிவிடலாம் என்று கருதிய மத்திய அரசு, நாடு முழுவதும் ஹசாரேவுக்கு ஆதரவாக திரண்ட மக்கள் சக்தியை பார்த்து மிரண்டு, பணிந்து போய் தற்போது அவமானப்பட்டு நிற்கிறது.



ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதாவை உருவாக்குவதில், ஹசாரே தலைமையிலான குடிமக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டு, அவர்களுடன் ஆலோசனை நடத்தியது மத்திய அரசு.



ஆனால் இந்த மசோதாவில் ஊழல் செய்யும் பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் விசாரிக்க ஏதுவாக அவர்களையும், விசாரணை வரம்புக்குள் சேர்க்க வேண்டும் என்று ஹசாரே குழுவினர் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது.



பிரதமர் மற்றும் நீதிபதிகளுக்கு விலக்கு அளித்து தயாரிக்கப்பட்ட லோக்பால் மசோதாவையே மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.



ஆனால் இந்த மசோதா வலுவற்றது என்று கூறிய ஹசாரே, பிரதமர் மற்றும் நீதிபதிகளையும் உள்ளடக்கிய வலுவான லோக்பால் மசோதாவை கொண்டு வர வலியுறுத்தி, ஆகஸ்ட் 16 ஆம் தேதி (நேற்று) முதல் டெல்லியிலுள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாக அறிவித்தார்.



ஆனால் ஹசாரேவின் கோரிக்கையையும், அவரது உண்ணாவிரத போராட்டத்தையும் தாம் விரும்பவில்லை என்பதை பிரதமர் மன்மோகன் சிங்கின் சுதந்திர தின உரை உணர்த்தியது. உண்ணாவிரதத்தின் மூலம் ஊழலை ஒழித்து விட முடியாது என்றும், நாடாளுமன்ற ஜனநாயகத்தை மீறக்கூடாது என்றும் அவர் பேசியது, ஹசாரே விடயத்தில் அவரது மனவோட்டம் என்ன என்பதை பட்டவர்த்தனமாகஉணர்த்தியது.



அதே சமயம் ஹசாரேவின் உண்ணாவிரதம் நிச்சயம் நாடு முழுவதும் பற்றிக்கொள்ளும் என்ற அச்சமும் மன்மோகன் சிங் தலைமையிலான அரசுக்கு ஏற்பட்டது.எனவே அதனை தடுக்கவும்,கூடவே ஹசாரேவை கைது செய்து உள்ளே வைத்தால், அதனால் மக்களிடையே எழும் ஆதரவு அல்லது போராட்ட வீச்சு எந்த அளவுக்கு இருக்கும் என்று நாடி பிடித்து பார்க்கவும் திட்டமிட்டது.



இதனால் ஹசாரே ஏற்கமாட்டார் என்று தெரிந்தே,உண்ணாவிரத இடத்தை மாற்றுவது மற்றும் 3 நாட்களுக்கு மட்டுமே உண்ணாவிரதம் இருக்கலாம் என்பது உள்ளிட்ட 6 நிபந்தனைகளை டெல்லி காவல்துறை விதித்தது.



எதிர்பார்த்தபடியே அந்த நிபந்தனைகளை ஏற்க ஹசாரே மறுத்துவிட்டார்.அத்துடன் தடையை மீறி உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கப்போவதாகவும் அவர் அறிவித்தார்.



இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காதவகையில், 144 தடையுத்தரவு அமலில் இல்லாத ஹசாரே வீடு இருக்கும் கிழக்கு டெல்லியின் மயூரா விகாரில் புகுந்து, நேற்று காலை 7.30 மணிக்கே அவரை கைது செய்து அழைத்து சென்றது டெல்லி காவல்துறை.



இது ஹசாரே ஆதரவாளர்களை கொந்தளிக்க வைத்தது.அவர்கள் ஹசாரேவை ஏற்றி சென்ற வாகனம் முன்னர் அமர்ந்து மறியலில் ஈடுபட, இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 45 நிமிடங்களுக்கு மேலாகி படாதபாடு பட்டது போலீஸ்.



அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஹசாரேவை 7 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட,டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார் ஹசாரே.



சுரேஷ் கல்மாடி, ஆ.ராசா போன்ற ஊழல்வாதிகள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறையிலேயே, ஊழலுக்கு எதிராக போராடும் ஹசாரேவும் அடைக்கப்பட்ட தகவல் பரவியதும் நாடு முழுவதுமே ஹசாரே ஆதரவாளர்கள் மட்டுமல்ல, இளைஞர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அனைத்து தரப்பு மக்களும் வீதிகளில் இறங்கி மறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என ஆவேசம் காட்டத் தொடங்கினர்.



மக்களின் இந்த போராட்ட வீச்சை தொலைக்காட்சிகளும் போட்டிபோட்டு ஒளிபரப்ப, நாடு முழுவதும் தங்களுக்கு எதிரான ஒருமித்த கருத்து உருவாவதை பார்த்து மத்தியில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் தலைமையிலான அரசு மிரண்டு போனது.



போதாதற்கு எதிர்கட்சிகளும் சமீப காலத்தில் இல்லாதவகையில், ஹசாரே கைதை கண்டித்து ஓரணியில் திரண்டு மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்தன.



நாடாளுமன்றம் நடப்பதால் 144 தடையுத்தரவு அமலில் இருக்கும்போது, உண்ணாவிரத போராட்டம் நடத்த எவ்வாறு அனுமதிக்க முடியும்? என்று ஹசாரே கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தி வியாக்கியானம் செய்தார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

விடுதலைப் புலிகள் மீதான தடை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே முரண்ப்பாடு



தமிழீழ விடுதலைப் புலிகளை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்தும் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் வைத்துள்ளது. இந்நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என நெதர்லாந்து சட்டத்தரணி விக்டர் கோப் ஐரோப்பிய நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணைக்காக விடுதலைப் புலிகள் மீது தடை விதிக்கக்கோரிய நாடுகளிடம் ஐரோப்பிய நீதிமன்றம் விளக்கம்கோரியபோது, இந்த விடயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் முரண்பாடான கருத்துக்கள் எழுந்துள்ளதாக தெரியவருகின்றது.



சிறீலங்காவின் பயங்கரவாதப் போரை ஆதரித்த ஐரோப்பிய நாடுகள், விடுதலைப் புலிகள் மீதான தடையைப் போடுவதற்கு முன்னின்று செயற்பட்டன. ஆனால் தற்போது நடந்து முடிந்த இன அழிப்பும் அதன் பின்னரான சனல்-4 தொலைக்காட்சியின் ஆதாரங்கம், ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையும் சிறீலங்காவின் இனப்படுகொலை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது.



இந்நிலையில், விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கத்திற்கு எதிராக தமது வாதங்களை முன்வைப்பதற்கு முக்கிய நாடுகள் சில மறுத்துள்ளதாகவும் அறியவருகின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத போராட்டங்களில் ஈடுபடப் போவதில்லை. அரசியல் வழிமுறைகளில் இலக்கை எட்டுவதற்கு முயற்சிக்கப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர் என விக்டர் கோப் தனது மனுவில் தெரிவித்திருந்தார். எனவே, அவர்களின் ஆயுத அச்சுறுத்தல் இல்லையென அவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.



தமிழீழ விடுதலைப் புலிகளை ஒரு பயங்கரவாத அமைப்பாக அடையாளப் படுத்தியே ஐரோப்பிய ஒன்றியம் தடை செய்துள்ளது. இது சர்வதேச சட்டங்களுக்கு முரணானது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் சுயாட்சிக்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டம் நடத்தினார்கள் என்றும், தமிழ் மக்கள் சுயாட்சி அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக போராடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



சுயாட்சி அதிகாரம் என்பது சர்வதேச சட்டங்களின் அடிப்படைக் கோட்பாடுகளில் ஒன்றாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சுயாட்சி அதிகாரங்களைப் பெற்றுக் கொள்ளவதற்காக போராட்டம் நடத்தப்பட்ட சந்தர்ப்பம் ஒன்றில் ஒரு தப்பினரை மட்டும் பயங்கரவாதிகள் என முத்திரை குத்துவது எந்தளவிற்கு நியாயமானது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், விடுதலைப் புலிகளின் போராட்டமானது சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு எதிரானதாகவோ அல்லது தேசிய குற்றவியல் சட்டத்திற்கு எதிரானதோ அல்ல என்றும் அதனால் இச்சட்டங்களுக்குள் அடக்கமுடியாது என்றும் கூறியுள்ளார். அத்தோடு ஐரோப்பிய சட்டங்கள் குற்றம்சாட்டப்பட்டவர் தனக்காக வாதிடுவதற்கும் தனக்குரிய சட்டப் பாதுகாப்பைப் பெறுவதற்கும் எதிரானதாகவே அமைந்துள்ளது.



அத்துடன், முறைமையற்ற சட்டங்களின் மூலம் முறையற்ற தடையை விடுதலைப் புலிகள் மீது கொண்டுவந்ததனால், இதற்கான நட்டஈட்டை விடுதலைப் புலிகளுக்கு நீதிமன்றம், ஐரோப்பிய ஒன்றியத்திடம் பெற்றுக்கொடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதேவேளை, நெதர்லாந்து, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏனைய நாடுகளிலும் தமிழர்கள் தண்டிக்கப்படக் கூடாது எனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.



அத்துடன், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்தத் தடை நீக்கப்பட்டால் புலம்பெயர்ந்த ஐரோப்பா வாழ் தமிழ் மக்கள் தம் மீது குத்தப்பட்ட பயங்கரவாதிகள் என்ற நிழல் நீங்கி, சுதந்திரமாக செயற்படமுடியும் என சட்டஅவதானிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், விடுதலைப்புலிகள் மீது தடை விதிக்கக்கோரிய நாடுகளிடம் இது தொடர்பாக ஐரோப்பிய நீதிமன்றம் விளக்கம் கோரியிருந்தது. இந்த விளக்கத்தை எதிர்வரும் செப்டெம்பர் 19ம் திகதிக்க முன்னதாக வழங்குமாறு தெரிவித்துள்ளது.



இந்நிலையில், விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னின்று நடவடிக்கை எடுத்த பிரான்ஸ், ஜேர்மனி மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் இந்தத் தடைக்கு எதிரான விவாதத்தில் இருந்து விலகியிருக்க முடிவு செய்துள்ளது. எனினும், பிரித்தானியாவும் நெதர்லாந்தும் தடை நீக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தெரியவந்துள்ளது.



பிரித்தானிய அரசாங்கமே இத்தடையை நீடிக்க விரும்புவதாகவும் எனினும், பிரித்தானிய நீதிமன்றம் தமிழர்களுக்கு நியாயமான தீர்வு கிடைப்பதையும் அவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைப்பதையும் விரும்புவதாகவும் தெரியவருகின்றது. இதேவேளை, நெதர்லாந்து அரசாங்கம் இந்தத் தடைக்கு எதிராக வாதிட விரும்பாதபோதும் அந்நாட்டின் சில உள்ளூர் அரசியல்வாதிகள் இந்தத் தடையை நீடிக்க விரும்புவதாகவும், இவர்கள் சிலரின் (சிறீலங்காவின்) விருப்பங்களுக்காகவே இதனை மேற்கொள்ள முனைவதாகவும் தெரியவருகின்றது.



இலங்கையில் போர் நிறைவடைந்ததன் பின்னர் நெதர்லாந்தில் தமிழ்ச் செயற்பாட்டாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டதற்கும் இவ்வாறானவர்களின் அழுத்தமே காரணம் என்றும் கூறப்படுகின்றது.



இதேவேளை, சனல்-4 ஒளிபரப்பு மற்றும் ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையை பார்வையிட்ட அமெரிக்காவின் நீதிபதிகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள் வழக்குகளில் அவர்களுக்கு எதிராக தீர்ப்புச் சொல்வதற்கு தயங்கிவரும் நிலையில், அதே சட்டமுறையைக் கொண்டுள்ள பிரித்தானியா விடுதலைப் புலிகளுக்கு எதிராகநடவடிக்கையை தொடரமுனைவது தமிழ் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.



அத்துடன், பிரித்தானியா அந்நாட்டின் நீதிமுறைமைக்கு எதிராகவே விடுதலைப் புலிகளுக்கு மீதான தடையை நீடிக்க விரும்புகின்றது.

கிழக்கில் மர்மமனிதர்கள் காரணம் காட்டி படைகளைக் குவிக்கிறது சிறிலங்கா அரசு



கிழக்கு மாகாணத்தில் மர்மமனிதர் விவகாரத்தினால் எழுந்துள்ள பதற்ற நிலையைக் காரணம் காட்டி சிறிலங்கா அரசு அங்கு தனது படைகளைக் குவித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



அண்மையில் பொதுமக்களுக்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்ற கிண்ணியா பிரதேசத்துக்கு மேலதிகமாக இரண்டு பற்றாலியன் சிறிலங்கா இராணுவத்தினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.



இந்த இரண்டு பற்றாலியன்களையும் சேர்ந்த சுமார் 1500 சிறிலங்கா படையினர் கிண்ணியா பிரதேசத்தில் புதிய படை முகாம்களை நிறுவி நிலை கொண்டுள்ளதாகவும், சட்டம் ஒழுங்கை நாட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.



இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கிழக்குப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா, புதிதாக அமைக்கப்பட்டுள்ள படைமுகாம்கள் கிண்ணியாவின் முழுப்பகுதியினதும் பாதுகாப்பைக் கவனித்துக் கொள்ளவுள்ளதாகக் கூறியுள்ளார்.



அதேவேளை கிண்ணியா கடற்படை முகாமை அகற்ற முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

இந்த முகாமின் பாதுகாப்புக்காக மேலதிக கடற்படையினரை அனுப்பி வைத்துள்ளதாக சிறிலங்கா கடற்படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.



இதுபோன்றே அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், மட்டக்களப்பு மாவட்டத்திலும் சிறிலங்காப் படையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது.



குறிப்பாக தமிழ், முஸ்லிம் பிரதேசங்களிலேயே இவ்வாறு படைக்குவிப்பு இடம்பெற்று வருகிறது.



அத்துடன் சிறிலங்கா படையினர் போர்க்காலத்தில் சட்டத்தை தம் கையில் எடுத்துக் கொண்டு செயற்பட்டது போன்று பொதுமக்கள் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



கிழக்கில் பல்வேறு இடங்களிலும் மர்ம மனிதர்களைத் துரத்திச் சென்றவர்கள் சிறிலங்காப் படையினரின தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.



வீடுகளுக்குள் புகுந்தும் வீதிகளிலும் பொதுமக்கள் சிறிலங்காப் படையினரால் தாக்கப்படும் சம்பவங்கள் கிழக்கில் அதிகரித்துள்ளன.

இதன்காரணமாக பொதுமக்கள் மத்தியில் பீதியும் பதற்றமும் அதிகரித்து வருகிறது.



அதேவேளை கலகத்தை அடக்குகின்ற போர்வையில் சிறிலங்கா படையினர் மீளவும் டாங்கிகள், கவசவாகனங்கள் போன்றவற்றை பொதுமக்கள் மீதான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.



கிழக்குப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தாம் கவசவாகனங்களையும், டாங்கிகளையும் பூட்டி வைத்திருப்பதாக மட்டக்களப்பில் கூறியிருந்தார்.



ஆனால், பொத்துவில் வன்முறையை அடுத்து இரண்டு டாங்கிகளுடன் அங்கு சென்றதாக அவரே குறிப்பிட்டிருந்தார்.



அதேவேளை மட்டக்களப்பிலும் சிறிலங்காப் படையினர் கவசவாகனங்களில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருவதுடன் அதில் சென்று பொதுமக்களைத் தாக்கியும் வருகின்றனர்.



நேற்று கவசவாகனத்தில சென்ற சிறிலங்கா படையினரின் தாக்குதலுக்கு இலக்காகி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மாசிலாமணியும் அவரது இணைப்புச் செயலாளரும் காயமடைந்துள்ளனர்.



மர்மமனிதர்கள் விவகாரத்தைப் பயன்படுத்திக் கொண்டு சிறிலங்கா படைத்தரப்பு கிழக்கில் படைக்குவிப்பை மேற்கொண்டு வருவதுடன், அங்கு பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் போர்க்கால நடவடிக்கைளிலும் ஈடுபட்டு வருகிறது.



சிறிலங்காப் படையினரின் படைக்குவிப்புக்கு மத்தியில் மர்மமனிதர்கள் பற்றிய பீதி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.





பிரித்தானியப் மனிதநேய செயல்பாட்டாளர் வாசுகி சிறீலங்காவில் கைது



கடந்த 14 நாட்களுக்கு முன்னர் தனது பிள்ளையோடு இலங்கைக்குச் சென்ற செயல்பாட்டாளர் வாசுகி கருணாநிதியை சிறீலங்கா அரசு கைதுசெய்துள்ளது.



இவர் கடந்த 12 நாட்களாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது மகளை தற்போது விடுவித்துள்ள சிறீலங்கா அரசு வாசுகியை தாம் எப்போது விடுவிப்போம் என்பது குறித்து தெரிவிக்க மறுத்துவருகின்றது.



பிரித்தானியப் பிரஜாவுரிமை பெற்றுள்ள வாசுகி கருணாநிதி பிரித்தானியாவில் நடைபெற்ற பல ஜனநாயக ரீதியான மனித நேய நடவடிக்கைகளில் ஈடுபட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



வாசுகியை கைதுசெய்த இரகசியப் பொலிசார் அவர் பிரித்தானியாவில் நடைபெற்ற போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டதற்கான ஆதார வீடியோ ஒன்றையும் காட்டியுள்ளனர்.



சிறீலங்காவுக்கான பிரதி பிரித்தானியத் தூதுவர் இவர் கைது குறித்து சிறீலங்கா அரசுடன் பேசிவருவதாகவும் மேலும் அறியப்படுகிறது.



5 நாட்களில் அவரை விடுவிப்பதாக முதலில் சிறீலங்கா அரசு வாக்குறுதி கொடுத்தாலும், தற்போது அவரை தொடர்ந்தும் 4ம் மாடியில் தடுத்து வைத்துள்ளதாக தெரியவருகின்றது.



பிரித்தானியாவில் வட்பேட் என்னும் இடத்தில் இவர் வசித்துவந்தார். இவர் கைது குறித்து வட்பேட் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருக்கும் தகவல்கள் சொல்லப்பட்டுள்ளது.



ஒரு பிரித்தானியப் பிரஜை ஒருவரை சிறீலங்கா அரசு இவ்வாறு கைதுசெய்து தடுத்துவைத்திருப்பது வெளியுலகிற்கு தெரியவேண்டும்.



அதுமட்டுமல்லாது சர்வதேச பெண்கள் அமைப்பு இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு புலம்பெயர் தமிழ் சட்ட வல்லுனர்கள் உதவவேண்டும்.



1.மனுவை அனுப்புவதற்கான முகவரி ,https://email.number10.gov.uk/Contact.aspx

2.மனு அனுப்பிய பின் உங்கள் மின்னஞ்சலுக்கு பிரதமர் அலுவலகம் அனுப்பும் இணைப்பை அழுத்தி மனுவை நிறைவு செய்ய தவறாதீர்கள்







Wednesday 17 August 2011

சிதம்பரம் டக்ளசுக்கு மதுபாணம் கொடுக்க சோனியாவுடன் மகிந்தர் சேர்ந்து குடித்தார்! (படம்)

இலங்கையில் இறுதிப்போர் நடந்தபோதும் சரி ஐ.நாவில் போரை நிறுத்தக்கோரி பாதுகாப்புச் சபையில் தீர்மாணம் நிறைவேற்ற முற்பட்டவேளை என்றாலும் சரி பின்னர் போர் குற்ற நடவடிக்கைகள் ஆனாலும் சரி அனைத்து விதங்களிலும் இந்தியா இலங்கைக்கு உதவி வருகிறதே எப்படி என்று பல தடவைகள் தமிழர்கள் யோசித்திருப்பார்கள்.



எதற்கு எடுத்தாலும் இந்தியாவிடம் சென்று ஆலோசனை பெறவேண்டும் எனச் சில த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவுக்குப் பறப்பதும் வழக்கம். ஆனால் இந்தப் படத்தைப் பாருங்கள். மகிந்தர் தனது மனைவி மற்றும் டக்ளஸ் என்று பல பன்றிக்குட்டிகளோடு இந்தியா சென்று வைன் அடித்து மகிழ்ந்துள்ளார்.



இதில் ஒரு ஓரமாக டக்ளசுக்கு ப.சிதம்பரம் அவர்கள் வைன் வாத்துக் கொடுக்கிறார் பின்னர் இருவரும் "சியர்ஸ்" சொல்லி தண்ணியடிக்க ஆரம்பிக்கின்றனர். இதில் இந்திய ஜனாதிபதியும் கலந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. மிகவும் உயர்மட்டத்தில் நடைபெற்ற இந்த இரவுநேர களியாட்டக் கூட்டத்தில் தாராளமாக வைன் என்னும் மதுபாணம் பாய்ந்துள்ளது. குறிப்பாக டக்ளஸ் போதையில் தள்ளாடியுள்ளார். இதில் கான்சரால் பாதிக்கப்பட்டுள்ள சோனியா வேறு தண்ணியடிக்கிறார்.



கேட்டால் விருந்துபசாரம் என்று நல்ல நாகரீகமான வார்த்தைகளைச் சொல்லிச் சமாளித்துவிடுவார்கள். இப் புகைப்படம் எடுக்கப்பட்ட பின்னர், போதையில் இவர்கள் என்ன பேசீனார்கள் எதை எதைப் பற்றி எல்லாம் நக்கலடித்தார்கள் என்ற விடையங்களும் வீடியோவில் பதிவாகியுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அவற்றைப் பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம்.



இவை அனைத்தும் வெளியே வந்தால் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் நாட்டில் மட்டுமல்லாது இந்தியாவின் பல மாகாணங்களில் காங்கிரஸ் அரசு மன் கவ்வும் என்பது நிச்சயம். இப்போது தெரியவேண்டும் இந்திய மத்திய அரசுக்கும் மகிந்தருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று. யாராவது கேட்டால் இலங்கை சீனா பக்கம் செல்லாது இருக்க நாங்கள் இப்படி அடிக்கடி பார்ட்டி கொடுக்கவேண்டி இருக்கும் என்று இந்திய மத்திய அரசு சொன்னாலும் சொல்லும்.



இலங்கை அதிபரோடு மன்மோகன் சிங் மற்றும் சோனியா ஆகியோர் கொண்டுள்ள உறவுக்கு இதைவிட வேறு ஆதாரங்கள் தேவையில்லை என நாம் நினைக்கிறோம்.



அதிர்வு

ஒருமைப்பாட்டைத் தூக்கிலிட்டு விடாதீர்கள்! - ஜூனியர் விகடனுக்கு வைகோ வழங்கிய செவ்வி

முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்ய வேண்டும். அந்த இளைஞனை எனக்கு நன்றாகத் தெரியும். ராஜீவ் கொலைச் சதிபற்றி அவருக்கு எதுவும் தெரியாது.



பேரறிவாளனை பொலிஸார் கடுமையாகச் சித்திரவதை செய்துதான் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள். 19 வயதில் கைதான அந்த இளைஞன் 20 ஆண்டுகளாகச் சிறையில் இருக்கிறார். அவரது வாழ்க்கையே அழிந்துவிட்டது.



நளினிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஏற்கனவே ரத்து செய்ததுபோல, பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையையும் ரத்து செய்ய வேண்டும்!'' - பிரதமர் முன்னால் கலங்கிய குரலில் கோரிக்கை வைத்தார் வைகோ.



இது நடந்தது கடந்த 2-ம் தேதி. ஒரு வாரம் கடந்த நிலையில், டெல்லியில் இருந்து ஒரு செய்தி. 'பேரறிவாளனின் மனு நிராகரிக்கப்பட்டது, தூக்குத் தண்டனை உறுதி!’



இந்த நிலையில் வைகோவைச் சந்தித்தோம்!



பிரதமரைச் சந்தித்து நீங்கள் கோரிக்கை வைத்ததுமே, எதிர்மறையான முடிவு வெளிப்பட்டுள்ளதே?



இப்படி ஒரு உடனடி முடிவைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். பேரறிவாளன் குறித்து நான் எழுதி இருந்த கடிதத்தை முழுமையாகப் பிரதமர் படித்தார். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாண்புமிகு வி.ஆர்.கிருஷ்ணய்யர் 2010 ஆகஸ்ட் 10-ம் நாள் பேரறிவாளனுக்கு மரண தண்டனையைக் குறைப்பதற்கான காரணங்களை அடுக்கி எழுதிய விரிவான கடிதத்தை நான் அதில் முழுமையாகக் குறிப்பிட்டு இருந்தேன்.



உயிர் வாழ்கின்ற அனைத்து ஜீவராசிகளுக்கும் இரக்கம் காட்டுவதை அரசியல் சட்டத்தின் கடமையாகச் (பிரிவு 15எ) சொல்லப்பட்டுள்ளது. இந்தக் கைதியைப் பொறுத்த வரை 20 ஆண்டு காலச் சிறைவாசம் என்பதே துன்பம் தரக்கூடிய, கண்ணீர் விடக்கூடிய மன வேதனையை ஏற்படுத்த வல்லது என்று அதில் வி.ஆர்.கிருஷ்ணய்யர் சொல்லி இருப்பார்.



பேரறிவாளன் குற்றமற்றவர் என்று பிரதமரிடம் சொன்னேன். 9 வோல்ட் பற்றரியை வாங்கி சிவராசனிடம் கொடுத்தார் என்பது அவர் மீதான குற்றச்சாட்டு. 9 வோல்ட் பற்றரி, பொம்மைகளை இயக்குவதற்குப் பயன்படக்கூடியது. இது எதற்காகப் பயன்படப்போகிறது என்று தெரியாமல் பற்றரி வாங்கியது மரண தண்டனை வழங்குவதற்கான வலுவான காரணமாகக் கருத முடியாது. என்றும் சொன்னேன்.



நான் சொன்னதை கவனமாகக் கேட்ட பிரதமர், 'இதை மத்திய உள்துறை அமைச்சருக்குப் பரிந்துரை செய்கிறேன்.’ என்று சொன்னார். 'நீங்களும் பரிந்துரை செய்யுங்கள். நானும் அவரைச் சந்திக்கிறேன்.’ என்று சொல்லிவிட்டு வெளியே வந்தேன்!



உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் என்ன சொன்னார்?



பிரதமரிடம் கொடுத்த அதே கடிதத்தை ப.சிதம்பரம் பெயருக்குத் தயாரித்துக்கொண்டு, அன்றைய தினமே அவரைச் சந்தித்தேன்.



நீங்கள் கேட்பது பேரறிவாளனுக்கு மட்டும்தானா? என்று அவர் கேட்டார். 'மூன்று பேருக்காகவும்தான்’ என்றேன். 'ஒருவருக்கு குறைக்கப்பட்டால், மற்றவர்களுக்கும் அது பொருந்தும்தானே’ என்ற அமைச்சர், 'உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்திய மரண தண்டனைத் தீர்ப்பில் குறை கண்டுபிடித்து, நாம் தண்டனையைக் குறைக்க முடியாது.



எனவே, கருணை அடிப்படையில்தான் எந்த முடிவும் எடுக்க முடியும்.’ என்று சொன்னார். நம்பிக்கையுடன்தான் நான் வெளியில் வந்தேன்.



அடுத்த சில நாட்களிலேயே கருணை மனு நிராகரிக்கப்பட இருப்பது உள்துறை அமைச்சருக்குத் தெரியாதா? 'என் கையைவிட்டுப் போய்விட்டது’ என்றோ, 'நான் என்ன செய்ய முடியும்?’ என்றோ சிதம்பரம் சொல்லி இருக்கலாம். ஏமாற்றப்பட்டது நான் மட்டும் அல்ல... ஓர் இனம் என்பதை இன்றைய மத்திய அரசு உணர வேண்டும்!



இத்தனை ஆண்டுகள் கிடப்பில் போட்டுவிட்டு, இப்போது திடீரென முடிவெடுக்க என்ன காரணம்?



இலங்கையில் ராஜபக்ஷ நடத்திய நாசகாரப் படுகொலைகளும்... அதற்கு இந்தியா நிதி உதவியும், இராணுவ உதவியும், தகவல் பரிமாற்ற உதவியும் செய்த விவகாரங்கள் இன்று உலக நாடுகள் முழுவதும் பரவிவிட்டன.



தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழனின் மனச்சாட்சியையும் இது உசுப்பிவிட்டது. அகில இந்தியத் தலைவர்கள் இது பற்றி பேச ஆரம்பித்துள்ளனர்.



எங்களது டெல்லி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பி.ஜே.பி. தலைவர்களில் ஒருவரான யஸ்வந்த் சின்ஹா, 'வைகோ படகுகளை ஏற்பாடு செய்யட்டும். நாம் அனைவரும் இலங்கையை நோக்கிச் செல்வோம்’ என்றார்.



உ.பி.யிலும் பீகாரிலும் இதுபற்றி பொதுக் கூட்டம் போடும்போது வைகோ வந்து பேச வேண்டும் என்று ராம்விலாஸ் பஸ்வான் அழைப்பு விடுத்திருக்கிறார்.



ஈழப் போர்க் கொடுமைகள் இந்தியாவின் முக்கிய சனல்களில் ஒளிபரப்பப்படுகின்றன. இவை அனைத்தையும் தடுப்பதற்கு காங்கிரஸ் அரசாங்கம் எடுக்கும் தற்காப்புக் கேடயம்தான் ஸ்ரீபெரும்புதூர் சம்பவம்.



அதற்காக, ராஜீவ் கொலையை உங்களால் நியாயப்படுத்த முடியுமா?



நான் ராஜீவ் கொலையை நியாயப்படுத்தவில்லை. அதற்காக, கொலையில் சம்பந்தப்படாத அப்பாவிகளையும் சதியில் உள்ளடக்கினால், அதைக் கண்டிக்க உரிமை இல்லையா? இந்த வழக்கைக் காரணமாகக் காட்டி, ஈழத் தமிழன் அனுபவித்த கொடுமையை, கொலையை, கற்பழிப்பைப் பற்றி பேசுவதைத் தடுக்க நினைப்பதைத்தான் கண்டிக்கிறேன்.



ராஜீவ் வழக்கில் ஐந்து நாட்கள் என்னையும் விசாரித்தார்கள். இந்த வழக்கின் 250-வது சாட்சியாக என்னையும் இணைத்தார்கள். 'இது முற்றிலும் ஜோடிக்கப்பட்ட பொய் வழக்கு என்று பூந்தமல்லி தனி நீதிமன்றத்திலேயே சொன்னவன் நான். இன்றும் அது ஆவணங்களில் இருக்கிறது.



மத்திய அரசாங்கம், இலங்கைக்கு நிதி உதவி, ஆயுத உதவி மற்றும் இராணுவத் தொடர்புள்ள அனைத்து தளவாடங்களையும் கொடுத்துள்ளது. எனவே இலங்கையில் நடக்கும் இனப் படுகொலைக்கு பொறுப்பாளியாகி, நீங்கள் பதில் சொல்ல வேண்டும்’ என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் நேரடியாகவே சொல்லி இருக்கிறேன். இதற்கு எத்தனையோ கடித ஆதாரங்கள் இருக்கின்றன.



எனவே, ஸ்ரீபெரும்புதூர் சம்பவத்தைக் காரணமாகக் காட்டி எங்கள் வாயைப் பூட்ட முடியாது. நாங்கள் இதுவரை பேசாமல் இருந்த வேறு விஷயங்களை இனி பேசப்போகிறோம்!



எதைச் சொல்கிறீர்கள்?



நான் காங்கிரஸ் அரசாங்கத்துக்குச் சொல்வதெல்லாம்... மூன்று உயிர்களை தூக்கு மேடைக்கு அனுப்ப வேண்டும் என்று நினைத்தால்... இந்திய அமைதிப் படையை அனுப்பி இலங்கையில் நடத்திய அட்டூழியங்களைத் தமிழ் நாட்டின் தெருத் தெருவாய்ப் போய் நாங்கள் இனி சொல்வோம்.



உண்ணாவிரதம் இருந்த திலீபனைச் சாகடித்தது யார்? சென்னையில் தங்களது அலுவலகத்தைக் காலி செய்துவிட்டு அமைதியாகத் திரும்பிய குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 பேர் சாவுக்கு யார் காரணம்?



சமாதானத் தூதனாக வந்த ஜானியைக் கொன்றது யார்? பிரபாகரனை பேச்சுவார்த்தைக்கு வரவைத்து சுட்டுக் கொல்ல உத்தரவிட்டது யார்?



இந்திய அமைதிப் படையால் எத்தனை வீடுகள் தகர்க்கப்பட்டன? எத்தனை அப்பாவிகள் கொல்லப்பட்டனர்? எவ்வளவு தமிழ்ப் பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள் என்பதை எல்லாம் சொல்வேன்.



இந்தியன் பீஸ் கீப்பிங் ஃபோர்ஸ்... இந்தியன் பீஸ் கில்லிங் ஃபோர்ஸாக எப்படி எல்லாம் செயல் பட்டது என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரங்கள் இருக்கின்றன. 1987-89 காலகட்டத்தில் ராஜீவ் செய்த காரியங்கள் இன்றைய இளைய தலைமுறைகளுக்குத் தெரியாது. அதை இனி தெரியப்படுத்துவோம்!



இந்த விஷயத்தில் ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும்?



இந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற 26 பேரின் விடுதலைக்காக தொடக்க காலத்தில் இருந்தே இயக்கம் நடத்தியவர் அண்ணன் பழ.நெடுமாறன். அவருடன் நானும் தோழர் தியாகு போன்றவர்களும் 1999-ம் ஆண்டு ஜனாதிபதி கே.ஆர்.நாராயணனைச் சந்தித்து மனு கொடுத்தோம்.



பிரதமர் வாஜ்பாயை சந்தித்தோம். உள்துறை அமைச்சர் அத்வானியைத் தொடர்ந்து சட்ட அமைச்சர் ராம் ஜெத்மலானியைச் சந்தித்தோம்.



உங்கள் மாநிலத்தின் முதலமைச்சர் நினைத்தால், செய்யலாம். அமைச்சரவை கூடி ஒரு முடிவெடுத்து மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்யலாம் என்றார். ஆனால், அன்றைய முதல்வர் கலைஞர் அதில் எந்த முடிவும் எடுக்கவில்லை. அதனால், கவர்னர் பாத்திமா பீவி கருணை மனுவை நிராகரித்தார்.



இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் பழ.நெடுமாறன் வழக்கு போட, அப்போது வழக்கறிஞராகவும் இப்போது நீதியரசராகவும் இருக்கும் கே.சந்துரு ஆஜரானார். மனுவை விசாரித்த நீதியரசர் கோவிந்தராஜன், 'மந்திரி சபையின் கருத்துப்படிதான் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமே தவிர, தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது.’ என்று பாத்திமா பீவியின் உத்தரவை ரத்து செய்தார்.



இந்த சூழ்நிலையைப் புரிந்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து, முதல்வர் சில முடிவுகளை எடுக்க வேண்டும். மத்திய அரசுதான் இறுதி முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்கிறது. ஆனால், மாநில முதல்வர் ஓர் அழுத்தம் தரலாம்.



தமிழீழத்தைப் பிரிப்பதுபோல, தமிழ் நாட்டையும் பிரிக்கப் போகிறார்கள் என்ற பொய்யைச் சொல்லி, விடுதலைப் புலிகள் இயக்கம் இங்கு தடை செய்யப்பட்டது.



ராஜீவ் கொலையைச் சொல்லி, ஈழத்தில் நடந்த இனக் கொலையை மறைக்க முயற்சிக்கிறார்கள்.



தமிழர் எழுச்சியை அடக்க இந்த மூன்று உயிர்களை பலியிட்டால், அதைத் தொடர்ந்து நடக்கும் விளைவுகளால், இந்தியாவின் ஒருமைப்பாட்டைத் தூக்கிலிட்டு விடாதீர்கள் என்று எச்சரிப்பதைத் தவிர வேறு வழி இல்லை!

குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கப்படக்கூடாது!: ஜெயலலிதாவுக்கு அழுத்தம்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்ட மூவரையும் தூக்கிலிடக்கூடாது என்று தமிழக முதலமைச்சருக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் உள்ள கட்சிகள் இந்த அழுத்தங்கள் கொடுத்து வருகின்றன.



இந்த மூவரும் விண்ணப்பித்திருந்த கருணை மனுக்களை அண்மையில் இந்திய ஜனாதிபதி பிரதீபா பட்டேல் நிராகரித்திருந்தார். இதனையடுத்து குறித்த மூவரையும் தூக்கிலிட ஆளுநரின் உத்தரவு எதிர்ப்பார்க்கப்படுவதாக தமிழக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.



தமிழக சட்டசபை அமர்வு நேற்று இடம்பெற்ற போது இது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.



இந்தநிலையில் தூக்குத்தண்டனை விதிக்கப்படவுள்ள பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோரின் மன்னிப்பு தொடர்பில் தமிழக முதல்வர் தலையிடவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் ராமதாஸ் கோரியுள்ளார்.



இதனை தவிர குறித்த மூவர் மீதான தண்டனையை மத்திய அரசாங்கம் ரத்துச்செய்யவேண்டும் என்று தமிழக சட்டசபையில் திர்மானம் நிறைவேற்றப்படவேண்டு;ம் என்று பெரியார் திராவிட முன்னேற்றக்கழகம் மற்றும் நாம் தமிழர் ஆகிய அமைப்புகள் ஜெயலலிதாவிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளன.



ஏற்கனவே 1974 ஆம் ஆண்டு கவிஞர் கலியப்பெருமாள் வழக்கில் கேரளாவை சேர்;ந்த பாலன் என்பவருக்கு அந்த மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் காரணமாக மன்னிப்பு வழங்கப்பட்டமையை பெரியார் திராவிட கட்சியின் தலைவர் கொளத்தூர் மணி சுட்டிக்காட்டியுள்ளார்.



இதேவேளை,பெங்களுரை சேர்ந்த அரசியல் விஞ்ஞானத்துறை பேராசிரியர் போல் நியூமன், தமது தீர்ப்புப்படி தூக்குத்தண்டனை பெற்றவர்கள் மூவரும் அப்பாவிகள் என்று குறிப்பிட்டுள்ளார்.



இடுப்புபட்டியில் பொருத்தப்பட்ட குண்டுக்காக இரண்டு பற்றரிகளை பெற்றுக்கொடுத்த அப்போது 19 வயதான பேரறிவாளனுக்கு தூக்கு தண்டனை வழங்குவது எவ்வாறு நியாயப்படும் என்று நாம் தமிழர் அமைப்பின் ஏற்பாட்டாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.



அத்துடன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட மூவருக்கும் தண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்று தமிழக முன்னாள் முதல்வர் முத்துவேல் கருணாநிதி கோரியுள்ளார்.

சீமானை கைது செய்ய கோரி இளைஞர் காங்கிரஸ் அணியினர் ஆர்ப்பாட்டம்



சீமானை கைது செய்ய வலியுறுத்தி இளைஞர் காங்கிரசார் டி.ஜி.பி அலுவலகம் முன்பு நேற்று திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி நடத்தும் பொதுக்கூட்டத்துக்கு தடை விதிக்கவும், சீமானை கைது செய்ய வலியுறுத்தியும் இளைஞர் காங்கிரசார் நேற்று டி.ஜி.பி அலுவலகம் அருகே திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது சீமானுக்கு எதிராக இளைஞர் காங்கிரசார் கோஷமிட்டனர். இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் தலைமையில் பொலிசார் வந்து போராட்டம் நடத்த உங்களுக்கு அனுமதி தரப்படவில்லை. கைது செய்யப் போவதாக கூறினார்.



இதனால் பொலிசாருடன் இளைஞர் காங்கிரசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் டி.ஜி.பி.யிடம் மனு கொடுக்க 5 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் யுவராஜ், ராம்குமார், ஆனந்த், அப்பாஸ், விஜய் இளஞ்செழியன் ஆகியோர் டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தனர்.



பின்னர் யுவராஜ் கூறியதாவது: சீமானை கைது செய்ய கோரி ஏற்கனவே பொலிஸ் கமிஷனரிடம் மனு கொடுத்தோம். இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் தலைவர்களையும், தொண்டர்களையும் சீமான் தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறார்.



ராஜீவ் காந்தி கொலையில் 3 பேருக்கு தூக்கு தண்டனை உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு ஆதரவாக பேசி வரும் சீமான் நடத்தும் பொது கூட்டங்களுக்கு அனுமதி தரக்கூடாது என்று டி.ஜி.பி.யிடம் மனு கொடுத்தோம். அவரும் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். அப்படி எடுக்கவில்லை என்றால் சீமானுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.



இலங்கையில் ஆனந்தவிகடன் கட்டுரைக்கு தடை



தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் ஆனந்த விகடன் வார இதழின் கட்டுரைக்கு இலங்கை அரசு தடை விதித்துள்ளது.



ஆனந்த விகடன் வார இதழில் 'வீழ்வேனென நினைத்தாயோ' என்ற தொடர், இந்திய பொதுவுடமைக் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான தோழர் சி. மகேந்திரன் அவர்களால் எழுதப்படுகின்றது. இதன் முதல் பகுதி 12.08.2011 நாள் இதழில் வெளியாகியது.



இத்தொடர் ஈழத்தமிழ் மக்களின் துயரங்களையும், சமகால நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.



இத்தொடர் சி.மகேந்திரன் அவர்களால் எழுதபட்ட ஒரே காரணத்திற்காக இலங்கை அரசால் தடைசெய்யபட்டு இவ்விதழின் பக்கம் 30-34 வரையிலான 5 பக்கங்கள் நீக்கப்பட்டே இலங்கையில் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.



அரசாங்கத்தினால் தடைசெய்யப்பட்ட அப்பகுதி இங்கே தரப்படுகின்றது.



உயிரை விலையாகக் கொடுப்பது எளிதானதா என்ன?



இதற்கு இணை என எதுவுமே இல்லை. தன் சொந்த மண்ணைவிட்டுப் பிரிய மாட்டேன் என்று, வைராக்கியமாக அந்த மண்ணுக்குள்ளே கடைசிக் கணம் வரை போரிட்டு நின்று மூச்சை அடக்கி, உயிரை நிறுத்திக்கொள்கிறது மாவீரம்.



மண் மீதான உரிமைக்காக, உயிரையும் விலையாகக் கொடுப்பேன் என்பவர்களுக்கு மட்டுமே, இந்த மாவீரம் சாத்தியம்!



இதற்கு உலகில் எத்தனையோ முன் உதாரணங்கள் உண்டு என்றாலும், இந்த 21-ம் நூற்றாண்டில் மண்ணுக்காக உயிர்ஆயுதம் ஏந்திய வீரர் நிலம் முள்ளி வாய்க் கால் என்பதில் உடல் சிலிர்க்கிறது.



இலங்கையின் கடற்கரைக் கிராமங்களில் ஒன்றாக இருந்த முள்ளி வாய்க்கால், 2008- மே 17-க்குப் பின், ஒரு தனித்த வரலாறாக நிமிர்ந்து நிற்கிறது.



அதன் புவியியல் இருப்பை அறிந்துகொள்வதில் அனைவரும் ஆர்வம் காட்டுகிறார்கள். இன்றும் ராணுவத்தின் கண்காணிப்பில் உள்ள அந்த நிலம், மிகவும் எழில் நிறைந்தது.



கிளிநொச்சியில் இருந்து ஒருவர் முள்ளி வாய்க்கால் செல்ல வேண்டும் எனில், இதற்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள பரந்தன் சந்திக்கு முதலில் செல்ல வேண்டும்.



முல்லைத் தீவுக்கும் இந்த பரந்தன் சந்திக்கும் இடையில்நெடுஞ் சாலை ஒன்று உள்ளது. இந்த நெடுஞ்சாலைக்கு ஏ 35 என்று பெயர்.



பரந்தன் சந்தியில் தொடங்கி, முரசு மோட்டை, தரும புரம், விஸ்வமடு, மூங்கிலாறு, உடையார் கட்டு, புதுக் குடியிருப்பு என்று நீண்டு செல்லும் இந்தச் சாலையின் இரு மருங்கும் தொன்மையான பல ஊர்கள் உள்ளன. இதில் புதுக் குடியிருப்பு, முக்கியமான நகரம்.



புதுக் குடியிருப்பைத் தாண்டியவுடன், புது உலகம் ஒன்று தோற்றம் தரும். அழகிய நெய்தல் நிலம் அது. கடலும் கடல் சார்ந்த வாழ்க்கையும் இங்கே இருந்தே ஆரம்பமாகிறது.



இன்று உலகமே அறிந்துவைத்துள்ள, மழைக் கால ஆறுகளின் நன்னீர்த் தொகுப்பான நந்திக் கடல் இங்கே தான் இருக்கிறது.



நந்திக் கடல் ஒரு கடல் அல்ல. உப்பற்ற நீரைச் சேமித்து வைத்துக்கொள்ளும் காயல் அது. நத்தைகள் மிகுந்த கடல் என்பதால்தான், நந்திக் கடல் என்ப தாகவும் சிலர் விளக்கம் தருகிறார்கள்

கிறீஸ் மனிதர்கள் கோத்தபாயவின் இராணுவப் புலனாய்வுப் பிரிவினரே.மங்கள குற்றச்சாட்டு



நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கிறீஸ் மர்ம மனித அச்சுறுத்தல், பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையில், இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தொடர்பாடல் பிரிவுத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.கிறீஸ் மனிதன் என்ற மாயை ஏற்படுத்தி நாட்டில் மீண்டும் பதற்றமான சூழலை ஏற்படுத்துவதற்கு மஹிந்த ராஜபக்ஷ அரசு தயாராகி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.



நாட்டில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி, அதனூடாக சில அரசியல் கட்சிகளைத் தடை செய்யும் முயற்சிகளையும் அரசு மேற்கொண்டுள்ளது என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.



மாத்தறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே மங்கள சமரவீர மேற்கண்டவாறு தெரிவித்தார். இதுகுறித்து மேலும் தெரிவித்தவை வருமாறு



கடந்த காலங்களில் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டுவந்த வெள்ளை வான் அச்சுறுத்தல் நடவடிக்கையை முன்னெடுத்த தரப்பினரே தற்போது இந்த கிறீஸ் மர்ம மனித செயற்றிட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றனர் என பல தகவல்கள் கிடைத்துள்ளன.



சிக்கியவர்களில் பலர் இராணுவச் சிப்பாய்கள்



கிறீஸ் மர்ம மனிதர்களாக நடமாடிய நபர்கள், பிரதேச மக்களின் கைகளில் சிக்கிய பின்னர் அவர்களில் ஏராளமானோர் இராணுவச் சிப்பாய்கள் எனத் தெரியவந்துள்ளது.



அத்துடன், இவ்வாறு பிடிக்கப்பட்டவர்களில் சிலர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், அவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி விடுதலையாகியுள்ளனர்.



கிறீஸ் மர்ம மனித பதற்றத்தை ஏற்படுத்தி கிராம மட்டத்தில் இராணுவத்தை நிலைகொள்ளச் செய்து, இராணுவ நிர்வாகத்திற்குத் தேவையான புறச்சூழலை பாதுகாப்புச் செயலாளர் ஏற்படுத்தி வருகிறார்.



கிறீஸ் மர்ம மனிதர்களிடமிருந்து மக்களுக்குப் பாதுகாப்பு வழங்கும் போர்வையில், கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புக் குழுக்களை ஸ்தாபித்து சுமார் 5 ஆயிரம் இராணுவத்தினர் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.



அத்துடன் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது தலா ஒரு விசேட அதிரடிப்படை முகாமை அமைப்பதற்கும் இந்த கிறீஸ் மர்ம மனித செயற்றிட்டத்தின் ஊடாக பாதுகாப்புச் செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.



இப்படி மங்கள சமரவீர தெரிவித்தார்.



மர்ம மனிதனுக்குப் பயந்து ஓடிய பெண் ரயிலில் மோதி மரணம் .வந்தாறுமூலையில் சம்பவம்



ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலை பகுதியில் மர்மமனிதன் ஒருவன் ஊடுருவிய தகவல் ஒன்றினையடுத்து பாதுகாப்புத் தேடி ஓடிய பெண்மணி ஒருவர் மீது புகையிரத வண்டி மோதியதில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். வந்தாறுமூலை பாலாச்சோலை பேச்சிக்கிராமம் பகுதியைச் சேர்ந்த எட்டுப்பிள்ளைகளின் தாயான ஆறுமுகம் பாக்கியம் (42வயது) என்றழைக்கப்படும் பெண் மணியே இச்சம்பவத்தில் பலியானவராவார்.



நேற்று முன்தினம் இரவு மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கிப் புறப்பட்டுச் சென்ற புகையிரத வண்டியே இவரில் மோதுண்டுள்ளது. மேற்படி பகுதியில் மர்மமனிதன் ஊடுருவியுள்ளான் என்ற கதை பரவியுள்ளதும் தனது பிள்ளைகளைக் கூட்டிக் கொண்டு பாதுகாப்புத் தேடி இப்பெண்மணி புகையிரத வண்டி வருகின்ற சத்தைத்தையும் கவனியாது ஓடியுள்ளார். இதனால் இவர் பரிதாபகரமான முறையில் உயிரிழந்துள்ளார்.



இவரின் சடலம் மீட்கப்பட்டு வாழைச்சேனை மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவத்தினைத் தொடர்ந்து ஸ்தலத்திற்கு விரைந்த ஏறாவூர் பொலிஸார் சடலத்தினை பார்வையிட்டுள்ளதுடன் விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.



மீண்டும் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்திய நேரடித் தலையீடு!தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்கு அழைப்பு



இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மீண்டும் இந்திய நேரடித் தலையீடுகள் ஏற்படத் தொடங்கி உள்ளன. இதன் முதற்கட்டமாகத் தீர்வு தொடர்பில் பேசுவதற்கு வருமாறு இலங்கையில் உள்ள தமிழ்க் கட்சிகளுக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இலங்கை அரசுடன் ஒரு தீர்வை எட்டுவதற்கு முன்பாகத் தமிழ்க் கட்சிகளிடம் ஒருங்கிணைந்த கருத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்தக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சென்னையின் இராஜதந்திர தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.



தமிழ்க் கட்சிகள் இந்தியாவுக்கு அழைக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்திய அரசியல் தலைவர்களுடனான ஒரு சந்திப்பாக இந்தக் கூட்டம் இருக்கும் என்றார். இலங்கை அரசு மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள், போர் முடிந்த பின்னரும் தமிழருக்கு தீர்வை முன்வைக்காமல் இழுத்தடிக்கும் கொழும்பின் போக்கு என்பவற்றால் இந்தியாவின் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எதிர்க் கட்சிகளால் நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.



அதேவேளை, இலங்கை அரசு சீனா பக்கம் அளவுக்கு அதிகமாகச் சாய்கிறது என்று புதுடில்லி நம்புவதால், 80களைப் போன்று அது மீண்டும் இனப்பிரச்சினை விடயத்தில் நேரடித் தலையீடுகளை மேற்கொள்ளத் தயாராகிறது என்று சென்னையில் உள்ள இராஜதந்திரி ஒருவர் தெரிவித்தார்.



இதன் முதற்கட்டமாக தமிழ்க் கட்சிகளுக்கு இடையில் தீர்வு தொடர்பான கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்த புதுடில்லி விரும்புகிறது என்றார் அவர். அதற்காகவே தமிழ்க் கட்சிகள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.'தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் வருமாறு இந்தியா அழைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தமிழக நாடாளுமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் இது தொடர்பிலான அழைப்பை அனுப்பி உள்ளார்'' என்று உதயனுக்குத் தெரிவித்தார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.



எதிர்வரும் 23, 24 ஆகிய இரு தினங்கள் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் கலந்துகொள்ள, தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈபிஆர்எல்எவ்) சுரேஷ் மற்றும் பத்மநாபா அணிகள், தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிமீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்), ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி (ஈஎன்டிஎல்எவ்) ஆகிய கட்சிகளுக்கு அழைப்புக்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்சியில் இருந்தும் இரு பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். இலங்கைத் தமிழ்க் காங்கிரஸில் இருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை அழைப்பதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் உத்தியோகபூர்வ அழைப்பு இன்னும் அனுப்பப்படவில்லை.



தமிழரசுக் கட்சியில் இருந்து மாவை சேனாதிராசா மற்றும் எம்.ஏ.சுமந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியில் இருந்து ஆனந்தசங்கரி, ஈபிஆர்எல்எவ் வரதர் அணியில் இருந்து வரதராஜப் பெருமாள் மற்றும் சுகு, சுரேஷ் அணியில் இருந்து சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் ரெலோவில் இருந்து செல்வம் அடைக்கலநாதன், புளொட் சித்தார்த்தன், ஈஎன்டிஎல்எவ் பரந்தன் ராஜன் ஆகியோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பார்கள் என்று தெரியவருகிறது. முதல்நாள் கூட்டத்தில் தீர்வு தொடர்பில் தமிழ்க் கட்சிகளின் கருத்துக்களை இந்திய அரச பிரதிநிதிகள் கேட்டறிவார்கள் என்று சொல்லப்பட்டிருக்கிறது.



முதல்நாள் அமர்வில் தற்போதைய அரசியல் நிலைவரம் மற்றும் தீர்வு தொடர்பில் எமது கருத்துக்களைத் தெரிவிக்க முடியும் என்று நினைக்கிறோம். அனைத்துக் கட்சியினரும் இணக்கப்பாடான கருத்துக்களைத் தெரிவிப்பது நன்மையளிக்கக்கூடும். இரண்டாம் நாள் அமர்வில் இந்தியாவில் உள்ள முக்கிய கட்சிகளின் அரசியல் தலைவர்களைச் சந்தித்துப் பேச வாய்ப்புக் கிடைக்கும் என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.



இந்தியா செல்வதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் அனைத்துக்கும் இடையில் தீர்வு தொடர்பான பொது இணக்கப்பாடு ஒன்றை எட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. உள்ளூராட்சி சபைகளில் வெற்றிபெற்ற தலைவர், உபதலைவர், உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் நடைபெறும் 20ஆம் திகதி, கட்சித் தலைவர்கள் இது பற்றிக் கலந்துரையாடுவார்கள் என்றும் தெரிகிறது. இந்தியா செல்வதற்கு முன்னர் பொது இணக்கப்பாடு பற்றிய புர்ந்துணர்வு தமிழ்க் கட்சிகளின் தலைவர்களின் மத்தியில் எட்டப்படுவது அவசியம் என்று கருதப்படுகிறது.



சண்டையெல்லாம் இல்லை... நல்லமாதிரிதான் பிரிஞ்சோம்! - அமலா பால் விளக்கம்


ஐஸ்வர்யா தனுஷுடன் தனக்கு சண்டை எதுவும் இல்லை என்றும் சமாதானமாகவே பிரிந்துவிட்டதாகவும் அமலா பால் தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் '3' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஒப்பந்தமான அமலா, கால்ஷீட் சொதப்பலால் படத்திலிருந்து நீக்கப்பட்டார்.

இப்போது அவருக்குப் பதில் புதிதாக ஒரு ஹீரோயினை ஒப்பந்தம் செய்ய தேடி வருகின்றனர் ஐஸ்வர்யாவும் தனுஷும்.

இதற்கிடையே, பெரிய படத்திலிருந்து அமலா நீக்கப்பட்டதால், அவரை ஒப்பந்தம் செய்வது குறித்து தயாரிப்பாளர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழில் அடுத்து முப்பொழுதும் உன் கற்பனைகள் மட்டுமே அமலா பால் கைவசம் உள்ளது. மீதியெல்லாம் தெலுங்குப் படங்கள்தான். இன்னொன்று அறிமுகமான தமிழ் சினிமாவை விட, தெலுங்குப் படங்களில் நடிப்பதையே அவர் கவுரவமாகக் கருதுகிறார்.

சமீபத்தில் தனது முதல் தெலுங்குப் படத்துக்காக படப்பிடிப்புக்கு சென்று வந்த அமலா, தெலுங்கில் நடிப்பது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக பேட்டி கொடுத்திருந்தார். மேலும் மேலும் அதிக தெலுங்குப் படங்களில் நடிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

தெலுங்குப் படங்களுக்காகத்தான் தமிழ்ப் படங்களை புறக்கணிக்கிறீர்களா என்று கேட்டதற்கு, "தெலுங்கில் பெரிய வாய்ப்புகள் வருகின்றன. எனவே அவற்றுக்கு முன்னுரிமை தருகிறேன். '3' படத்தில் நடிக்க முடியாமல் போனதற்கு காரணம், கால்ஷீட் இல்லாததுதான். நான் அந்தப்படத்துக்கு அக்டோபரில் தேதி தருவதாகச் சொன்னேன். ஆனால் அவர்கள் செப்டம்பரில் கேட்டார்கள். எனவே அவர்களிடம் நல்ல முறையில் சொல்லிவிட்டே விலகினேன்," என்றார்.

ரஜினிக்கு மருத்துவ பரிசோதனை... பூரண குணம் அடைந்ததாக மருத்துவர்கள் அறிவிப்பு!


சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து வந்துள்ள ரஜினியை, முதல் முறையாக மருத்துவர்கள் குழு மீண்டும் பரிசோதித்துப் பார்த்தது. ரஜினி மிகவும் நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை பூரணமாக குணமடைந்துவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

ரஜினிக்கு கடந்த ஏப்ரல் 29-ந் தேதி 'ராணா' படப்பிடிப்பில் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து இசபெல்லா மற்றும் ராமச்சந்திரா மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

சிறுநீரக பாதிப்பு இருந்ததால் உயர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றார். அங்குள்ள ஆஸ்பத்திரியில் ரஜினிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து அவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. பூரண குணமடைந்து கடந்த மாதம் 13-ந் தேதி சென்னை திரும்பினார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் ஐஸ்வர்யா வீடு மற்றும் கேளம்பாக்கம் பண்ணை இல்லத்தில் தங்கி தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். இதுவரை யாரையும் அவர் சந்திக்கவில்லை.

இதற்கிடையில் ரஜினி உடல் நிலையை மீண்டும் பரிசேதித்தனர் மருத்துவர்கள். டாக்டர்கள் ரஜினி வீட்டுக்கு சென்று முழு உடல் பரிசோதனை செய்தனர். அவர் பூரண நலமடைந்து ஆரோக்கியத்துடன் இருப்பதாக டாக்டர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர்.

அக்டோபர் மாதம் ராணா படப்பிடிப்பை துவங்க திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்னதாக அடுத்த மாதம் இறுதியில் இன்னொரு முறை ரஜினி உடல் பரிசோதனை செய்து கொள்வார் என கூறப்படுகிறது.

Labels

ஈழம் (667) Tamizhagam (495) உலகம் (369) இலங்கை (314) Special News (299) சினிமா (209) தமிழ்நாடு (169) செய்தி (156) World News (146) விடுதலை (123) Sri Lanka (118) இந்தியா (111) Articles (95) Pulam Peyar Nigazhvugal (64) செய்திகள் (57) Raasi Palan (45) கும்பல் (41) வன்னி (41) தமிழகம் (38) kumbal (34) India (33) Memories (26) சுவாரசியம் (26) அனுபவம் (21) அரசியல் (21) தகாதசெயல் (20) ஏனைய செய்திகள் (18) சிறப்புச் செய்திகள் (18) ஆய்வு (17) Kollywood News (15) கட்டுரைகள் (15) தகாத செயல் (15) Poems (13) sasikala (12) சினிமா/Cinema News (12) Hollywood News (9) உலகம்/world News (9) கட்டுரை (9) சசிகலா (9) சீமான் (9) வணிகம்/Business News (9) விளையாட்டு (9) jayalalitha (8) seeman (8) குறுந்தொடர் (8) கோடு (8) ஜெயலலிதா (8) யாழ் (8) Column (7) மொக்கை (7) Bollywood News (6) Dinamani (6) ameer (6) அமீர் (6) ு இலங்கை News (6) ு தமிழகம் (6) Dinakaran (5) GADDAFI (5) Thamarai (5) dhivakaran (5) kanimozhi (5) சேரன் (5) தாமரை (5) தினமணி (5) தியாகு (5) திவாகரன் (5) பா.ம.க. (5) பாக்ஸ் ஆஃபிஸ் (5) விளையாட்டு/Sports News (5) RAMAJAYAM (4) TRICHY MURDER (4) இலங்கை/Eelam (4) இளையராஜா (4) கனிமொழி (4) காடுவெட்டி குரு (4) காமெடி (4) தினகரன் (4) தினத்தந்தி (4) தொழிநுட்பம் (4) நாம் தமிழர் (4) பெப்சி (4) விமர்சனம் (4) Celebrity Love story (3) ilayaraja (3) karunanithi (3) ravanan (3) video (3) இசை (3) இலக்கியம் (3) கருணாநிதி (3) கவிதை (3) கொளத்தூர் மணி (3) கோபால் (3) நக்கீரன் (3) நக்கீரன் கோபால் (3) நட்சத்திர பேட்டி (3) படைப்பு (3) ராஜிவ் (3) ராவணன் (3) ஸ்டாலின் (3) 08th July 2011 (2) Daily thanthi (2) K.N.NEHRU (2) Power Plant (2) SRI LANKA NEWS (2) bharathiraja (2) cheran letter (2) cinema (2) comedy (2) images (2) jayalaஜெயலலிதா (2) kumbal.com (2) mp3 (2) music (2) ranjitha (2) sachin (2) songs (2) stalin (2) ஃபேஸ்புக் (2) அன்புமணி (2) ஆ.ராசா (2) இந்தியா/India News (2) இளைய தளபதி விஜய் (2) கிழக்கு (2) கும்பல்litha (2) சச்சின் (2) ச்சில்லர்ஸ் பார்ட்டி 2011 (2) ஜி.கே.மணி (2) தமிழ் படம் (2) தியேட்டர் டைம்ஸ் (2) நக்கீரன் முடக்கம் (2) நேரு (2) பசுபதி பாண்டியன் (2) படங்களின் முன்னோட்டம் (2) படுகொலையின் எதிரொலி (2) பாகம் 2 (2) பாடல்கள் (2) பாரதிராஜா (2) மகாதேவன் (2) மகேஷ் பெரியசாமி (2) மத்திய கிழக்கு (2) மர்ம மனிதன் (2) ராமதாஸ் (2) ராமானுஜம் ஐ.பி.எஸ் (2) ழான்றே - குணசித்திரம் (2) வழக்கு எண் 18/9 (2) வாராந்திர தொடர் (2) விக்கிலீக்ஸ் (2) வீடியோ (2) ஹிந்தி படம் (2) 'யார் அந்த உமர் முக்தர்? (1) .மொக்கை (1) 100 (1) 10th Feb 2012 (1) 2gspectrum (1) A.RAJA (1) Actress in saree photos (1) Amalraj IPS (1) CHARGE (1) DMK (1) Dhanush's Sachin Anthem (1) Elavarasi (1) Hello JaiHind (1) INDIA NEWS (1) Journey 2: The Mysterious Island (1) KBC (1) LATEST UPDATES (1) M.Natarajan (1) M.Natarajan arest (1) Prabhakaran Anthathi (1) Pudukkottai (1) RBI (1) Rajabagsha (1) Richa-Gangopadhyay Sari Stills (1) SMS (1) Sagayam IAS (1) Santhosh sivan (1) Tamil Eelam (1) Tamilnadu police (1) Thiyagu (1) Transfer (1) Umashangar IAS (1) ambedkar (1) amza (1) animation (1) assembly (1) azhagiri (1) boost (1) cbfcindia. (1) censor (1) certificate (1) channel (1) cheeran (1) coins (1) commission (1) controversial (1) court (1) crorepati (1) cuddalore (1) davidson devasivaatham (1) director ameer (1) discovery (1) dog (1) download (1) earthquake (1) flash games (1) free download (1) hello jai hind (1) hello jaihind songs (1) island fest (1) jaya (1) jeeva (1) kaduvetti guru (1) kalanithimaran (1) karnataka (1) koodankulam (1) m.d.m.k. (1) madurai athinam (1) mamta (1) marathi movie (1) miskin (1) mudhalvar mahatma songs (1) mugamoodi (1) mugamudi (1) mullai periyar (1) nathyanandha (1) nithyandha (1) nuclear power (1) offline (1) pon manikkavel (1) pongal wishes (1) porn film (1) power star srinivasan (1) prasad (1) rajnikanth (1) rave (1) sankar கார்டூன் (1) sasikala kanimozhi (1) short story (1) songs.review mayilu (1) spectrum (1) street (1) sujatha (1) tamil (1) tamil film (1) timeline apps (1) uduppi (1) vijay (1) vijaykanth (1) vikadan cartoon (1) website (1) why this kolaveri (1) why this கொலவெறி (1) அகிலேஷ் யாதவ் (1) அணு உலை (1) அனல்மின் நிலையம் (1) அனிமேஷன் (1) அனுராதா (1) அன்புமணி ராமதாஸ் (1) அமல்ராஜ் (1) அம்பேத்கார் (1) ஆக்கம் (1) ஆங்கிலப்படம் (1) ஆபாசம் (1) ஆர்யா (1) இயக்குனர் சிம்புதேவன் திருமணம் (1) இலங்கை அதிபர் ராஜபக்க்ஷே (1) இலங்கை தூதர் அம்சா (1) இலவச வெப்சைட் (1) இளவரசி (1) உடல் நலனிற்கு ஆபத்தை (1) உருமி (1) எம்.நடராசன் (1) கடலூர் (1) கதை (1) கனியும் கலாவும் காமெடி கலாட்டா (1) கர்நாடக அரசு (1) கர்நாடகா (1) கலைப்புலி தாணு (1) கவுண்டமணி (1) காசு (1) கில்மா (1) குரோர்பதி (1) கூடங்குளம் (1) கே.என்.நேரு மொட்டை (1) சங்கரராமன் (1) சங்கீதா (1) சட்டசபை (1) சட்டசபையில் பலான படம் பார்த்த அமைச்சர்கள்: (1) சதம் (1) சந்தோஷ் சிவன் (1) சமையல் சாகசம் (1) சிம்புதேவன் (1) சிறுகதை (1) சிறைத்துறைஅதிகாரி டோக்ரா (1) சில்லறை (1) சுஜாதா (1) சென்சார் (1) செல்போன் (1) ஜோக்ஸ் (1) டாக்டர் ராமதாஸ் (1) டி.ஜி.பி. நடராஜ் (1) டிம்பிள் யாதவ் (1) டிவிட்டரில் (1) தனுஷ் (1) தனுஷ் - சிம்பு (1) தமிழர் வாழ்வுரிமைக் கட்சி (1) தமிழ் (1) தமிழ் டப்பிங் படம் (1) தமிழ்மணம் (1) தயாநிதி மாறன் (1) தானே (1) தாமரை - தியாகு (1) திருச்சி சாரதாஸ் (1) திருவாடுதுறை (1) திவாகரன் கைது (1) துப்பாக்கி (1) தெரு (1) தொழில்நுட்பம் (1) தோனி (1) நக்கீரன் அட்டாக் (1) நடிகை நயன்தாரா (1) நண்பன் (1) நாய் (1) நித்தியானந்தா (1) நித்யானந்தா (1) நெப்போலியன் (1) படங்கள் (1) படம்.மேதை (1) பதிவுலகம் (1) பவர் ஸ்டார் (1) பாரதரத்னா (1) பாலா (1) பாலாஜி சக்திவேல் (1) பாலாஜி சக்திவேல் VS பவர் ஸ்டார் (1) பாலியல் (1) பாலியல் கல்வி (1) பிரசாத் (1) பிரபுதேவா (1) பிருத்விராஜ் (1) புலம்பெயர் நிகழ்வுகள் (1) புவியியல் (1) பேரறிவாளன் (1) பேரறிவாளன் +2 பாஸ் (1) பொங்கல் வாழ்த்துக்கள் (1) போலீஸ் (1) ம.தி.மு.க. vaiko (1) மதன் (1) மதன். (1) மதம் (1) மம்தா (1) மயிலு (1) மருத்துவரய்யா (1) முகமூடி (1) முதல்வர் மகாத்மா (1) முலாயம் சிங் யாதவ் (1) முல்லைபெரியார் (1) முள்ளிவாய்க்கால் (1) மே 18 (1) ரசனை (1) ரஜினிகாந்த் (1) ரஞ்சிதா (1) ராகுல் காந்தி (1) ராஜா ஐ.பி.எஸ் (1) ராமஜெயம் (1) ருத்ரபூமி (1) லிங்குசாமி (1) லெனின் கருப்பன் (1) ழான்றே - பேன்டசி (1) விகடன் (1) விஜய் (1) விபச்சாரம் (1) வேல்முருகன் (1) வைகோ (1) ஹலோ ஜெய்ஹிந்த் (1)
தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia
* Tamilwin * Seithy * Tamil Ulakam * Paristamil * Yarl * Vettri News * Viyapu * Alaikal * Vanni Online * Tamil Thai * Thinakkathir * Sankamam * Eela Nation * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * Global Tamil News * Tamil Cnn * Manithan * Google Tamil * 2Tamil * Nerudal * My Kathiravan * 4 Tamil Media * Puthinam News * Thanal * World Tamil Web * aSri Lanka lankasri lankasri lankasri lankasri

* Tamilwin * Seithy * தமிழ் Ulakam * Paristamil * Yarl * Vettri செய்தி * Viyapu * Alaikal * வன்னி ஆன்லைன் * தமிழ் தாய் * Thinakkathir * Sankamam * Eela நேஷன் * Ethiri * Varudal * Eela Dhesam * Tharavu * Puthinappalakai * Meenakam * குளோபல் தமிழ் செய்திகள் * தமிழ் CNN * Manithan * கூகிள் தமிழ் * 2Tamil * Nerudal * என் Kathiravan * 4 தமிழ் மீடியா * Puthinam செய்தி * Thanal * உலக தமிழ் வலை * aSri இலங்கையில் lankasri lankasri lankasri lankasri
tamil newspaper 2 tamil news online 3 tamil news website 4 tamil news channels 5 tamil news live 6 tamil news google 7 tamil news in english 8 tamil news channel online 9 tamil news tv yahoo tamil news 2 lankasri tamil news 3 tamil newspaper 4 puthinam tamil news 5 dinamalar daily tamil news 6 dinakaran tamil news 7 maalaimalar tamil news 8 bbc tamil news 9 sri lanka tamil news 10 virakesari tamil news tamil newspaper online 2 tamil newspaper.net 3 tamil newspaper dinamalar 4 tamil newspaper dinathanthi 5 tamil newspaper dinamani 6 tamil newspaper malaimalar 7 tamil newspaper online free 8 tamil newspapers and magazines 9 tamil newspaper dinamalar bhuvaneswari dinamalar tamil newspaper 2 dinamani tamil newspaper 3 dinathanthi tamil newspaper 4 tamil newspaper malaysia 5 sri lanka tamil newspaper 6 yahoo tamil newspaper 7 tamil newspaper sites 8 daily thanthi tamil newspaper 9 tamil newspaper and magazines 10 dinakaran tamil newspaper chennai tamil news online streaming 2 tamil news online watch 3 tamil news online in english 4 tamil news online tamilo 5 tamil news online video 6 tamil news online live tamil 7 tamil news online malaimalar 8 tamil news online dinamalar 9 tamil news online radio sun tv tamil news online 2 malaysia tamil news online 3 live tamil news online 4 watch tamil news online 5 rtm tamil news online 6 bbc tamil news online 7 free tamil news online 8 tamil news online radio 9 sun tamil news online 10 nanban tamil news online tamil news websites list 2 tamil news website address 3 tamil news websites india 4 tamil news website yahoo 5 online tamil news website 6 webulagam tamil news website 7 sri lankan tamil news websites 8 all tamil news websites 9 best tamil news website list tamil news channels online 2 tamil news channels live 3 tamil news channels list 4 tamil news channels live streaming 5 tamil news channels in india 6 tamil news channels chennai 7 tamil news channels tamil nadu 8 free tamil news channels 9 tamil tv news channels tamil news channels live 2 tamil news channels online 3 live tamil news channels tamil seithigal 2 tamil seithi vasantham 3 tamil seithi video 4 nalaya seithi tamil movie online 5 cinema seithigal tamil 6 thalaippu seithigal tamil movie 7 nalaya seithi tamil movie 8 kalaignar tv seithigal tamil vasantham tamil seithi 2 singapore tamil seithi 3 tamil seithi sri lanka 4 tamil seithi vasantham cinema seithigal tamil 2 thalaippu seithigal tamil movie 3 kalaignar tv seithigal tamil bernama tamil seithigal 2 tamil seithigal malaysia 3 malaysia tamil seithigal 4 indraya tamil seithigal 5 bernama tamil seithigal online 6 makkal osai tamil seithigal malaysia

தமிழ் செய்தித்தாள் 2 தமிழ் செய்தி ஆன்லைன் 3 தமிழ் செய்தி இணையதளம் ஆங்கிலத்தில் 4 தமிழ் செய்தி சேனல்களை 5 தமிழ் செய்தி நேரடி 6 தமிழ் செய்தி Google 7 தமிழ் செய்தி 8 தமிழ் செய்தி சேனல் ஆன்லைன் 9 தமிழ் செய்தி தொலைக்காட்சி 'to yahoo தமிழ் செய்தி 2 lankasri தமிழ் செய்தி 3 தமிழ் செய்தித்தாள் 4 puthinam தமிழ் செய்தி 5 dinamalar தினசரி தமிழ் செய்தி 6 தினகரன் தமிழ் செய்தி 7 maalaimalar தமிழ் செய்தி 8 பிபிசி தமிழ் செய்தி 9 இலங்கை தமிழ் செய்தி 10 virakesari தமிழ் செய்தி தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் 2 தமிழ் newspaper.net 3 தமிழ் செய்தித்தாள் dinamalar 4 தமிழ் செய்தித்தாள் dinathanthi 5 தமிழ் செய்தித்தாள் தினமணி 6 தமிழ் செய்தித்தாள் malaimalar 7 தமிழ் செய்தித்தாள் ஆன்லைன் இலவச 8 தமிழ் செய்தித்தாள்கள் மற்றும் இதழ்கள் 9 தமிழ் செய்தித்தாள் dinamalar bhuvaneswari dinamalar தமிழ் செய்தித்தாள் 2 தினமணி தமிழ் செய்தித்தாள் 3 dinathanthi தமிழ் செய்தித்தாள் 4 தமிழ் செய்தித்தாள் மலேஷியா 5 இலங்கை தமிழ் செய்தித்தாள் 6 'to yahoo தமிழ் செய்தித்தாள் 7 தமிழ் செய்தித்தாள் தளங்கள் 8 தினசரி thanthi தமிழ் செய்தித்தாள் 9 தமிழ் செய்தித்தாள் மற்றும் இதழ்கள் 10 தினகரன் தமிழ் செய்தித்தாள் சென்னை தமிழ் செய்தி ஆன்லைனில் 2 தமிழ் செய்தி ஆன்லைன் வாட்ச் ஆங்கிலத்தில் 3 தமிழ் செய்தி ஆன்லைன் 4 தமிழ் செய்தி ஆன்லைன் tamilo 5 தமிழ் செய்தி ஆன்லைன் வீடியோ 6 தமிழ் செய்தி ஆன்லைனில் நேரடி தமிழ் 7 தமிழ் செய்தி ஆன்லைன் malaimalar 8 தமிழ் செய்தி ஆன்லைன் dinamalar 9 தமிழ் செய்தி இணைய வானொலி சன் டி.வி. தமிழ் செய்தி இணைப்பு 2 மலேஷியா தமிழ் செய்தி ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி ஆன்லைன் 4 கைக்கடிகாரம் தமிழ் செய்தி ஆன்லைன் 5 பி.மா. உ தமிழ் செய்தி ஆன்லைன் 6 பிபிசி தமிழ் செய்தி ஆன்லைன் 7 இலவச தமிழ் செய்தி ஆன்லைன் 8 தமிழ் செய்தி இணைய வானொலி 9 சூரியன் தமிழ் செய்தி ஆன்லைன் 10 nanban தமிழ் செய்தி ஆன்லைன் தமிழ் செய்தி இணைய தளங்கள் பட்டியல் 2 தமிழ் செய்தி இணையதளம் முகவரி 3 தமிழ் செய்தி இணையத்தளங்கள் இந்தியா 4 தமிழ் செய்தி இணையதளம் 'to yahoo 5 ஆன்லைன் தமிழ் செய்தி இணையதளம் 6 webulagam தமிழ் செய்தி இணையதளம் 7 இலங்கை தமிழ் செய்தி இணையத்தளங்கள் 8 அனைத்து தமிழ் செய்தி இணையத்தளங்கள் 9 சிறந்த தமிழ் செய்தி இணையத்தளம் பட்டியல் தமிழ் செய்தி சேனல்களை ஆன்லைன் 2 தமிழ் சேனல்கள் 3 தமிழ் செய்தி சேனல்களை பட்டியலில் 4 தமிழ் செய்தி சேனல்களை இந்தியா 6 ல் 5 தமிழ் சேனல்கள் ஸ்ட்ரீமிங் வாழ வாழ தமிழ் செய்தி சேனல்கள் சென்னை 7 தமிழ் செய்தி சேனல்கள் தமிழ்நாடு 8 இலவச தமிழ் செய்தி சேனல்களை 9 தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் தமிழ் செய்தி சேனல்களை 2 தமிழ் சேனல்கள் ஆன்லைன் 3 நேரடி தமிழ் செய்தி சேனல்களை தமிழ் seithigal 2 தமிழ் seithi வசந்தம் 3 தமிழ் seithi வீடியோ 4 nalaya seithi தமிழ் திரைப்பட ஆன்லைன் 5 சினிமா seithigal தமிழ் 6 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 7 nalaya seithi தமிழ் திரைப்படம் 8 கலைஞர் டிவி seithigal தமிழ் வசந்தம் தமிழ் seithi 2 வாழ சிங்கப்பூர் தமிழ் seithi 3 தமிழ் seithi இலங்கை 4 தமிழ் seithi வசந்தம் சினிமா seithigal தமிழ் 2 தலைப்பு seithigal தமிழ் திரைப்படம் 3 கலைஞர் டிவி seithigal தமிழ் bernama தமிழ் seithigal 2 தமிழ் seithigal மலேஷியா 3 மலேஷியா தமிழ் seithigal 4 indraya தமிழ் seithigal 5 bernama தமிழ் seithigal ஆன்லைன் 6 மக்கள் ஓசை தமிழ் seithigal மலேஷியா